இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் ஐ.சி.சி. டி20 உலகக் கிண்ணம் இன்று (21) தொடக்கம் எதிர்வரும் சனிக்கிழமை (24) வரை நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இந்த உலகக் கிண்ண உலாவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
உலகக் கிண்ணம் இலங்கையில் இருக்கும் காலத்தில் நாடு முழுவதும் பல முக்கிய இடங்களில் வைக்கப்படவுள்ளதோடு அதனை பார்வையிடுவதற்கு ரசிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.
இதில் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச போட்டியின்போதும் உலகக் கிண்ணம் காட்சிக்கு வைக்கப்படுவதோடு போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு அதனை பார்வையிட வாய்ப்பு அளிக்கப்படும்.
கொழும்பு தவிர, வெள்ளி நிறத்திலான அந்த உலகக் கிண்ணம் கண்டி, தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணம் உட்பட பிரதான நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகும் டி20 உலகக் கிண்ணத்தை இந்தியாவுடன் இலங்கையும் இணைந்தே நடத்தவுள்ளது.
10 ஆவது டி20 உலகக் கிண்ணத்திற்கான கிண்ண உலா கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டதோடு இந்த உலா கட்டார், ஓமான், நோபளம் பஹ்ரை மற்றும் மொகோலியா உட்பட ஆசியா எங்கும் பயணித்து இறுதில் உலகக் கிண்ணத்திற்காக கொண்டுவரப்படவுள்ளது. ஒரு மாதம் நீடிக்கும் டி20 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் மொத்தமாக 55 போட்டிகள் நடைபெறவுள்ளன.


