டி20 தரவரிசையில் இலங்கை வீராங்கனைகள் முன்னேற்றம்

m12

மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடரில் சோபித்த இலங்கை வீராங்கனைகள் டி20 தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை மகளிர்கள் அங்கு ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் இரண்டையும் கைப்பற்றினர். இதில் சென் ஜோர்ஜஸில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் ஆட்டமிழக்காது அரைச் சதம் பெற்று இலங்கை அணி தொடரை வெல்ல உதவிய இடது கை வீராங்கனை ஹசினி பெரேரா டி20 துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் அதிரடியாக 15 இடங்கள் ஏற்றம் கண்டுள்ளார். இதன்மூலம் அவர் 28ஆவது இடத்திற்கு முன்னேற முடிந்துள்ளது. அதேபோன்று இறுதி டி20 போட்டியில் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களைப் பெற்ற இடது கை வீராங்கனை இமேஷா துலானியும் தரவரிசையில் 17 இடங்கள் முன்னேறி 72 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

டி20 மகளிர் பந்துவீச்சாளர் தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீராங்கனை கவிஷா டில்ஹாரி மூன்று இடங்கள் ஏற்றம் கண்டு 21 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். துடுப்பாட்டத்திலும் சோபித்த அவர் டி20 சகலதுறை வீராங்கனைகள் வரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி 21 ஆவது இடத்தைப் பிடித்தார்.