Local

86bf51ac 8e5c 4124 ade4 6138a6353b1f

49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

– சுதந்திர தினத்தை முன்னிட்டு தீர்மானம் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு ஜனாதிபதி விசேட  பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34வது உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு, அவர்கள் பூர்த்தி செய்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு வாரம் என்ற அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், ரூ. 75,000 இற்கும் குறைந்த அபராதத் […]

49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு Read More »

untitled 93

‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு அபிவிருத்தி லொத்தர் சபை நிதியுதவி

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் பாதிப்புக்குள்ளான நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு அபிவிருத்தி லொத்தர் சபை 15.5 மில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கியது. இதற்குரிய காசோலையை அபிவிருத்தி லொத்தர் சபைத் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான   ஹேமந்த சுவர்ணதிலக, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில்  நேற்று   கையளித்தார். இந்த நிதி உதவி வழங்கும் நடவடிக்கையின்போது அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர்

‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு அபிவிருத்தி லொத்தர் சபை நிதியுதவி Read More »

fe 3

விரைவில் அனுபமுள்ள பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு – ஜனாதிபதி

பாடசாலையில் சேவையாற்றிய அனுபவமுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய ஆசிரியர் யாப்பிற்கமைய பரீட்சைக்கு முகம்கொடுக்குமாறு தான் அவர்களிடம் கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் அழைப்பிற்கிணங்க பாடசாலை அபிவிருத்தி உத்தியோகர்கள் சங்கத்திற்கும் ஜனாதிபதிக்குமிடையில் இன்றைய தினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. அனைவரினதும் தொழில் அபிலாஷைகள் மற்றும் கௌரவத்தை பாதுகாப்பது அரசின் நோக்கமென ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

விரைவில் அனுபமுள்ள பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு – ஜனாதிபதி Read More »

feb 3

காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி வைக்கப்பட்டது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் மாவட்ட செயலகமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் கலைஞர்களுக்கு கலைஞர் சுவதம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் இன்று (03) காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு எஸ். சுதர்சனின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலக்கிய சேவைக்காக எழுத்தாளர் நூருல்

காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. Read More »

jewellery

ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ. 12,000 வரை குறைப்பு

– 24 கரட் தங்கம் (ஒரு பவுண்): ரூ. 368,000– 22 கரட் தங்கம் (ஒரு பவுண்): ரூ. 337,600 உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வௌ்ளிக்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 4,889 அமெரிக்க டொலராக காணப்பட்டது. எனினும் இன்றைய (02) தினம் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 4687 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கு நிகராக இலங்கையிலும் தங்கத்தின் விலை

ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ. 12,000 வரை குறைப்பு Read More »

01 2

மாணவர்களுக்கு முதல் கட்டமாக ரூ. 25,000 வழங்கிவைப்பு

72 சதவீதமானோருக்கு கொடுப்பனவு வழங்கல் தித்வா புயல் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களில் இதுவரை 72 சதவீதமான மாணவர்களுக்கு முதல் கட்டமாக 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார தெரிவித்தார். அதாவது இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 195,154 பாடசாலை மாணவர்களில் 14,382 பேருக்கே முதல் கட்ட 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக

மாணவர்களுக்கு முதல் கட்டமாக ரூ. 25,000 வழங்கிவைப்பு Read More »

2.2feb

தோட்டாக்களுடன் காணமால் போன கைத்துப்பாக்கி; 2 பொலிஸ் அதிகாரிகள் கைது

– ஆவணங்களைப் பரிசோதித்த போது தெரியவந்துள்ளது மத்துகம பொலிஸ் நிலையத்தில் தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் அந்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மத்துகம பொலிஸ் நிலையத்தில் இருந்த கைத்துப்பாக்கி ஒன்றும் 10 தோட்டாக்களும் காணாமல் போனதாக நேற்று (01) அறிவிக்கப்பட்டது.மத்துகம பொலிஸ் நிலையத்தின் உப சேவைப் பொறுப்பில் இருந்த கைத்துப்பாக்கியும், 10 தோட்டாக்கள் அடங்கிய மெகஸின் ஒன்றுமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகப் பொலிஸ் ஊடகப்

தோட்டாக்களுடன் காணமால் போன கைத்துப்பாக்கி; 2 பொலிஸ் அதிகாரிகள் கைது Read More »

2.2

மீண்டும் திறக்கப்பட்ட நுகேகொடை லங்கா சீனி விற்பனை நிலையம்

– வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது நிர்வாகம் நுகேகொடை சில்லறை விற்பனை நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் பொய்யான தகவல்களைத் தெளிவுபடுத்துவதற்காக லங்கா சீனி (தனியார்) நிறுவனம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நேற்று முன்தினம் (31), குறித்த விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டதன் காரணமாக, அன்றைய தினம் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று பௌர்ணமி (01) (Poya) தின விடுமுறை என்பதால், வழமையான விடுமுறை தின நடைமுறைக்கு

மீண்டும் திறக்கப்பட்ட நுகேகொடை லங்கா சீனி விற்பனை நிலையம் Read More »

gmoa (1)

அரச வைத்தியர்கள் பிள்ளைகளின் பாடசாலை அனுமதி பிரச்சினைகளுக்கு புதிய ஏற்பாடு

– முறையிட விசேட தொலைபேசி இலக்கம் அரசாங்க வைத்திய அதிகாரிகளின் பிள்ளைகளை பாடசாலைகளில் புதிதாக  இணைத்துக் கொள்ளும்போது  எதிர்கொள்ள நேரும் பிரச்சினைகளைத் தீர்க்க சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு தலையீடு செய்வதற்கு தீர்மானித்துள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அரச வைத்திய அதிகாரிகள் தங்கள் பிரச்சினைகளை சுகாதார மற்றும்  ஊடகத்துறை அமைச்சின் பணிப்பாளரான  எரங்கா ஜயவர்தனவிடம்  அது தொடர்பில் அறிவிக்குமாறும்  அந்த அமைச்சு அறிவித்துள்ளது.

அரச வைத்தியர்கள் பிள்ளைகளின் பாடசாலை அனுமதி பிரச்சினைகளுக்கு புதிய ஏற்பாடு Read More »

2...1

எரிபொருள் விலை குறைந்தாலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படாது

– ஜூலைக்கு முன் ரூ. 5 – ரூ. 6 வரை அதிகரிக்க வேண்டும் எரிபொருள் விலை சிறிய அளவில் குறைக்கப்பட்டாலும்  பஸ் கட்டணங்களை அதிகரிக்க நேரிடும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதத்திற்கு முன் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர்,  குறைந்தபட்சம் அதனை ரூ. 5 முதல் ரூ. 6 வரை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில்

எரிபொருள் விலை குறைந்தாலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படாது Read More »