டென்னிஸ் ஆடும் தகுதி பட்டியலில் செரீனா பெயர்

fe11

செரீனா வில்லியம்ஸ் எதிர்வரும் பெப்ரவரி 22 ஆம் திகதி தொடக்கம் டென்னிஸ் போட்டிகளுக்கு திரும்புவதற்கான தகுதிப் பட்டியலில் இடம்பெற்றபோதும், 23 தடவைகள் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருக்கும் அவர் போட்டிகளுக்கு திரும்புவதை இன்னும் உறுதி செய்யவில்லை. கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட் சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாட்டு நிறுவனத்தின் மறுசீரமைக்கப்பட்ட பட்டியலிலேயே செரீனாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால் அவருக்கு போட்டிகளில் பங்கேற்க முடியும் என்று அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது.

எனினும் 2022 அமெரிக்க ஓபன் போட்டியை அடுத்து டென்னிஸ் போட்டிகளுக்கு விடைகொடுத்த 44 வயதாகும் செரீனா, மீண்டும் போட்டிகளுக்கு திரும்புவது குறித்து எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

டென்னிஸ் உலகில் செரீனாவை விடவும் மார்கிரட் கோர்ட் மற்றும் நொவக் டுஜோவிக் ஆகியோர் மாத்திரமே அதிக ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். எனினும் செரீனா 2017 ஆம் ஆண்டிலேயே கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஒன்றை கடைசியாக வென்றிருந்தார். செரீனாவின் மூத்த சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ் தொடர்ந்து டென்னிஸ் போட்டிகளில் ஆடி வருகின்றார்.