Sports

febr5

உலகக் கிண்ணத்தின் டிக்கெட் விற்பனை நிலையங்கள் திறப்பு

டி20 உலகக் கிண்ணத்தை பார்வையிடுவதற்கான டிக்கெட் விற்பனை நிலையங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (03) தொடக்கம் திறக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதன்படி, இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திலுள்ள விற்பனை நிலையம் பெப்ரவரி 3 முதல் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும். கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் 1ஆம் இலக்க வாயிலில் அமைந்துள்ள விற்பனை நிலையம் பெப்ரவரி 4ஆம் திகதி முதலும், கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் 5ஆம் இலக்க வாயிலில் அமைந்துள்ள விற்பனை நிலையம் […]

உலகக் கிண்ணத்தின் டிக்கெட் விற்பனை நிலையங்கள் திறப்பு Read More »

feb5

கிரிக்கெட்டில் 73 புதிய விதி மாற்றங்கள் அறிமுகம்: ஒக்டோபர் 1இல் நடைமுறை

ஹிட் விக்கெட், துடுப்பு, ஓவர் த்ரோவில் முக்கிய விளக்கம் கிரிக்கெட் விதிகளை நிர்ணயிக்கும் மெரில்போன் கிரிக்கெட் கழகம் எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் புதிய விதி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் விதிகளில் புதிய பதிப்பிலேயே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2017 சட்டக் கோவையின் நான்காவது பதிப்பாகவே இந்த விதி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அனைத்தும் உள்ளடக்கப்படுகின்றவாறும், நவீன போட்டிக்கு பொருந்தும் வகையிலும் விதிகளை புதுப்பிப்பதை இலக்காகக் கொண்டே எம்.சி.சி.

கிரிக்கெட்டில் 73 புதிய விதி மாற்றங்கள் அறிமுகம்: ஒக்டோபர் 1இல் நடைமுறை Read More »

febr4

டி20 உலகக் கிண்ணத்தில் ஆட இலங்கை வந்தது பாகிஸ்தான்

டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் (02) இலங்கை வந்தடைந்தது. இந்தியாவுக்கு எதிரான முக்கியமான போட்டியை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையிலேயே பாகிஸ்தான் அணி இம்முறை உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ளது. அத்துடன் உலகக் கிண்ணத்தை இலங்கையுடன் இணைந்து நடத்தும் நாடான இந்தியா செல்லாத அந்த அணி தனது அனைத்துப் போட்டிகளையும் இலங்கையிலேயே ஆடவுள்ளது. இலங்கை வருவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு பேசிய பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் அலி அகா, ‘நாங்கள் சபையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட

டி20 உலகக் கிண்ணத்தில் ஆட இலங்கை வந்தது பாகிஸ்தான் Read More »

feb4

உலகக் கிண்ணத்தின்போதும் இலங்கை அணியுடன் பணியாற்ற மாலிங்க நியமனம்

டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் நான்கு ஆரம்ப சுற்று போட்டிகளுக்கும் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசனை பயிற்சியாளராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் அணித் தலைவருமான மாலிங்க கடந்த மாதம் வரை அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசனை பயிற்சியாளராக குறுகிய காலம் செயற்பட்ட நிலையிலேயே அவர் மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதி தொடக்கம் இலங்கை அணியுடன் பணியாற்றவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்

உலகக் கிண்ணத்தின்போதும் இலங்கை அணியுடன் பணியாற்ற மாலிங்க நியமனம் Read More »

feb3

உலகக் கிண்ணத்திற்கு முன் ஆறுதல் வெற்றிக்காக இலங்கை இன்று களத்தில்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு டி20 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து தொடரை இழந்துள்ள இலங்கை அணி உலகக் கிண்ணத்தை நெருங்கி இருக்கும் நிலையில் ஆறுதல் வெற்றி ஒன்றுக்காக இன்று மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் களமிறங்கவுள்ளது. முதல் இரு போட்டிகளும் நடைபெற்ற அதே பல்லேகலவில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டிக்கு மழை இடையூறு செய்யும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் அதற்கு ஏற்ப போட்டிக்கான திட்டத்தை வகுப்பது கட்டாயமாக உள்ளது. இங்கு நடந்த

உலகக் கிண்ணத்திற்கு முன் ஆறுதல் வெற்றிக்காக இலங்கை இன்று களத்தில் Read More »

febr2

யாழ். மண்ணை அலங்கரிக்கும் உலகக் கிண்ணம்

– யாழ். மாவட்ட செயலகத்திற்கு வருகை 2026 – T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையிலும் இந்தியாவிலும் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் நேற்று (01) மு.ப 03.15 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு எடுத்துவரப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்றலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். மாநகர சபை முதல்வர் கெளரவ மதிவதனி விவேகானந்தராஜா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் T20 உலகக்கிண்ணம் காட்சிப்படுத்தப்பட்டது. இதன் போது அதிகாரிகள், விளையாட்டு

யாழ். மண்ணை அலங்கரிக்கும் உலகக் கிண்ணம் Read More »

feb2

பெப்ரவரி 15 மோதல் இரத்து: இந்தியாவுக்கு எதிராக விளையாடப் போவதில்லை

– ஏனைய போட்டிகளில் பாகிஸ்தான் பங்கேற்கும் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ICC T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவிருந்த போட்டியில் மாத்திரம் பாகிஸ்தான் அணி விளையாடாது என தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானமானது அரசியல் அல்லது பாதுகாப்பு காரணங்களால் எடுக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கிண்ணத் தொடரின் ஏனைய போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் நிலையில்,

பெப்ரவரி 15 மோதல் இரத்து: இந்தியாவுக்கு எதிராக விளையாடப் போவதில்லை Read More »

feb1

நல்லூர் முன்றலில் உலக கிண்ணம்

T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் இன்று (01)யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் , நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு அருகிலும், துரையப்பா விளையாட்டு அரங்கிலும், யாழ்ப்பாணம் கோட்டையிலும், யாழ்ப்பாணம் நூலகத்திலும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இந்த முறை இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன. இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி நெதர்லாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில்

நல்லூர் முன்றலில் உலக கிண்ணம் Read More »

feb31

T20 தொடரில் பங்கேற்க இலங்கை வந்துள்ள நெதர்லாந்து கிரிக்கெட் அணி

T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக நெதர்லாந்து கிரிக்கெட் அணி இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு வருகை தந்தது. தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்து அணி மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன. குறித்த போட்டி அடுத்த மாதம் 07ஆம் திகதி SSC மைதானத்தில் இடம்பெறும். இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து இம்முறை T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. இந்நிலையில் 25 பேர் கொண்ட நெதர்லாந்து கிரிக்கட்

T20 தொடரில் பங்கேற்க இலங்கை வந்துள்ள நெதர்லாந்து கிரிக்கெட் அணி Read More »

janu30

ஒளிரும் எஸ்.எஸ்.சி. மைதானம்

புதிதாக மின்னொளி பொருத்தப்பட்ட கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தின் மின்விளக்குகள் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் நேற்று முன்தினம் (28) இரவு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இதனை ஆரம்பித்து வைக்கும் வகையில் மின்னொளில் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜயசூரிய, இலங்கை டி20 அணித் தலைவர் தசுன் ஷானக்கவின் பந்தை எதிர்கொண்டார். இதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.சி. அணிக்கும் இலங்கை கிரிக்கெட் சபை வளர்ந்து வரும் அணிக்கும் இடையே நட்புறவு போட்டி ஒன்றும் நடைபெற்றது. எதிர்வரும்

ஒளிரும் எஸ்.எஸ்.சி. மைதானம் Read More »