Lanka Ride; Day 03: இறுதி நாள் கோலாகல ஆரம்பம்

janu19

– வீரர்கள் லேக் ஹவுஸ், காலி முகத்திடல் ஊடாக சுதந்திர சதுக்கத்தை நோக்கி

Lanka Ride (‘லங்கா ரைட்) சைக்கிள் ஓட்டப் போட்டியின் இறுதி தின போட்டி இன்று (18) முற்பகல் ஆரம்பமானது.

இப்போட்டியை வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் மேம்பட்ட விளையாட்டு கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்போட்டித் தொடருக்கு லேக் ஹவுஸ் நிறுவனம் அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடக அனுசரணை வழங்குகின்றது.

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகேவின் வழிகாட்டலின் கீழ், விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 நாட்களைக் கொண்ட இப்போட்டித் தொடர் நேற்றுமுன்தினம் (16) லேக் ஹவுஸ் முன்பாக ஆரம்பமாகி முதல் நாள் கண்டியின், கன்னொருவவை  அடைந்ததோடு, இரண்டாம் நாளான நேற்று (17) கன்னொருவவில் இருந்து அநுராதபுரத்தை வந்தடைந்தது.

இப்போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று (18) அநுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் ஆரம்பமானது.

இதில் வீரர்கள் சுமார் 208.6 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து கொழும்பைச் சென்றடையவுள்ளனர்.

பயணப் பாதை:
• ஒதப்புவ சந்தி, வில்பத்து சந்தி, தப்போவ குளம்.
• புத்தளம் இராணுவ முகாம் சுற்றுவட்டம் ஊடாக சிலாபம் வீதி.
• மாதரங்குளிய, பங்கதெனிய, சிலாபம், மாரவில, தோப்புவ சந்தி.
• பெரியமுல்ல, கட்டுநாயக்க (17ஆம் மைல்கல்), ஜா-எல, வத்தளை.
• நவலோக சுற்றுவட்டம், ஜப்பான் பாலம், இங்குருகடே சந்தி, ஆமர் வீதி.
• பஞ்சிகாவத்தை, மருதானை மேம்பாலம் ஊடாக லேக் ஹவுஸ் நிறுவனம்.
• ஜனாதிபதி செயலகம், காலி முகத்திடல் (Galle Face), லிபர்ட்டி சுற்றுவட்டம், பொது நூலகம்.
• முடிவு: சுதந்திர சதுக்கம் (Independence Square).