Sports

jan23

இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் டி20 உலகக் கிண்ணம்…

இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் டி20 உலகக் கிண்ணம் நேற்று பாராசூட் மூலம் கொழும்பு ஆர். பிரேமதாச மைதனத்திற்கு எடுத்துவரப்பட்டபோது பிடிக்கப்பட்ட படங்களை காணலாம். இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் நேற்று நடந்த முதலாவது ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்கு இடையிலேயே உலகக் கிண்ணம் அங்கு கொண்டுவரப்பட்டது.

இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் டி20 உலகக் கிண்ணம்… Read More »

janu22

இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்: கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடு

– வீதிகள் மூடப்படாத போதிலும் நெரிசலை தவிர்க்க உதவுமாறு வேண்டுகோள் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான போட்டிகளை முன்னிட்டு, கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து முகாமைத்துவ திட்டமொன்றைப் பொலிஸார் அறிவித்துள்ளனர். பின்வரும் திகதிகளில் கொழும்பில் போட்டிகள் நடைபெறவுள்ளன:• 2026 ஜனவரி 22 (இன்று)• 2026 ஜனவரி 24• 2026 ஜனவரி 27 போக்குவரத்து அறிவுறுத்தல்கள்மைதானத்தைச் சூழவுள்ள வீதிகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக்

இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்: கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடு Read More »

jan22

விராட் கொஹ்லியை பின்தள்ளி மிட்சல் முதலிடத்திற்கு ஏற்றம்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் டரில் மிட்சல் சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் விராட் கொஹ்லியை பின்தள்ளி முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார். மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் மிட்சல் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் ஆட்டமிழக்காது 131 மற்றும் 137 ஓட்டங்களை பெற்றதோடு இந்தத் தொடரில் அவர் தனது ஓட்ட சராசரியை 100இற்கு மேல் வைத்திருந்தார். இதன்மூலம் இந்திய

விராட் கொஹ்லியை பின்தள்ளி மிட்சல் முதலிடத்திற்கு ஏற்றம் Read More »

janu21

டி20 உலகக் கிண்ண உலா இலங்கையில் இன்று ஆரம்பம்

இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் ஐ.சி.சி. டி20 உலகக் கிண்ணம் இன்று (21) தொடக்கம் எதிர்வரும் சனிக்கிழமை (24) வரை நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இந்த உலகக் கிண்ண உலாவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். உலகக் கிண்ணம் இலங்கையில் இருக்கும் காலத்தில் நாடு முழுவதும் பல முக்கிய இடங்களில் வைக்கப்படவுள்ளதோடு அதனை பார்வையிடுவதற்கு ரசிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. இதில் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச

டி20 உலகக் கிண்ண உலா இலங்கையில் இன்று ஆரம்பம் Read More »

jan21

பங்களாதேஷ் அணிக்கு பதில் பங்கேற்க ஸ்கொட்லாந்து தயார்

டி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணி பங்கேற்பது தொடர்பில் முடிவு எடுப்பதற்கு ஐ.சி.சி. வழங்கிய கெடு இன்றுடன் (21) முடிவுக்கு வரும் நிலையில் பங்களாதேஷ் பங்கேற்காத பட்சத்தில் அதற்கு மாற்றாக ஸ்கொட்லாந்தை இணைப்பது தொடர்பில் ஐ.சி.சியினால் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்கு தயாராகவே இருப்பதாக ஸ்கொட்லாந்து குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பைக் காரணம் காட்டியே பங்களாதேஷ் அணி இந்தியாவில் ஆட மறுத்து வருகிறது. எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகும் டி20

பங்களாதேஷ் அணிக்கு பதில் பங்கேற்க ஸ்கொட்லாந்து தயார் Read More »

janu20

டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்க பங்களாதேஷுக்கு நாளைவரை கெடு

டி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் பங்கேற்பது குறித்து நாளை (21) இறுதி முடிவை எடுப்பதற்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. டாக்காவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு இந்தக் காலக்கெடுவை விதித்திருப்பதாக தெரியவருகிறது. இந்த சந்திப்பில் உலகக் கிண்ணத்தில் ஆட பங்களாதேஷ் விருப்பத்தை வெளியிட்டபோதும் இந்தியாவுக்கு வெளியில் தனது போட்டிகளை நடத்த மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது. இதனால் போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கையே இதற்கு மாற்றாக இருக்கும் ஒரே மற்றொரு

டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்க பங்களாதேஷுக்கு நாளைவரை கெடு Read More »

jan20

நியூசிலாந்துக்கு இந்தியாவில் முதலாவது தொடர் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் சர்வதேச போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் முதல் முறையாக இரு தரப்பு ஒருநாள் தொடர் ஒன்றை வென்றது. இந்தோரில் நேற்று முன்தினம் (18) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணிக்கு டரில் மிட்சல் (137) மற்றும் கிளன் பிலிப்ஸ் (106) ஆகியோர் சதம் பெற்றதோடு இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 219 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 50

நியூசிலாந்துக்கு இந்தியாவில் முதலாவது தொடர் வெற்றி Read More »

jan19

37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் சாதனை படைத்த நியூஸிலாந்து

இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நேற்று (18) நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியது. இந்திய மண்ணில் சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் இடையிலான 3

37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் சாதனை படைத்த நியூஸிலாந்து Read More »

janu19

Lanka Ride; Day 03: இறுதி நாள் கோலாகல ஆரம்பம்

– வீரர்கள் லேக் ஹவுஸ், காலி முகத்திடல் ஊடாக சுதந்திர சதுக்கத்தை நோக்கி Lanka Ride (‘லங்கா ரைட்) சைக்கிள் ஓட்டப் போட்டியின் இறுதி தின போட்டி இன்று (18) முற்பகல் ஆரம்பமானது. இப்போட்டியை வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் மேம்பட்ட விளையாட்டு கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்போட்டித் தொடருக்கு லேக் ஹவுஸ் நிறுவனம் அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடக அனுசரணை

Lanka Ride; Day 03: இறுதி நாள் கோலாகல ஆரம்பம் Read More »

janu16

‘லங்கா ரைட்’ சைக்கிள் சவாரி போட்டி லேக் ஹவுஸ் முன்னால் இன்று ஆரம்பம்

-26 அணிகளுடன் மூன்று நாட்களில் 450 கிலோமீற்றர்கள் போட்டி இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் லேக் ஹவுஸ் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘லங்கா ரைட்’ நாடளாவிய ரீதியிலான சைக்கிள் சவாரி கொழும்பு, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்னால் இன்று (16) ஆரம்பமாகவுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி கண்டி ஊடாக அநுராதபுரம் வரை சென்று அங்கிருந்து மீண்டும் கொழும்பு வரை இடம்பெறவுள்ளது. இந்தப்

‘லங்கா ரைட்’ சைக்கிள் சவாரி போட்டி லேக் ஹவுஸ் முன்னால் இன்று ஆரம்பம் Read More »