T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக நெதர்லாந்து கிரிக்கெட் அணி இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு வருகை தந்தது.
தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்து அணி மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன.
குறித்த போட்டி அடுத்த மாதம் 07ஆம் திகதி SSC மைதானத்தில் இடம்பெறும்.
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து இம்முறை T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன.
இந்நிலையில் 25 பேர் கொண்ட நெதர்லாந்து கிரிக்கட் அணி இன்று முற்பகல் 11.25 இற்கு இந்தியாவின் சென்னை நகரிலிருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.122 விமானம் ஊடாக நாட்டிற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.


