ஆசிய பிராந்திய கடன் முகாமைத்துவ மாநாடு; இலங்கையில் நடத்த முடிவு

ஆசிய பிராந்திய கடன் முகாமைத்துவ மாநாட்டை (2026) நாட்டில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடன் முகாமைத்துவ நடவடிக்கைகள், சவால்கள் மற்றும் புதிய அணுகுமுறைகள் பற்றி கவனம் செலுத்தவுள்ள இம்மாநாடு,நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது.இதில்,உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கிகள்,கடன் முகாமைத்துவ அலுவலகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்தி பலர் பங்கேற்பர்.அரச கடன் முகாமைத்துவ துறையில் சர்வதேச நன்மதிப்பை அதிகரித்தல்,இருதரப்பு மற்றும் பிராந்தியத் தொடர்புகளைப் பலப்படுத்தல்,கடன் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கான அறிவுப் பரிமாற்றம் மற்றும் இயலுமை விருத்தி போன்ற அனுகூலங்கள் குறித்தும் இங்கு பரிசீலிக்கப்படவுள்ளது .

இதற்கமைய,2026 ஆம் ஆண்டின் ஆசிய பிராந்திய அரச கடன் முகாமைத்துவ மாநாட்டை 2026 மே மாத இறுதியில், நடாத்துவதற்கான இணை அனுசரணையை பொறுப்பேற்பதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.ஆசிய அபிவிருத்தி வங்கியால் வருடாந்தம் நடாத்தப்படும் ஆசிய பிராந்திய அரச கடன் முகாமைத்துவ மாநாட்டின் மூலம் வங்கியின் உறுப்பு நாடுகளின் கடன் முகாமையாளர்களுக்கு, அரச கடன் முகாமைத்துவத் துறையில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், சவால்களைக் கலந்துரையாடுவதற்கும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், சவால்களை எதிர்கொள்ளவும், பொதுக் கடன் முகாமைத்துவத்தில் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் வாய்ப்பு உண்டு. 2026 ஆம் ஆண்டின் ஆசிய பிராந்திய அரச கடன் முகாமைத்துவ மாநாடு.