சம்மாந்துறை அல்மார்ஜன் பாடசாலைக்கு Traffic safety cone, No Parking Board ஆகியன அமானா வங்கி சம்மாந்துறைக் கிளையினால் அண்மையில் வழங்கப்பட்டது.
பாடசாலைக்கு நீண்ட நாள் தேவையாக இருந்த குறித்த உபகரணங்கள் அதிபர் எம்.ஐ. மாஹிரின் வேண்டுகோளுக்கிணங்க வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வங்கி முகாமையாளர் M.Y. சிராஜ் முகம்மட், நிறைவேற்று உறுப்பினர் K.L. மனாஸ் ஆகியோர் வருகை தந்து பொருட்களை அதிபரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இதன்போது அதிபருடன் உதவி அதிபர் A.M.ஜவாஹிர், சம்மாந்துறை போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினர், பாடசாலையின் போக்குவரத்துப் பிரிவு ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து சிறப்பித்தனர்.





