Sports

m20

900 கோல்களை எட்டினார் மெஸ்ஸி

நஷ்வில்லே அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற கொன்ககாப் சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் இன்டர் மியாமி அணிக்காக கோல் புகுத்திய லியோனல் மெஸ்ஸி கால்பந்து வரலாற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அடுத்து 900 கோல்களைப் பெற்ற முதல் வீரராக சாதனை படைத்துள்ளார். பிளோரிடாவில் நடைபெற்ற போட்டியில் மெஸ்ஸி ஏழாவது நிமிடத்திலேயே கோல் புகுத்தியதோடு இரண்டாவது பாதியில் நஷ்வில்லே பதில் கோல் திருப்பி போட்டியை சமன் செய்தது. 38 வயது ஆர்ஜன்டீன வீரரான மெஸ்ஸி தனது 1142 போட்டியிலேயே 900 […]

900 கோல்களை எட்டினார் மெஸ்ஸி Read More »

m19

ஈரான் போட்டிகளை அமெரிக்காவில் இருந்து மாற்றுவதற்கு பிஃபா மறுப்பு

2026 பிஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் போட்டிகளை அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவுக்கு மாற்ற விடுத்த கோரிக்கையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) நிராகரித்துள்ளது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படியே போட்டிகள் நடைபெறும் என்று அது தெரிவித்துள்ளது. ‘2026 பிஃபா உலகக் கிண்ணத்திற்கு திட்டமிடும்போது பிஃபா ஈரான் உட்பட பங்கேற்கும் அனைத்து நாடுகளுடனும் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தது’ என்று அது வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘2025 டிசம்பர் 6 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட போட்டி அட்டவணைக்கு அமைய அனைத்து

ஈரான் போட்டிகளை அமெரிக்காவில் இருந்து மாற்றுவதற்கு பிஃபா மறுப்பு Read More »

m18

ஐ.பி.எல். நடத்த சின்னசாமி அரங்கிற்கு அரசு அங்கீகாரம்

எதிர்வரும் இந்திய பிரீமியர் லீக் தொடருக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தை பயன்படுத்த அரசு நியமித்த நியுணர் குழு ஒன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி நடைபெறும் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசஸ் ஹைத்ராமாத் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆரம்பப் போட்டியை இங்கு நடத்த அனுமதி கிடைத்துள்ளது. இதன்படி ஐ.பி.எல். தொடரின் நடப்புச் சம்பியன் அணி முதல் கட்ட பிளே ஓப் போட்டி மற்றும் இறுதிப் போட்டியை நடத்தும் வழக்கத்தை தொடர

ஐ.பி.எல். நடத்த சின்னசாமி அரங்கிற்கு அரசு அங்கீகாரம் Read More »

m17

சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தார் சப்ராஸ்

பாகிஸ்தான் முன்னாள் அணித் தலைவர் சப்ராஸ் அஹமட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். சப்ராஸ் தலைமையிலான பாக். அணி 2017 சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றதோடு 2006 இல் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தையும் அவரின் தலைமையிலான பாகிஸ்தான் அணியே வென்றது. விக்கெட் காப்பாளரான சப்ராஸ் 2007 தொடக்கம் 2023 வரை 54 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 61 டி20 சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக ஆடியுள்ளார். இம்ரான் கானுக்கு பின்னர் பாகிஸ்தான் அணிக்காக

சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தார் சப்ராஸ் Read More »

m16

நமன் விருதுகள் 2026: புதுடெல்லியில் ஜொலித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நடத்தும் வருடாந்த விருது வழங்கும் விழாவான ‘நமன் விருதுகள்’ இன்று புதுடெல்லியில் நடைபெற்றது. கடந்த ஆண்டில் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர், வீராங்கனைகளை கௌரவிக்கும் விதமாக இந்த விழா அமைந்தது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் மற்றும் தற்போதைய நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டு விழாவிற்கு மெருகூட்டினர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் என்ற ரீதியில் அவர் கலந்து கொண்டார். T20 கிரிக்கெட்டின் அதிரடி

நமன் விருதுகள் 2026: புதுடெல்லியில் ஜொலித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்! Read More »

m13

அமெரிக்காவில் நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணத்தில் ஈரான் இல்லை

2026 பிஃபா உலகக் கிண்ணப் போட்டியில் ஈரான் பங்கேற்கும் நிலையில் இல்லை என்று அந்நாட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அஹமது தொன்யாமாலி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் எதிர்வரும் ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணத்தில் ஈரான் அணி ஆரம்ப சுற்றில் ஜி குழுவில் மூன்று போட்டிகளில் ஆடவுள்ளது. இதன்படி அந்த அணி நியூசிலாந்து மற்றும் பெல்ஜியத்தை லொஸ் ஏஞ்சல்ஸில் முறையே ஜூன் 15 மற்றும் 21 ஆம் திகதிகளில்

அமெரிக்காவில் நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணத்தில் ஈரான் இல்லை Read More »

m12

டி20 தரவரிசையில் இலங்கை வீராங்கனைகள் முன்னேற்றம்

மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடரில் சோபித்த இலங்கை வீராங்கனைகள் டி20 தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை மகளிர்கள் அங்கு ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் இரண்டையும் கைப்பற்றினர். இதில் சென் ஜோர்ஜஸில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் ஆட்டமிழக்காது அரைச் சதம் பெற்று இலங்கை அணி தொடரை வெல்ல உதவிய இடது கை வீராங்கனை ஹசினி பெரேரா டி20 துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் அதிரடியாக 15 இடங்கள்

டி20 தரவரிசையில் இலங்கை வீராங்கனைகள் முன்னேற்றம் Read More »

m11

டி20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்தியாவுக்கு 131 கோடி ரூபா பரிசு

டி20 உலகக் கிண்ணத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்ற இந்திய அணிக்கு அந்நாட்டு நாணயப்படி 131 கோடி ரூபா பணப்பரிசை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. ‘மீண்டும் ஒருமுறை வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வீரர்கள், உதவிப் பணியாளர்கள் மற்றும் தேர்வாளர்களுக்கு சபை வாழ்த்துத் தெரிவிப்பதோடு எதிர்காலத்தில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற பாராட்டுகளைத் தெரித்துக்கொள்கிறது’ என்று இந்திய சபை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அஹமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ஓட்டங்களால்

டி20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்தியாவுக்கு 131 கோடி ரூபா பரிசு Read More »

dailynews650 35

இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேர்ஸ்டன் நியமனம்

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ​ெகரி கேர்ஸ்டன் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி தொடக்கம் அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. தென்னாபிரிக்க அணிக்காக 101 டெஸ்ட் மற்றும் 185 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்கும் 58 வயதான கேர்ஸ்டன் 2008 தொடக்கம் 2011 வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் 2011 தொடக்கம் 2013 வரை தென்னாபிரிக்க அணியில் தலைமை பயிற்சியாளராகவும்

இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேர்ஸ்டன் நியமனம் Read More »

ma10

5 பந்தில் 5 விக்கெட் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் சாதனை

254 ஆண்டு கால முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக நியூசிலாந்தின் பிரெட் ரண்டல் வரலாறு படைத்துள்ளார். நியூசிலாந்தின் பிளன்கட் கேடயத்திற்காக சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ஸின் வேகப்பந்து வீச்சாளராக ரண்டல், நோர்த் டிஸ்ட்ரிக்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலேயே இந்த சாதனையை படைத்தார். முதல் இன்னிங்ஸில் தனது இரண்டாவது ஓவரின் கடைசி பந்திலும் தனது மூன்றாவது ஓவரின் முதல் நான்கு பந்துகளிலுமே அவர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரண்டல் தனது 4 ஓவர்களில்

5 பந்தில் 5 விக்கெட் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் சாதனை Read More »