Sports

febr12

புள்ளிகளை அதிகரிக்கும் எதிர்பார்ப்புடன் இலங்கை இன்று ஓமானுடன் பலப்பரீட்சை

டி20 உலகக் கிண்ணத்தில் பி குழுவுக்கான தனது இரண்டாவது போட்டியில் இலங்கை அணி ஓமானை இன்று கண்டி, பல்லேகலவில் எதிர்கொள்ளவுள்ளது. பகல் போட்டியாக காலை 11 மணிக்கு ஆரம்பமாகும் இந்த ஆட்டம் இலங்கை அணிக்கு அதிக சவாலானதாக இல்லாதபோதும் புள்ளிகள் மற்றும் ரன் ரேட்டை அதிகரித்து சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதற்கு முக்கியமானதாக உள்ளது. இலங்கை அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஒப்பீட்டளவில் இலங்கை அணி அடுத்து ஆடவுள்ள இரண்டு […]

புள்ளிகளை அதிகரிக்கும் எதிர்பார்ப்புடன் இலங்கை இன்று ஓமானுடன் பலப்பரீட்சை Read More »

feb12

இந்திய – பாக். போட்டியால் டிக்கெட் விலைகள் உச்சம்

டி20 உலகக் கிண்ணத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி உறுதி செய்யப்பட்டதை அடுத்து ரசிகர்கள் கடைசி நேர பயண ஏற்பாடுகளை செய்து வருவதால் டெல்லி மற்றும் மும்பை தொடக்கம் இலங்கைக்கான டிக்கெட் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்தப் போட்டியை புறக்கணிக்கும் முடிவை பாகிஸ்தான் கடந்த திங்கட்கிழமை இரவு கைவிட்டது. அது தொடக்கம் போட்டியை காண்பதற்காக இலங்கை வருவதற்கான முயற்சிகளை இந்திய ரசிகர்கள்

இந்திய – பாக். போட்டியால் டிக்கெட் விலைகள் உச்சம் Read More »

fe11

டென்னிஸ் ஆடும் தகுதி பட்டியலில் செரீனா பெயர்

செரீனா வில்லியம்ஸ் எதிர்வரும் பெப்ரவரி 22 ஆம் திகதி தொடக்கம் டென்னிஸ் போட்டிகளுக்கு திரும்புவதற்கான தகுதிப் பட்டியலில் இடம்பெற்றபோதும், 23 தடவைகள் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருக்கும் அவர் போட்டிகளுக்கு திரும்புவதை இன்னும் உறுதி செய்யவில்லை. கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட் சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாட்டு நிறுவனத்தின் மறுசீரமைக்கப்பட்ட பட்டியலிலேயே செரீனாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால் அவருக்கு போட்டிகளில் பங்கேற்க முடியும் என்று அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. எனினும் 2022 அமெரிக்க ஓபன் போட்டியை அடுத்து டென்னிஸ் போட்டிகளுக்கு

டென்னிஸ் ஆடும் தகுதி பட்டியலில் செரீனா பெயர் Read More »

feb11

உபாதைக்கு உள்ளான ஹசரங்க இலங்கை அணியிலிருந்து நீக்கம்

இடது பின் தொடை பகுதியில் உபாதைக்கு உள்ளாகி இருக்கும் இலங்கை முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க டி20 உலகக் கிண்ண போட்டியில் இருந்து விலகியுள்ளார். அயர்லாந்துக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியின்போது ஹசரங்கவின் உபாதை மோசமடைந்த நிலையில், பல வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனை அடுத்து டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் பிரதான பந்துவீச்சாளராக இருக்கும் ஹசரங்க

உபாதைக்கு உள்ளான ஹசரங்க இலங்கை அணியிலிருந்து நீக்கம் Read More »

feb10

ஸ்கொட்லாந்து சிம்பாப்வே வெற்றி

டி20 உலகக் கிண்ணத்தில் நேற்று (09) நடந்த சி குழுவுக்கான போட்டியில் ஸ்கொட்லாந்தும், பி குழுவுக்கான ஆட்டத்தில் சிம்பாப்வே அணியும் இலகு வெற்றியீட்டின. ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் முதல்முறையாக டி20 உலகக் கிண்ணத்தில் களமிறங்கிய இத்தாலி அணியை ஸ்கொட்லாந்து 73 ஓட்டங்களால் வீழ்த்தியது. முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்களுக்கும் 4 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை பெற்ற நிலையில் இத்தாலி அணி 16.4 ஓவர்களில் 134 ஓட்டங்களுக்கு சுருண்டது.இதேவேளை ஓமானுக்கு

ஸ்கொட்லாந்து சிம்பாப்வே வெற்றி Read More »

fe10

இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் இணக்கம்!

– புறக்கணிப்பு முடிவை மாற்றிய பாகிஸ்தான் – ஜனாதிபதி அநுர குமார நன்றி தெரிவிப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) கொழும்பில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. குறித்த போட்டியைப் புறக்கணிப்பதாக முன்னதாக அறிவித்திருந்த பாகிஸ்தான் அரசாங்கம், தற்போது அந்த முடிவை மீளப்பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுத்த பங்களாதேஷ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்தப் போட்டியைப் புறக்கணிக்கப் பாகிஸ்தான் அரசு தீர்மானித்திருந்தது.

இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் இணக்கம்! Read More »

febr9

ICC U19 World Cup 2026; பட்டம் வென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு

2026ஆம் ஆண்டுக்கான ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் (ICC Under-19 Cricket World Cup 2026) வரலாற்றுச் சாதனை படைத்து சம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, நாடு திரும்பிய நிலையில் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. அணித்தலைவர் ஆயுஷ் மத்ரே (Ayush Mhatre) தலைமையிலான இந்திய அணி, இந்தத் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கிண்ணத்தைக் கைப்பற்றியது. அணித்தலைவர் மத்ரே மற்றும் சக வீரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) உள்ளிட்ட

ICC U19 World Cup 2026; பட்டம் வென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு Read More »

feb9

இந்தியாவுடனான போட்டியை புறக்கணிப்பதற்கு பாக். சபையிடம் காரணத்தை கேட்கிறது ஐ.சி.சி.

பாகிஸ்தானிடம் இலங்கையும் கோரிக்கை இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கிண்ண போட்டியை புறக்கணிப்பதற்கான விரிவான காரணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐ.சி.சி.) கோரியுள்ளது. எனினும் அரசின் உத்தரவின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஐ.சி.சி. இற்கு பாக். சபை மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருப்பதாக தெரியவருகிறது. இந்த விவகாரம் தொடர்பில் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு ஐ.சி.சி. மற்றும் பாக். கிரிக்கெட் சபை தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கும் நிலையிலேயே இந்த விளக்கம் கோரப்பட்டுள்ளது. இதில்

இந்தியாவுடனான போட்டியை புறக்கணிப்பதற்கு பாக். சபையிடம் காரணத்தை கேட்கிறது ஐ.சி.சி. Read More »

febr6

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இறுதியில் இன்று பலப்பரீட்சை

19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இன்று (06) ஹராரேவில் மோதவுள்ளன. இதில இந்திய இளையோர்கள் ஆறாவது முறையாக கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் களமிறங்கவிருக்கு அதேநேரம் இங்கிலாந்து அணி 1998 இன் பின்னர் முதல் முறையாக கிண்ணத்தை வெல்ல எதிர்பார்த்துள்ளது. ஹராரேவில் நேற்று முன்தினம் (04) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தனை எதிர்கொண்ட இந்திய அணி 311 என்ற சாதனை வெற்றி இலக்கை 3 விக்கெட்டுகளை மாத்திரம்

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இறுதியில் இன்று பலப்பரீட்சை Read More »

feb6

2026 T20 உலகக் கிண்ண வர்ணனையாளர் குழுவில் இலங்கையைச் சேர்ந்த நால்வர்

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கிண்ணத் (ICC T20 World Cup 2026) தொடருக்கான வர்ணனையாளர் குழுவில் இலங்கையைச் சேர்ந்த நான்கு முக்கிய பிரமுகர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். வழங்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இலங்கையின் கிரிக்கெட் நட்சத்திரங்களான குமார் சங்கக்கார, அஞ்சலோ மெத்தியூஸ், ரசல் ஆர்னோல்ட் மற்றும் ரோஷன் அபேசிங்க ஆகியோர் இந்த உத்தியோகபூர்வ வர்ணனையாளர் குழுவில் இடம்பிடித்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ICC) அறிவிக்கப்பட்டுள்ள இக்குழுவில் அனுபவம் வாய்ந்த இலங்கை வர்ணனையாளர்கள் மற்றும் வீரர்கள் உள்வாங்கப்பட்டிருப்பது

2026 T20 உலகக் கிண்ண வர்ணனையாளர் குழுவில் இலங்கையைச் சேர்ந்த நால்வர் Read More »