அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 217 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டிய பங்களாதேஷ் அணி இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2–0 என கைப்பற்றியது.
மிர்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 509 என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கி நேற்று (23) கடைசி நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த அயர்லாந்து அணி 113.3 ஓவர்களில் 291 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.


