Sports

decb28

சிரேஷ்ட வீரர்களின்றி இலங்கை வரும் பாகிஸ்தான் அணி

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் குழாத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று (28) உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.  அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாத்தில் முன்னணி வீரர்களான பாபர் அசாம், மொஹமட் ரிஸ்வான், ஷஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூப் வீரர்கள் இடம்பெறவில்லை. இதற்குக் காரணம் அவர்கள் தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் T20 லீக்கில் பங்கேற்று வருகின்றனர். இதில் பாபர் அசாம் சிட்னி சிக்சர்ஸ் அணிக்கும், […]

சிரேஷ்ட வீரர்களின்றி இலங்கை வரும் பாகிஸ்தான் அணி Read More »

dec28

உலக ரேபிட் செஸ்: கார்ல்சனுக்கு அதிர்ச்சி தோல்வி – ஹம்பி மற்றும் நிமேன் அபார முன்னேற்றம்!

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் ஃபிடே (FIDE) உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் பரபரப்பான திருப்பங்களுடன் நிறைவடைந்தது. உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சன் தோல்வியைத் தழுவ, ரஷ்யாவின் விளாடிஸ்லாவ் ஆர்டெமிவ் மற்றும் அமெரிக்காவின் ஹான்ஸ் நிமேன் ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர். முதல் நாளில் 4.5 புள்ளிகளுடன் ஆதிக்கம் செலுத்திய நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், இரண்டாம் நாளில் கடும் சவாலை எதிர்கொண்டார். ஏழாவது சுற்றில் ரஷ்யாவின் விளாடிஸ்லாவ் ஆர்டெமிவ்விடம்

உலக ரேபிட் செஸ்: கார்ல்சனுக்கு அதிர்ச்சி தோல்வி – ஹம்பி மற்றும் நிமேன் அபார முன்னேற்றம்! Read More »

decb26

இளையோர் ஆசிய ரக்பி கிண்ணத் தொடர் இலங்கையில்

ஆசிய ரக்பி கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் 2026ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி சம்பியன்ஷிப்பை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ரக்பி சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்த அரிய வாய்ப்பு இலங்கையின் வளரும் ரக்பி வீரர்களின் ஆற்றலை மேம்படுத்தவும் சர்வதேச அரங்கில் அனுபவம் பெறவும் அற்புதமான தருணமாக அமையும் என சம்மேளனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதன்படி, ஆசியாவின் முன்னணி நான்கு அணிகளான இலங்கை, ஹொங்கொங், தென் கொரியா மற்றும் சீன தாய்ப்;பே ஆகிய நாடுகள் பங்கேற்கும்

இளையோர் ஆசிய ரக்பி கிண்ணத் தொடர் இலங்கையில் Read More »

dec26

இலங்கை கிரிக்கெட் அணியுடன் மீண்டும் இணையும் மாலிங்க

இலங்கை மற்றும் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடர் வரை இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சு ஆலோசகராக முன்னாள் வீரர் லசித் மாலிங்க நியமிக்கப்படவுள்ளார். இதன்போது குறுகிய காலம் பயிற்சியாளராக செயற்படும் மாலிங்க தனது பயிற்சிக் காலத்தில் இலங்கை அணி வேகப்பந்து வீச்சாளர்களின் வேகம், சரியான இலக்குக்கு பந்தை வீசுவது மற்றும் கடைசி ஓவர்களில் ஓட்டங்களை விட்டுக் கொடுக்காமல் பந்துவீசுவது தொடர்பில் அதிக அவதானம் செலுத்தவுள்ளதாக இது தொடர்பில் கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியுடன் மீண்டும் இணையும் மாலிங்க Read More »

decb25

84 பந்தில் 190 ஓட்டம் விளாசி 14 வயது சூர்யவன்சி சாதனை

இந்தியாவைச் சேர்ந்த இளம் அதிரடி துடுப்பாட்ட வீரரான வைபவ் சூர்யவன்சி ஆடவர் ஒருநாள் உள்ளூர் கிரிக்கெட்டில் சதம் பெற்ற இளம் வீரராக சாதனை படைத்துள்ளார். நேற்று ஆரம்பமான இந்தியாவின் விஜே ஹசரே கிண்ண ஒருநாள் தொடரில் பிஹார் அணிக்காக ஆடும் அவர் அருணாச்சலப் பிரதேசத்திற்கு எதிராக சதம் பெற்றதன் மூலமே இந்த சாதனையை படைத்துள்ளார். 14 வயது மற்றும் 272 நாட்களாகும் சூர்யவன்சி ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 84 பந்துகளில் 14 பௌண்டரிகள் மற்றும் 15

84 பந்தில் 190 ஓட்டம் விளாசி 14 வயது சூர்யவன்சி சாதனை Read More »

dec25

அதிக மது அருந்தி போதையில் தடுமாறிய இங்கிலாந்து வீரர்கள் குறித்து விசாரணை

ஆஷஸ் போட்டிகளுக்கு இடையே சர்ச்சை இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடருக்கு இடையே அவுஸ்திரேலியாவின் கடற்கரை நகரான நூசாவில் ஓய்வு எடுத்து அதிக அளவு மதுபானம் அருந்தியது தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை விசாரணையை ஆரம்பித்துள்ளது. இரண்டு மற்றும் மூன்றாவது ஆஷஸ் போட்டிகளுக்கு இடையே குவிஸ்லாந்தின் கடற்கரை நகரில் இங்கிலாந்து அணியினர் நான்கு நாட்கள் ஓய்வு எடுத்துள்ளனர். அதன்போது சில வீரர்கள் அதிக அளவில் மதுபானம் அருந்தி இருப்பதாக விபரங்கள் வெளியாகியுள்ளன. இதன்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்த

அதிக மது அருந்தி போதையில் தடுமாறிய இங்கிலாந்து வீரர்கள் குறித்து விசாரணை Read More »

decb24

ஒரே ஓவரில் 5 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை

டி20 சர்வதேச போட்டியில் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என இந்தோனேசியாவின் கெடே பிரியந்தனா சாதனை படைத்துள்ளார். கம்போடியாவுக்கு எதிராக பாலியில் நேற்று (23) நடைபெற்ற போட்டியிலேயே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இதன்போது கம்போடிய அணி 168 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலெடுத்தாடியபோது 16 ஆவது ஓவரை வீசவந்த பிரியந்தனா முதல் மூன்று பந்துகளில் ஹட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். பின்னர் அந்த ஓவரின் கடைசி இரு பந்துகளுக்கும் மேலும் இரு

ஒரே ஓவரில் 5 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை Read More »

dec24

பிஃபா தரவரிசையில் மாற்றமின்றி இலங்கை அணிக்கு 94ஆவது இடம்

ஸ்பெயில் முதல் இடத்தில் நீடிப்பு சர்வதேச கால்பந்து சம்மேளத்தின் இந்த ஆண்டில் இறுதியாக புதுப்பிக்கப்பட்ட தரவரிசையில் இலங்கை கால்பந்து அணி 194 ஆவது இடத்தில் நீடிப்பதோடு ஸ்பெயின் அணி முதல் இடத்துடன் 2025 ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இலங்கை நேரப்படி நேற்று (23) புதுப்பிக்கப்பட்ட பிஃபா தரவரியில் முதல் 33 இடங்களிலும் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை. ஸ்பெயின் அணி 1877.18 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. ஆர்ஜன்டீனா (1873.33), பிரான்ஸ் (1870), இங்கிலாந்து (1834.12), பிரேசில் (1760.46),

பிஃபா தரவரிசையில் மாற்றமின்றி இலங்கை அணிக்கு 94ஆவது இடம் Read More »

decb23

2ஆவது பாதியில் ஆதிக்கம் செலுத்தி சொலிட்டை வீழ்த்தியது பெலிகன்ஸ்

சௌன்டர்ஸ் – நீர்கொழும்பு யூத் போட்டி சமநிலை இலங்கை கால்பந்து சம்மேளத்தினால் நடத்தப்படும் முன்னணி கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில் அநுராதபுரம் சொலிட் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் குருநாகல் பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகம் 4–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியதோடு சௌன்டர்ஸ் மற்றும் நீர்கொழும்பு யூத் அணிகளுக்கு இடையிலான போட்டி 2–2 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றது. கொழும்பு, குதிரைப்பந்தய திடலில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இரண்டாவது வாரத்திற்கான கடைசி இரு

2ஆவது பாதியில் ஆதிக்கம் செலுத்தி சொலிட்டை வீழ்த்தியது பெலிகன்ஸ் Read More »

dec23

இந்தியா வந்த மெஸ்ஸிக்கு 89 கோடி ரூபா வருமானம்

ஆர்ஜன்டீன கால்பந்து ஜாம்பவான் லியொனல் மெஸ்ஸியின் இந்திய சுற்றுப்பயணத்திற்காக அவருக்கு இந்திய நாணயப்படி 89 கோடி ரூபா செலுத்தப்பட்டிருப்பதோடு இந்த சுற்றுப்பயணத்தின் மொத்த செலவு 100 கோடி ரூபாவை தாண்டி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மூன்று நாள் விஜயமாக இந்தியா சென்ற மெஸ்ஸி சக அணி வீரர்களான லுவிஸ் சௌரஸ் மற்றும் ரொட்ரிகோ டி போலுடன் இணைந்து கொல்கத்தா, ஹைத்ராபாத், மும்பை மற்றும் புது டெல்லிக்குச் சென்றார். கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி கொல்கத்தாவில் இடம்பெற்ற

இந்தியா வந்த மெஸ்ஸிக்கு 89 கோடி ரூபா வருமானம் Read More »