சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தார் சப்ராஸ்

m17

பாகிஸ்தான் முன்னாள் அணித் தலைவர் சப்ராஸ் அஹமட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

சப்ராஸ் தலைமையிலான பாக். அணி 2017 சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றதோடு 2006 இல் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தையும் அவரின் தலைமையிலான பாகிஸ்தான் அணியே வென்றது. விக்கெட் காப்பாளரான சப்ராஸ் 2007 தொடக்கம் 2023 வரை 54 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 61 டி20 சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக ஆடியுள்ளார்.

இம்ரான் கானுக்கு பின்னர் பாகிஸ்தான் அணிக்காக ஐ.சி.சி. ஒருநாள் கிண்ணம் ஒன்றை வென்று கொடுத்த முதல் தலைவராகவும் அவர் உள்ளார். 13 டெஸ்ட், 50 ஒருநாள் மற்றும் 37 டி20 சர்வதேச போட்டிகள் என்ற பாகிஸ்தான் அணி 100 போட்டிகளில் தலைமை வகித்த அவர் 2019 இல் தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அணியில் இடம்பெறவும் தவறினார்.

கடைசியாக அவர் 2023 டிசம்பரில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பேர்த் டெஸ்ட் போட்டியில் ஆடியிருந்தார். அண்மையில் அவர் பாகிஸ்தான் அணியின் தேர்வுக் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.