ஐ.பி.எல். நடத்த சின்னசாமி அரங்கிற்கு அரசு அங்கீகாரம்

m18

எதிர்வரும் இந்திய பிரீமியர் லீக் தொடருக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தை பயன்படுத்த அரசு நியமித்த நியுணர் குழு ஒன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி நடைபெறும் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசஸ் ஹைத்ராமாத் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆரம்பப் போட்டியை இங்கு நடத்த அனுமதி கிடைத்துள்ளது. இதன்படி ஐ.பி.எல். தொடரின் நடப்புச் சம்பியன் அணி முதல் கட்ட பிளே ஓப் போட்டி மற்றும் இறுதிப் போட்டியை நடத்தும் வழக்கத்தை தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெங்களூர் அணி ஐ.பி.எல். கிண்ணத்தை வென்ற கொண்டாட்டத்தின்போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து சின்னசாமி அரங்கில் போட்டிகளை நடத்துவதில் தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த மைதானத்தில் புதிதாக நுழைவு வாயில்கள், வெளியேறும் வழிகள் மற்றும் அவசர வெளியேற்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மைதானத்தின் தயார்நிலை குறித்து நிபுணர் குழு அளித்த அறிக்கையை பரிசீலித்த பின் கர்நாடக அரசு இந்த மைதானத்திற்கு அனுமதியை வழங்கியுள்ளது.

பெங்களூர் அணி சின்னசாமி அரங்கில் 5 லீக் போட்டிகளில் ஆடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.