தோஹா: கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2025 FIFA அரபு கிண்ண கால்பந்துத் தொடரின் குழு B க்கான கடைசி லீக் ஆட்டங்கள் நேற்று (டிசம்பர் 8) முடிவடைந்தன. இதில் மொரோக்கோ மற்றும் சவுதி அரேபியா ஆகிய அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு (Quarter-finals) தகுதி பெற்றுள்ளன.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மொரோக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி மொரோக்கோ வெற்றி பெற்றது.
அதேவேளையில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஓமான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொமொரோஸ் (Comoros) அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியடைந்தது.
புள்ளிப்பட்டியல் விபரம் (Group B Standings):
மொரோக்கோ: 7 புள்ளிகள் (+3 கோல் வித்தியாசம்) – முதலிடம்
சவுதி அரேபியா: 6 புள்ளிகள் (+2 கோல் வித்தியாசம்) – இரண்டாமிடம்
ஓமான்: 4 புள்ளிகள்
கொமொரோஸ்: 0 புள்ளிகள்
இதன் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மொரோக்கோ மற்றும் சவுதி அரேபியா அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஓமான் மற்றும் கொமொரோஸ் அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.


