Sports

jan16

இளையோர் உலகக் கிண்ணம்: இலங்கை நாளை களத்தில்

சிம்பாப்வேயில் நேற்று (15) ஆரம்பமான 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் இலங்கை இளையோர் அணி நாளை (17) தனது முதல் போட்டியில் ஜப்பான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. வின்டெக்கில் நடைபெறும் இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும். 16 அணிகளுடன் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் இலங்கை இளையோர் அணி ஆரம்ப சுற்றில் ஏ குழுவில் இடம்பெற்றிருப்பதோடு இந்தக் குழுவில் ஜப்பானுடன் அவுஸ்திரேலியா, அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. விமத் […]

இளையோர் உலகக் கிண்ணம்: இலங்கை நாளை களத்தில் Read More »

விமானப் படை, பைக்–பி அணிகளும் கடும் போட்டி

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் அச்சு ஊடகம் மற்றும் லேக் ஹவுஸ் டிஜிட்டல் ஊடக அனுசரணையில், விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் கமகேவின் ஆலோசனைக்கு அமைய, விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் சைக்கிளோட்ட நடுவர்கள் சங்கம் இணைந்து நடத்தும் ‘லங்கா ரைட்’ சைக்கிள் சவாரி நாளை (16) காலை 9 மணிக்கு கொழும்பு, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்னால் ஆரம்பமாகவுள்ளது. ‘லங்கா ரை’ சைக்கிளோட்டப் போட்டியின் முதல் தினத்தில் கண்டி சென்று, இரண்டாவது தினத்தில்

விமானப் படை, பைக்–பி அணிகளும் கடும் போட்டி Read More »

jan15

இலங்கை மகளிர், ஆடவரின் முதல் போட்டிகள் சமநிலை

தாய்லாந்தில் நடைபெற்று வரும் தெற்காசிய கால்பந்து சம்மேளன (சாஃப்) புட்சால் சம்பியன்சிப் போட்டியில் இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தமது முதல் போட்டிகளை சமநிலை செய்துள்ளன. முதல் முறையாக நடத்தப்படும் இந்தத் தொடரில் இலங்கை ஆடவர் அணி நேற்று பூட்டான் அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை ஆடவர் அணி 3–3 என்ற கோல் கணக்கில் போட்டியை சமன் செய்தது. அடுத்து இலங்கை ஆடவர் அணி நாளை (16) நேபாளத்தை எதிர்கொள்ளவுள்ளது. மறபுறம்

இலங்கை மகளிர், ஆடவரின் முதல் போட்டிகள் சமநிலை Read More »

janua14

தேசிய ஒலிம்பிக் குழுவின் பொது குழுவை நடத்த கெடு

இந்த ஆண்டு ஏப்ரல் மாத நிறைவுக்குள் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தை நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கு இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் ஆசிய ஒலிம்பிக் கௌன்சில் கெடு விதித்துள்ளது. இதே காலப்பிரிவுக்குள் தடயவியல் கணக்காய்வை பூர்த்தி செய்வதற்கும் சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவுறுத்தியுள்ளது. இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு நிறைவேற்று சபையின் பதவிக் காலம் கடந்த 2025 டிசம்பர் 27 ஆம் திகதி நிறைவடைந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய ஒலிம்பிக் குழுவின் பொது குழுவை நடத்த கெடு Read More »

janu14

பங்களாதேஷ் அணிக்கு இந்தியாவில் குறிப்பிட்டு அச்சறுத்தல்கள் இல்லை

ஐ.சி.சி. பாதுகாப்புக் குழு மதிப்பீடு எதிர்வரும் டி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணி இந்தியாவில் ஆடுவதற்கு குறிப்பிட்ட அல்லது அதிகரித்த அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்று பாதுகாப்பு மதிப்பீடு ஒன்றை சர்வதேச கிரிக்கெட் கௌன்சில (ஐ.சி.சி.), பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு வழங்கியுள்ளது. இந்த மதிப்பீடு உள்ளக அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு அது பங்களாதேஷ் சபையின் பாதுகாப்பு குழுவிடம் பகிரப்பட்டுள்ளது. இதில் பங்களாதேஷ் அணிக்கு முழுமையான அச்சுறுத்தல் நிலை இல்லை என்றும் சில இடங்களில் மிகக் குறைவானது தொடக்கம் நடுநலையான

பங்களாதேஷ் அணிக்கு இந்தியாவில் குறிப்பிட்டு அச்சறுத்தல்கள் இல்லை Read More »

janu13

மொன்சூன் கோல்ப் கிண்ணத் தொடர்

அவியானா சிலோன் ஹோட்டல் குழுமத்தின் அனுசரணையுடன் இலங்கை விமானப்படை ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸ் நான்காவது முறையாக ஏற்பாடு செய்த மொன்சூன் கோல்ப் கிண்ண தொடர் 2025 ஆண்கள் மற்றும் பெண்கள் திறந்த கோல்ஃப் போட்டி தொடர் நேற்று முன்தினம் (11) திருகோணமலை சீனாக்குடா விமானப்படை ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸில், இலங்கை விமானப்படை விமான நடவடிக்கைகளின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் தம்மிக டயஸின் தலைமையில் நடைபெற்றது. இந்தப் போட்டித்தொடரில் ஈகிள்ஸ் மொன்சூன் கிண்ணத்திற்காக ஆண் மற்றும்

மொன்சூன் கோல்ப் கிண்ணத் தொடர் Read More »

jan13

‘லங்கா ரைட்’ சைக்கிள் சவாரிக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்

இலங்கையின் பிரதான சைக்கிளோட்டப் போட்டியாக முதல்முறை நடத்தப்படும் ‘லங்கா ரைட்’ சைக்கிள் சவாரியை எதிர்வரும் ஜனவரி 16 தொடக்கம் 18 ஆம் திகதி வரை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிகச் செயலாளர் சுமித் சாந்த தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் இந்த சைக்கிளோட்டப் போட்டியில் மொத்தம் 26 அணிகளைச் சேர்ந்த 153 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் ஏற்பாடு

‘லங்கா ரைட்’ சைக்கிள் சவாரிக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் Read More »

janu12

SLvsPAK: இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றி

– சமநிலையில் நிறைவடைந்த T20 தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3ஆவதும் இறுதியுமான T20 போட்டி நேற்று (11) தம்புள்ளை மைதானத்தில் இடம்பெற்றது. இதில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. மழை காரணமாக போட்டிக்கு தடை ஏற்ப்பட்ட நிலையில் 12 ஓவர்களுக்கு போட்டி மட்டுப்படுத்தப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 160 ஓட்டங்களை பெற்றது. எனினும் குறித்த இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.

SLvsPAK: இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றி Read More »

jan12

சம்பியன்ஸ் லீக்கில் சௌண்டர்ஸிடம் சுப்பர் சன் அணிக்கு முதல் தோல்வி

மொரகஸ்முல்லவுக்கு எதிராக சொலிட் கோல் மழை இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் முன்னணி கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் நியூ ஸ்டார் அணி முதல் தோல்வியை சந்தித்ததோடு மொரகஸ்முல்லவுக்கு எதிராக சொலிட் அணி கோல் மழை பொழிந்தது. கொழும்பு, குதிரைப் பந்தய திடலில் நடைபெற்று வரும் தொடரின், ஐந்தாவது வாரத்துக்கான போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை (09) ஆரம்பமானது. இதில் ஏ குழுவில் நியூ ஸ்டார் அணியை எதிர்கொண்ட சௌண்டர்ஸ் 1–0 என்ற

சம்பியன்ஸ் லீக்கில் சௌண்டர்ஸிடம் சுப்பர் சன் அணிக்கு முதல் தோல்வி Read More »

janu9

கடைசி ஆஷஸிலும் ஆஸி. அணி வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியிலும் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலிய அணி தொடரை 4–1 என கைப்பற்றியது. இதன்மூலம் 2018 தொடக்கம் அவுஸ்திரேலிய அணி ஆஷஸ் கிண்ணத்தை தொடர்ந்து நான்காவது முறையாகவும் தக்கவைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 5ஆவது ஆஷஸ் போட்டியின் இறுதி நாளான நேற்று (08) அவுஸ்திரேலிய அணிக்கு 160 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்ப வரிசை விக்கெட்டுகள் முக்கிய இடைவெளிகளில் பறிபோனபோதும் அந்த

கடைசி ஆஷஸிலும் ஆஸி. அணி வெற்றி Read More »