ஸ்கொட்லாந்து சிம்பாப்வே வெற்றி

feb10

டி20 உலகக் கிண்ணத்தில் நேற்று (09) நடந்த சி குழுவுக்கான போட்டியில் ஸ்கொட்லாந்தும், பி குழுவுக்கான ஆட்டத்தில் சிம்பாப்வே அணியும் இலகு வெற்றியீட்டின.

ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் முதல்முறையாக டி20 உலகக் கிண்ணத்தில் களமிறங்கிய இத்தாலி அணியை ஸ்கொட்லாந்து 73 ஓட்டங்களால் வீழ்த்தியது. முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்களுக்கும் 4 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை பெற்ற நிலையில் இத்தாலி அணி 16.4 ஓவர்களில் 134 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதேவேளை ஓமானுக்கு எதிராக கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடந்த போட்டியில் சிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.