Futured

mar 1

ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலி; 5 பேர் படுகாயம்!

ஈரானை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மூன்று அமெரிக்கப் படைவீரர்கள் உயிரிழந்துள்ளதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அமெரிக்கத் தரப்பில் பதிவான முதலாவது உயிரிழப்புகள் இவை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையின் போது மேலும் ஐந்து படைவீரர்கள் பலத்த காயமடைந்துள்ளதாக அந்நாட்டு இராணுவ அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. உயிரிழந்த வீரர்களின் விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. அமெரிக்க இராணுவ மரபுகளின்படி, உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டு 24 மணிநேரம் […]

ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலி; 5 பேர் படுகாயம்! Read More »

ஆசிய பிராந்திய கடன் முகாமைத்துவ மாநாடு; இலங்கையில் நடத்த முடிவு

ஆசிய பிராந்திய கடன் முகாமைத்துவ மாநாட்டை (2026) நாட்டில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடன் முகாமைத்துவ நடவடிக்கைகள், சவால்கள் மற்றும் புதிய அணுகுமுறைகள் பற்றி கவனம் செலுத்தவுள்ள இம்மாநாடு,நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது.இதில்,உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கிகள்,கடன் முகாமைத்துவ அலுவலகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்தி பலர் பங்கேற்பர்.அரச கடன்

ஆசிய பிராந்திய கடன் முகாமைத்துவ மாநாடு; இலங்கையில் நடத்த முடிவு Read More »

dailynews650 58

பேரிடர் நிவாரணமாக இலங்கைக்கு கடன் சலுகை?

நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் உட்பட 120 முன்னணி உலகப் பொருளாதார நிபுணர்கள் குழு, இலங்கையின் கடன் செலுத்தல்களை இடைநிறுத்தி, கடன் நிலைத்தன்மையை மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டுமென வரவேற்கத்தக்க மற்றும் சரியான நேரத்திலான அழைப்பினை விடுத்துள்ளனர். அவர்களின் தலையீடு, அடிக்கடி வாய்மொழியாக ஒப்புக்கொள்ளப்படும் ஆனால் நடைமுறையில் எதிர்க்கப்படும் ஒரு கொள்கையை வலியுறுத்துகிறது. தேசிய பேரிடர் நேரங்களில், கடன் நிவாரணமே பேரிடர் நிவாரணமாக மாறுகிறது. இலங்கைப் பொருளாதாரத்துக்கு இத்தகைய அணுகுமுறை நிச்சயமாக ஒரு ஆசுவாசத்தை வழங்கும்

பேரிடர் நிவாரணமாக இலங்கைக்கு கடன் சலுகை? Read More »

நேட்டோவில் உறுப்பினராகும் கோரிக்கையை கைவிட தயார்

நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைனை இணைக்க வேண்டும் என்ற தங்கள் நீண்டகால கோரிக்கையை கைவிட தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அங்கம் வகிக்கும் இராணுவ ஒத்துழைப்பு அமைப்பான நேட்டோவில் இணைய முயன்றது. இதற்கு, அண்டை நாடான ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா இடையே போர் மூண்டதோடு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா

நேட்டோவில் உறுப்பினராகும் கோரிக்கையை கைவிட தயார் Read More »

1000239538 768x512

முதன் முறையாக டால்பின் சரணாலயத்தை அமைக்கும் இத்தாலி

கடலில் வாழும் டால்பின்கள் மனிதனின் சிறந்த நண்பனாக அறியப்படுகிறது. ஆனால் கடல் மாசுபாடு காரணமாக டால்பின்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல கடல் பூங்காக்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. இதனால் டால்பின்களின் வாழிடங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.இதனையடுத்து மத்திய தரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவிலேயே முதன்முறையாக டால்பின்களுக்கான சரணாலயத்தை அமைக்க இத்தாலி அரசாங்கம் முடிவு செய்தது. இதற்காக சான் பாலோ தீவு அருகே டரோன்டோ வளைகுடாவில் கடந்த 2023-ம் ஆண்டு அரசாங்கம் அனுமதி வழங்கியது.இயற்கையான

முதன் முறையாக டால்பின் சரணாலயத்தை அமைக்கும் இத்தாலி Read More »

weather forecast nov 24 2025 1170x737

நாட்டைச் சூழவுள்ள குறைந்த அழுத்தம் தாழமுக்கமாக மாற வாய்ப்பு

– தென்கிழக்கு வங்காள விரிகுடா குறித்து எச்சரிக்கை– பெரும்பாலான இடங்களில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை அல்லது இடியுடன் மழை இலங்கையைச் சூழவுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளையதினம் (25) ஒரு தாழமுக்கமாக மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எனவே நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இன்றையதினம் (23) நாட்டின் வடக்கு, வடமத்திய,

நாட்டைச் சூழவுள்ள குறைந்த அழுத்தம் தாழமுக்கமாக மாற வாய்ப்பு Read More »

weather

நாட்டைச் சூழவுள்ள குறைந்த அழுத்தம் தாழமுக்கமாக மாற வாய்ப்பு

– தென்கிழக்கு வங்காள விரிகுடா குறித்து எச்சரிக்கை– பெரும்பாலான இடங்களில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை அல்லது இடியுடன் மழை இலங்கையைச் சூழவுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளையதினம் (25) ஒரு தாழமுக்கமாக மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எனவே நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இன்றையதினம் (23) நாட்டின் வடக்கு, வடமத்திய,

நாட்டைச் சூழவுள்ள குறைந்த அழுத்தம் தாழமுக்கமாக மாற வாய்ப்பு Read More »

img 20251113 wa0030

மன்னாரில் மத சுதந்திர செயமர்வு.

NCEASL (National Christian Evangelical Alliance of Sri Lanka) நிறுவன அனுசரனையுடன் கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் (RDF) மன்னார் கிளைக்காரியாலயத்தினால் ஏற்பாடு செய்த மதம் அல்லது மத, நம்பிக்கை, மத சுதந்திரம் எனும் தலைப்பிலான செயலமர்வு அண்மையில் மன்னார் கிராம அபிவிருத்தி நிறுவன பயிற்சி வளாகத்தில் இடம்பெற்றது. கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் ஏ.ஆர்.ஏ.றமீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்த செயலமர்வில் மன்னார் கிளைக்காரியால உத்தியோத்தர்களின் ஒழுங்கமைப்புடன் வளவாளர்களான மாதங்கி உதயபாலன், அப்கர் ஹஸன் ஆகியோர்

மன்னாரில் மத சுதந்திர செயமர்வு. Read More »

img 20251107 wa0005

அல் மார்ஜனுக்குஅமான வங்கியின் அன்பளிப்பு

சம்மாந்துறை அல்மார்ஜன் பாடசாலைக்கு Traffic safety cone, No Parking Board ஆகியன அமானா வங்கி சம்மாந்துறைக் கிளையினால் அண்மையில் வழங்கப்பட்டது. பாடசாலைக்கு நீண்ட நாள் தேவையாக இருந்த குறித்த உபகரணங்கள் அதிபர் எம்.ஐ. மாஹிரின் வேண்டுகோளுக்கிணங்க வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வங்கி முகாமையாளர் M.Y. சிராஜ் முகம்மட், நிறைவேற்று உறுப்பினர் K.L. மனாஸ் ஆகியோர் வருகை தந்து பொருட்களை அதிபரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதன்போது அதிபருடன் உதவி அதிபர் A.M.ஜவாஹிர், சம்மாந்துறை போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினர்,

அல் மார்ஜனுக்குஅமான வங்கியின் அன்பளிப்பு Read More »

whatsapp image 2025 11 05 at 17.04.20 020e00fc

திடீர் மாரடைப்பால் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு!

சேர்பியாவில் கால்பந்து போட்டி ஒன்றுக்கு நடுவே, அணி நிர்வாகி ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் 44 வயதுடைய ம்லடன் சிசோவிச் (Mladen Cizovic) என்பரே உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராட்னிக்கி-1923 (Radnicki-1923) அணிக்கும், மிலடோஸ்ட் (Mladost) அணிக்கும் இடையிலான போட்டி கடந்த நேற்று மாலை நடைபெற்றது. போட்டி ஆரம்பமாகி 22ஆவது நிமிடத்தில், சிசோவிச் விளையாட்டுத் திடலுக்கு அருகில் திடீரெனச் சரிந்து விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக

திடீர் மாரடைப்பால் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு! Read More »