Sports

dec21

U19 இளையோர் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றிய பாகிஸ்தான் அணி

19 வயதுக்குட்பட்ட இளையோர் ஆசிய கிண்ணத்தை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. இந்த போட்டி தொடர் துபாயில் நடைபெற்று வந்த நிலையில் இன்று (21) இறுதிப் போட்டி இடம்பெற்றிருந்தது. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இளையோர் அணிகள் மோதியிருந்தன. குறித்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 347 ஓட்டங்களை குவித்தது. அதிகபட்சமாக சமீர் […]

U19 இளையோர் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றிய பாகிஸ்தான் அணி Read More »

decb19

பிஃபா உலகக் கிண்ணத்தை வென்றால் 50 மில்லியன் பரிசு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண போட்டியில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணி சாதனை தொகையான 50 மில்லியன் டொலர்களை வெல்லும் என சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்தத் தொகை 2018 இல் வழங்கப்பட்ட 38 மில்லியன் டொலர் மற்றும் 2022 இல் வழங்கப்பட்ட 42 மில்லியன் டொலர் பரிசுத் தொகையில் இருந்து கணிசமான அதிகரிப்பாக உள்ளது. அத்துடன் எதிர்வரும் உலகக் கிண்ணத்திற்கான மொத்தப் பரிசுத் தொகை கட்டாரில் கடந்த முறை நடந்ததை விடவும்

பிஃபா உலகக் கிண்ணத்தை வென்றால் 50 மில்லியன் பரிசு Read More »

dec19

இந்திய–தென்னாபிரிக்க டி20 போட்டி பனிமூட்டத்தால் இரத்து

இந்தியாவின் லக்னோ நகரில் நேற்று முன்தினம் (17) நடைபெறவிருந்த இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 சர்வதேச போட்டி கடுமையான பனிமூட்டம் காரணமாக கைவிடப்பட்டது. பார்க்க முடியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் தாமதம் அடைந்த போட்டியை நாணய சுழற்சி கூட போடப்படாமல் இரவு 9.25 இற்கு கைவிடுவதற்கு போட்டி அதிகாரிகள் தீர்மானித்தனர். மாலை 6.30 மணிக்கு நாணய சுழற்சி போடப்படவிருந்தபோதும் நிலைமையில் முன்னேற்றம் அடையும் என நாடுவர்கள் எதிர்பார்த்து அதனை தாமதப்படுத்தி வந்தனர். போட்டி

இந்திய–தென்னாபிரிக்க டி20 போட்டி பனிமூட்டத்தால் இரத்து Read More »

decb18

அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு இலங்கையிலிருந்து 7 வீரர்கள்

மீனி ஏலத்தில் 9 வீரர்கள் விலை போகாமல் ஏமாற்றம் இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) மினி ஏலத்தில் இலங்கை வீரர்கள் மூவர் வாங்கப்பட்ட நிலையில் எதிர்வரும் ஐ.பி.எல். தொடரில் மொத்த ஏழு வீரர்கள் இடம்பெறவுள்ளனர். இதில் மற்ற நான்கு வீரர்களும் தமது அணியுடனான ஒப்பந்தத்தை தக்கவைத்த நிலையிலேயே ஐ.பி.எல். வாய்ப்பை பெற்றுள்ளனர். அபூதாபியில் நேற்று முன்தினம் (16) நடைபெற்ற ஏலத்தில் இரண்டாவது அதிக விலையாக இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண இந்திய நாணயப்படி 18

அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு இலங்கையிலிருந்து 7 வீரர்கள் Read More »

dec18

இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்ரீதர் நியமனம்

டி20 உலகக் கிண்ணம் வரை இலங்கை தேசிய அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் களத்தடுப்பு பயிற்சியாளரான எஸ். ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் 3ஆம் நிலை தகுதி பெற்ற பயிற்சியாளரான ஸ்ரீதர் 2014 தொடக்கம் 2021 வரை 300 சர்வதேச போட்டிகளில் இந்திய அணியின் பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இலங்கை அணியின் களத்தடுப்பு தரத்தை உயர்த்தும் வகையில் எதிர்வரும் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் இலங்கை அணியின் பயிற்சியாளராக

இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்ரீதர் நியமனம் Read More »

decb17

தீர்க்கமான மூன்றாவது ஆஷஸ் போட்டி இன்று

இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிண்ணத் தொடரின் தீர்க்கமான மூன்றாவது போட்டி அடிலெயிட்டில் இன்று (17) ஆரம்பமாகவுள்ளது. ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் வெற்றியீட்டிய அவுஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் தொடர் வெற்றியை எதிர்பார்த்தே இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளது. அவுஸ்திரேலிய அணி முக்கிய இரண்டு மாற்றங்களுடனேயே இந்த டெஸ்டில் களமிறங்கவுள்ளது. உபாதையில் இருந்து மீண்ட அணித் தலைவர் பட் கமின்ஸ் மீண்டும் அணிக்கு திரும்புவதோடு அனுபவ சுழல் வீரர்

தீர்க்கமான மூன்றாவது ஆஷஸ் போட்டி இன்று Read More »

dec17

தொடர்ந்து 2ஆவது ஆண்டாக ஐ.பி.எல். உடன் பீ.எஸ்.எல். சமகாலத்தில் போட்டி

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) மற்றும் பாகிஸ்தான் சுப்பர் லீக் (பீ.எஸ்.எல்.) போட்டிகள் ஓரே காலப்பகுதியில் நடத்த ஏற்பாடாகியுள்ளது. 11ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் 2026 மார்ச் 26 தொடக்கம் மே 3 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் மொஹ்சின் நக்வி கடந்த திங்கட்கிழமை (15) அறிவித்தார். மறுபுறம் இந்திய பிரீமியர் லீக் மார்ச் 26 தொடக்கம் மே 31 வரையான காலப்பகுதியில் நடத்த

தொடர்ந்து 2ஆவது ஆண்டாக ஐ.பி.எல். உடன் பீ.எஸ்.எல். சமகாலத்தில் போட்டி Read More »

12 .16 a

ஆப்கானை போராடி வென்ற இலங்கை ஆசிய கிண்ண அரையிறுதிக்கு தகுதி

ஆப்கானிஸ்தான் இளையோர் அணிக்கு எதிரான 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண பி குழுவுக்கான போட்டியில் கடைசிவரை போராடி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை இளையோர் அணி தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.டுபாயில் நேற்று (15) நடைபெற்ற போட்டியில் 236 ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு ஆரம்ப வீரர் விரான் சமுதித்த சிறப்பாக துடுப்பெடுத்தாடி 83 பந்துகளில் 62 ஓட்டங்களை பெற்றார். எனினும் முக்கிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் ஓட்ட

ஆப்கானை போராடி வென்ற இலங்கை ஆசிய கிண்ண அரையிறுதிக்கு தகுதி Read More »

decb16

கத்தாரில் World Rapid & Blitz Championships Qatar 2025 – மாக்னஸ் கார்ல்சன், குகேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்பு!

சதுரங்க உலகின் மிகவும் விறுவிறுப்பான மற்றும் எதிர்பார்க்கப்படும் தொடரான 2025 ஃபிடே (FIDE) உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் இம்முறை கத்தாரில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளன. வரும் டிசம்பர் 26 முதல் 30 வரை தோஹா, கத்தார் பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு மற்றும் நிகழ்வுகள் வளாகத்தில் (Sports and Events Complex, Qatar University) இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இத்தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சன் (Magnus Carlsen), இந்தியாவின் இளம் செஸ்

கத்தாரில் World Rapid & Blitz Championships Qatar 2025 – மாக்னஸ் கார்ல்சன், குகேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்பு! Read More »

dec16

FIFA ARAB CUP 2025: ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மொராக்கோ!

கலிஃபா சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்ற பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில், மொராக்கோ அணி ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) எதிர்கொண்டது. ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய மொராக்கோ, 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், மொராக்கோ அணி அரபு கோப்பை 2025-ன் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. தோல்வியுற்ற ஐக்கிய அரபு அமீரகம் 3-வது இடத்திற்கான போட்டியில் விளையாடும். இறுதிப் போட்டியில் மொராக்கோ யாரை

FIFA ARAB CUP 2025: ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மொராக்கோ! Read More »