Sports

sports dec12

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் டிச. 19இல் ஆரம்பம்

சீரற்ற காலநிலையால் ஒத்திவைக்கப்பட்ட இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் சம்பியன்ஸ் லீக் தொடர் எதிர்வரும் டிசம்பர் 19 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கால்பந்து சம்மேளன தலைவர் ஜஸ்வர் உமர் இது பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருப்பதோடு புதுப்பிக்கப்பட்ட போட்டி அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.இலங்கை வரலாற்றில் கடுமையான பேரழிவு ஒன்றை எதிர்கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் உமர், நாடு பெரும் பாதிப்பை சந்தித்திருப்பதோடு இதனால் கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் […]

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் டிச. 19இல் ஆரம்பம் Read More »

dec9

FIFA Arab Cup 2025: மொரோக்கோ, சவுதி அரேபியா காலிறுதிக்கு தகுதி

தோஹா: கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2025 FIFA அரபு கிண்ண கால்பந்துத் தொடரின் குழு B க்கான கடைசி லீக் ஆட்டங்கள் நேற்று (டிசம்பர் 8) முடிவடைந்தன. இதில் மொரோக்கோ மற்றும் சவுதி அரேபியா ஆகிய அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு (Quarter-finals) தகுதி பெற்றுள்ளன. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மொரோக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி மொரோக்கோ வெற்றி பெற்றது. அதேவேளையில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஓமான் அணி 2-1

FIFA Arab Cup 2025: மொரோக்கோ, சவுதி அரேபியா காலிறுதிக்கு தகுதி Read More »

02

அதிக சிக்ஸர் விளாசி அப்ரிடியின் சாதனையை முறியடித்தார் ரோஹித்

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மூன்று சிக்ஸர்களை விளாசிய இந்திய அனுபவ வீரர் ரோஹித் ஷர்மா ஒருநாள் சர்வதேச போட்டியில் அதிக சிக்ஸர்களை விளாசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் சஹீட் அப்ரிடியின் 15 ஆண்டு சாதனையை முறியடித்தார். ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் இதுவரை 269 இன்னிங்ஸ்களில் ஆடி 352 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதன்மூலம் அவர் அப்ரிடி 369 இன்னிங்ஸ்களில் பெற்ற 351 சிக்ஸர்கள் என்ற சாதனையையே முறியடித்தார். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக

அதிக சிக்ஸர் விளாசி அப்ரிடியின் சாதனையை முறியடித்தார் ரோஹித் Read More »

nov30

இந்தியா செல்லும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (டிசம்பர்) 21ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் சபை நேற்று (28) அறிவித்தது. இதன்படி இந்தியா-இலங்கை மகளிர் அணிகள் இடையிலான முதலாவது (டிச.21), 2ஆவது டி20 போட்டி (டிச.23) விசாகப்பட்டினத்திலும், 3ஆவது (டிச.26), 4ஆவது (டிச.28), 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி (டிச.30) திருவனந்தபுரத்திலும் நடைபெறவுள்ளது. 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை மகளிர்

இந்தியா செல்லும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி Read More »

28

டுபாய் கெபிடல்ஸ் அணியின் தலைவராக தசுன் நியமனம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் சர்வதேச லீக் டி20 தொடரில் டுபாய் கெபிடல்ஸ் அணியின் தலைவராக தசுன் ஷானக்க நியமிக்கப்பட்டுள்ளார். நடப்புச் சம்பியனாக இருக்கும் டுபாய் கெபிடல்ஸ் கடந்த முறை கிண்ணத்தை வெல்வதில் அந்த அணியில் இடம்பெற்றிருந்த தசுன் ஷானக்க துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சோபித்திருந்தார். ஒரு போட்டியில் அவர் சதம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிய தலைமையின் கீழ் புதிய பாதையில் அணியின் ஸ்திரத்தன்மை மற்றும் வெற்றிப் பாதையை உறுதி செய்ய திட்டமிட்டிருப்பதாக டுபாய்

டுபாய் கெபிடல்ஸ் அணியின் தலைவராக தசுன் நியமனம் Read More »

nov27

இலங்கை இளையோருக்கு எதிராக பங்களாதேஷ் அணி கோல் மழை

சீனாவில் நடைபெற்று வரும் 17 வயதுக்கு உட்பட் ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக நேற்று (26) நடைபெற்ற ஆட்டத்தில் 0–5 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்த இலங்கை இளையோர்கள் இளையோர் ஆசிய கிண்ணத்திற்கு முன்னேறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ளது. 17 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ளது. இதற்கான தகுதிகாண் சுற்றின் ஏ குழுவில் ஆடும் இலங்கை இளையோர்கள் நேற்றைய தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில்

இலங்கை இளையோருக்கு எதிராக பங்களாதேஷ் அணி கோல் மழை Read More »

accricing star

ACC Rising Stars Asia Cup 2025: வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பாகிஸ்தான்!

வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த வங்கதேசம், இலங்கை அணியும், பி பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணியும் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதியில் வங்கதேசம் சூப்பர் ஓவரில் இந்தியாவை வீழ்த்தியது. 2வது அரையிறுதியில் பாகிஸ்தான் இலங்கையை வீழ்த்தியது. இந்நிலையில், ஆசிய

ACC Rising Stars Asia Cup 2025: வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பாகிஸ்தான்! Read More »

sports

டெஸ்ட் தொடரை இலகுவாக வென்றது பங்களாதேஷ் அணி

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 217 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டிய பங்களாதேஷ் அணி இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2–0 என கைப்பற்றியது. மிர்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 509 என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கி நேற்று (23) கடைசி நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த அயர்லாந்து அணி 113.3 ஓவர்களில் 291 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

டெஸ்ட் தொடரை இலகுவாக வென்றது பங்களாதேஷ் அணி Read More »

nov22

ACC Rising Stars Asia Cup 2025: இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வங்காளதேசம்

வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்த வங்காளதேசம், இலங்கை அணியும், ‘பி’ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணியும் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – வங்காளதேசம் அணிகள் விளையாடின. இதில் டாஸ்

ACC Rising Stars Asia Cup 2025: இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வங்காளதேசம் Read More »

nov20

ACC Rising Stars Asia Cup 2025: அரையிறுதி போட்டி நாளை ஆரம்பம்!

வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து வங்காளதேசம், இலங்கை அணிகளும், ‘பி’ பிரிவில் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரின் அரையிறுதி சுற்று நாளை தொடங்க உள்ளது. மாலை 3 மணிக்கு தொடங்கும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் வங்காளதேசம் – இந்தியா

ACC Rising Stars Asia Cup 2025: அரையிறுதி போட்டி நாளை ஆரம்பம்! Read More »