இந்தியாவின் லக்னோ நகரில் நேற்று முன்தினம் (17) நடைபெறவிருந்த இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 சர்வதேச போட்டி கடுமையான பனிமூட்டம் காரணமாக கைவிடப்பட்டது.
பார்க்க முடியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் தாமதம் அடைந்த போட்டியை நாணய சுழற்சி கூட போடப்படாமல் இரவு 9.25 இற்கு கைவிடுவதற்கு போட்டி அதிகாரிகள் தீர்மானித்தனர். மாலை 6.30 மணிக்கு நாணய சுழற்சி போடப்படவிருந்தபோதும் நிலைமையில் முன்னேற்றம் அடையும் என நாடுவர்கள் எதிர்பார்த்து அதனை தாமதப்படுத்தி வந்தனர். போட்டி கைவிடப்படுவதற்கு முன்னர் நடுவர்கள் ஆறு முறை மைதானத்தை சோதனையிட்டமை குறிப்பிடத்தக்கது.
2023 உலகக் கிண்ணத்தின் பின்னரே இந்திய அணி லக்னோவில் சர்வதேச போட்டி ஒன்றில் ஆடவிருந்தனர். வட இந்தியாவில் நிலவும் குளிர் காலநிலை கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்த டி20 தொடரில் இந்திய அணி 2–1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே தொடரை தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி அஹமதாபாத்தில் இன்று (19) நடைபெறவுள்ளது.


