இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நடத்தும் வருடாந்த விருது வழங்கும் விழாவான ‘நமன் விருதுகள்’ இன்று புதுடெல்லியில் நடைபெற்றது. கடந்த ஆண்டில் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர், வீராங்கனைகளை கௌரவிக்கும் விதமாக இந்த விழா அமைந்தது.
இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் மற்றும் தற்போதைய நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டு விழாவிற்கு மெருகூட்டினர்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் என்ற ரீதியில் அவர் கலந்து கொண்டார்.
T20 கிரிக்கெட்டின் அதிரடி மன்னன் சூர்யகுமார் தனது மனைவியுடன் வருகை தந்தார்.
ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் அருந்ததி ரெட்டி உள்ளிட்ட இந்திய மகளிர் அணியின் முன்னணி வீராங்கனைகள் விழாவில் பங்கேற்றனர்.
இந்த விழாவில் சிறந்த சர்வதேச அறிமுக வீரர், சிறந்த உள்நாட்டு கிரிக்கெட் வீரர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்திய கிரிக்கெட் வீரர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.


