தீர்க்கமான மூன்றாவது ஆஷஸ் போட்டி இன்று

decb17

இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிண்ணத் தொடரின் தீர்க்கமான மூன்றாவது போட்டி அடிலெயிட்டில் இன்று (17) ஆரம்பமாகவுள்ளது.

ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் வெற்றியீட்டிய அவுஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் தொடர் வெற்றியை எதிர்பார்த்தே இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளது.

அவுஸ்திரேலிய அணி முக்கிய இரண்டு மாற்றங்களுடனேயே இந்த டெஸ்டில் களமிறங்கவுள்ளது. உபாதையில் இருந்து மீண்ட அணித் தலைவர் பட் கமின்ஸ் மீண்டும் அணிக்கு திரும்புவதோடு அனுபவ சுழல் வீரர் நெதன் லியோனும் அழைக்கப்பட்டுள்ளார். எனினும் ஆரம்ப வீரர் உஸ்மான் கவாஜா அணியில் இடம்பெற தவறியுள்ளார். மறுபுறம் இங்கிலாந்து அணி குஸ் அட்கின்ஸனுக்கு பதில் ஜோஸ் டொங்கை உள்ளடக்கி இந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளது.

இந்நிலையில் மூன்றாவது டெஸ்டிலும் இங்கிலாந்து அணி தோல்வியுற்றால் தொடரை இழப்பது மாத்திரம் அன்றி அந்த அணி அவுஸ்திரேலிய மண்ணில் கடந்த 12 ஆண்டுகளில் ஆஷஸ் தொடர்களை இழப்பதாக அமையும்.

கடைசியாக 2023 இல் இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடரில் முதல் இரு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வெற்றியீட்டி 2–0 என முன்னிலை பெற்றிருந்த நிலையில் இங்கிலாந்து 2–2 என தொடரை சமன் செய்தமை குறிப்பிடத்தக்கது.