Sports

jan9

தெஹிவளை–கல்கிசை மாநகர சபை சைக்கிளோட்ட அணி கடும் போட்டி

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் அச்சு ஊடகம் மற்றும் லேக் ஹவுஸ் டிஜிட்டல் ஊடக அனுசரணையில், விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் கமகேவின் ஆலோசனைக்கு அமைய, விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் சைக்கிளோட்ட நடுவர்கள் சங்கம் இணைந்து நடத்தும் ‘லங்கா ரைட்’ சைக்கிளோட்டப் போட்டி ஜனவரி 16 ஆம் திகதி காலை 9 மணிக்கு கொழும்பு, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்னால் ஆரம்பமாகவுள்ளது. ‘லங்கா ரைட்’ சைக்கிளோட்டப் போட்டியின் முதல் தினத்தில் கண்டி சென்று, […]

தெஹிவளை–கல்கிசை மாநகர சபை சைக்கிளோட்ட அணி கடும் போட்டி Read More »

janu8

அதிக சுழல் வீரர்களுடனான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத்திற்கு வலுவான சுழற்பந்து வீச்சாளர்களை கொண்ட குழாத்தை நியூசிலாந்து அறிவித்துள்ளது. மிட்சல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி உலகக் கிண்ணத்தின் ஆரம்ப சுற்றில் நான்கு போட்டிகளில் மூன்று ஆட்டங்களை சுழற்பந்துக்குச் சாதகமான சென்னை, சேப்பாக்கம் அரங்கிலேயே ஆடவுள்ளது. இதனால் சான்ட்னருடன் இஷ் சோதி, மைக்கல் பிரஸ்வெல், கிளன் பிலிப்ஸ் மற்றும் ரச்சின் ரவிந்திரா ஆகியோருடன் சுழற்பந்து வீச்சு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொரும்பாலான நியூசிலாந்து வீரர்கள் ஏற்கனவே இந்தியாவுக்கு

அதிக சுழல் வீரர்களுடனான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு Read More »

jan8

அமெரிக்க அணிக்காக ஆடுகிறார் இலங்கை வீரர் செஹான் ஜயசூரிய

இலங்கை மற்றும் இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத்திற்கான அமெரிக்க அணியில் இலங்கை முன்னாள் சகலதுறை வீரர் செஹான் ஜயசூரிய இணைக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கிண்ணத்திற்கான அமெரிக்க அணி இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாதபோதும் அதற்காக மொனன்க் படேல் தலைமையிலான 18 பேர் கொண்ட குழாம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இலங்கை அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் புபுது தசநாயக்க அமெரிக்க அணியின் பயிற்சியாளராக செயற்படும் நிலையிலேயே செஹான் ஜயசூரிய அந்த அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அணிக்காக ஆடுகிறார் இலங்கை வீரர் செஹான் ஜயசூரிய Read More »

janu7

6 விக்கெட்டுக்களால் இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான் அணி

– தொடரில் 1 – 0 என்ற அடிப்படையில் முன்னிலை இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. தம்புள்ளையில் இன்று (07) இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. போட்டியில் இலங்கை அணி

6 விக்கெட்டுக்களால் இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான் அணி Read More »

jan7

மின்னொளி கிரிக்கெட்டுக்காக எஸ்.எஸ்.சி. மைதானம் தயார்

டி20 உலகக் கிண்ணத்தை ஒட்டி இரவு நேர போட்டிக்காக கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் மின் விளக்கு பொருத்தும் பணிகள் பூர்த்தியாகி இருப்பதோடு அங்கு பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் பொருளாளர் சுஜீவ கொடலியத்த தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் சபையின் நிதியில் அமைக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு 1.8 பில்லியன் ரூபா செலவாகியுள்ளது. டி20 உலகக் கிண்ணத்தில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஐந்து போட்டிகள் நடைபெறவுள்ளன. தவிர ஆர். பிரேமதாச மற்றும் பல்லேகல சர்வதேச மைதானங்களிலும் உலகக்

மின்னொளி கிரிக்கெட்டுக்காக எஸ்.எஸ்.சி. மைதானம் தயார் Read More »

janu6

கோமாவில் இருந்து மீண்டார் டேமியன்

மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய முன்னாள் துடுப்பாட்ட வீரர் டேமியன் மார்டின் கோமா நிலையில் இருந்து மீண்டும் எழுந்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன் சுகவீனமுற்ற மார்டின் குயீன்ஸ்லாந்து வைத்தியசாலை ஒன்றில் கடந்த டிசம்பர் 27 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மார்டினின் குடும்பம் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் அவரது நண்பரும் முன்னாள் வீரருமான அடம் கில்கிறிஸ்ட், ‘கடந்த 48 மணி நேரத்தில் நம்ப முடியாத நிகழ்வுகள் நடந்துள்ளன’ என்று தெரிவித்துள்ளார். ‘அவர் கோமா நிலையில் இருந்து மீண்டு,

கோமாவில் இருந்து மீண்டார் டேமியன் Read More »

jan6

ஜோ ரூட்டின் சதத்தால் இங்கிலாந்து 384 ஓட்டம்

ஜோ ரூட்டின் சதத்தின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸுக்கு 384 ஓட்டங்களை பெற்றபோதும் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கும் ஆஸி. அணி ஸ்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று (5) தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் 41 ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் டெஸ்ட்

ஜோ ரூட்டின் சதத்தால் இங்கிலாந்து 384 ஓட்டம் Read More »

janu5

பங்களாதேஷ் போட்டிகளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்ற கோரிக்கை

ஐ.பி.எல். இல் முஸ்தபிஸுரை நீக்கியதால் பதற்றம் இந்திய பிரீமியர் லீக் தொடரில் இருந்து பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஸுர் ரஹ்மான் நீக்கப்பட்டதை அடுத்து, எதிர்வரும் டி20 உலகக் கிண்ணத்தில் தமது போட்டிகளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்றுவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலிடம் (ஐ.சி.சி.) கோரவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணி தனது முதல்

பங்களாதேஷ் போட்டிகளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்ற கோரிக்கை Read More »

jan5

இங்கிலாந்து அணி வலுவான ஆரம்பம்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி வலுவான ஆரம்பத்தைப் பெற்றுள்ளது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (04) ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டி சீரற்ற காலநிலையால் முதல் நாள் ஆட்டம் 45 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவின்போது 3 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்போது இங்கிலாந்து அணி 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை

இங்கிலாந்து அணி வலுவான ஆரம்பம் Read More »

jan4

உலகக் கிண்ண T20 போட்டிகளை நடத்த தயாராகும் இலங்கை மைதானம்

உலகக் கிண்ணத்தை நடத்தும் நோக்கில் SSC மைதானத்தில் நிறுவப்பட்ட புதிய அதிநவீன LED விளக்கு அமைப்பை நிறுவும் பணி தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. மைதானத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வீரர்களுக்கான ஓய்வறை மேம்படுத்துதல் மற்றும் போட்டி அதிகாரிகள் மற்றும் நடுவர்களுக்கான புதிய அறைகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்படும். உலகக் கிண்ண போட்டிகளை நடத்தும் முக்கிய மைதானங்களில் ஒன்றாக SSC மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 2026

உலகக் கிண்ண T20 போட்டிகளை நடத்த தயாராகும் இலங்கை மைதானம் Read More »