Local

2,, 1

பெண்களை இரவில் பணிக்கு அமர்த்துவது தொடர்பில் திருத்தப்பட்ட வர்த்தமானி வெளியீடு

பெண்களை இரவு வேளையில் பணிக்கு அமர்த்துவதற்கான அனுமதியை வழங்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் பெண்களை துப்புரவுப் பணியாளர்களாகவும், உணவகங்களில் உணவு பரிமாறும் பணிகளுக்காகவும்  இரவு நேரத்தில் பணிக்கு அமர்த்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அந்தக் காலப்பகுதியில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பெண்களுக்காகப் பொருத்தமான தங்குமிட வசதி, போக்குவரத்து வசதி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்கள் முறையாக வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலமைச்சர் அனில் ஜயந்த பெனாண்டோவினால் கடைகள் மற்றும் அலுவலக […]

பெண்களை இரவில் பணிக்கு அமர்த்துவது தொடர்பில் திருத்தப்பட்ட வர்த்தமானி வெளியீடு Read More »

1,,31

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீண்டும் நீடிப்பு

இலங்கையில் பல முக்கியமான துறைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மின்சாரம், எரிபொருள், சுகாதார சேவைகள், போக்குவரத்து, வீதிகள், நீர் வழங்கல் மற்றும் உணவுப் பொருட்கள் விநியோகம் ஆகியன அத்தியாவசிய சேவைகளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும், மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கள உத்தியோகத்தர்கள்,அம்பியூலன்ஸ் சேவைகள், மத்திய வங்கி, அரச வங்கிகள் மற்றும் காப்புறுதிச் சேவைகளும் இந்த வர்த்தமானியின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், நீர்ப்பாசனம், தொலைபேசி மற்றும்

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீண்டும் நீடிப்பு Read More »

1.31

ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ. 20,000 ஆல் குறைப்பு

– உலகச் சந்தை மற்றும் உள்ளூர் சந்தையில் திடீர் வீழ்ச்சி உலகச் சந்தை மற்றும் உள்ளூர் சந்தையிலும் தங்கத்தின் விலை, ஜனவரி மாதத்தின் இறுதி நாளான இன்றைய தினம் எதிர்பாராத விதமாக திடீர் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கையில் நேற்று முன்தினம் தங்கத்தின் விலை ரூ. 15,000 ஆல் அதிகரித்திருந்த நிலையில், இன்று (31) ஒரே நாளில் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ. 20,000 ஆல் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இன்றைய

ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ. 20,000 ஆல் குறைப்பு Read More »

election 1200px 22 10 20 1000x600 3

வாக்காளர் பெயர்ப் பட்டியல் திருத்தப் பணிகள் நாளை முதல்  ஆரம்பம் 

– வீடு வீடாகச் செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை (01) முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகதேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை அந்த பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும்  தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி தமது வீட்டின் செல்லுபடியான வாக்காளர் பெயர் பட்டியலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் 2026 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டிய

வாக்காளர் பெயர்ப் பட்டியல் திருத்தப் பணிகள் நாளை முதல்  ஆரம்பம்  Read More »

625091096 1389512286551530 971088729779800718 n

அமெரிக்காவின் ‘நேவி சீல்’ பயிற்சி பெற்ற முதல் இலங்கை கடற்படை அதிகாரி கொயான் சாமிதவின் இறுதிச்சடங்கு

– 28 வயதில் காலமானார் அமெரிக்காவின் ‘நேவி சீல்’ பயிற்சிப் பாடநெறியைப் பூர்த்தி செய்த முதலாவது இலங்கை கடற்படை அதிகாரி எனக் கருதப்படும் லெப்டினன்ட் கொயான் சாமிதவின் இறுதிச்சடங்கு நேற்று (30) கம்பஹா, ஒருதொட்ட பிரதேசத்தில் நடைபெற்றது. இலங்கை கடற்படையின் விசேட படகுப் படையணியின் லெப்டினன்ட் ஆக திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த 28 வயதான கொயான் சாமித அண்மையில் காலமானார். எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக வெலிசர,

அமெரிக்காவின் ‘நேவி சீல்’ பயிற்சி பெற்ற முதல் இலங்கை கடற்படை அதிகாரி கொயான் சாமிதவின் இறுதிச்சடங்கு Read More »

fuel price increased oct 02 1 1

எரிபொருள் விலை திருத்தம்: பெற்றோல் 92; ஒட்டோ டீசல் குறைப்பு

– ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் மற்றும் லங்கா ஓட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் லீட்டருக்கு ரூ. 2 வீதம் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி,ஒட்டோ டீசல்: ரூ. 279 – ரூ. 2 ஆல் அதிகரிப்பு – ரூ. 277பெற்றோல் 92: ரூ. 294 –

எரிபொருள் விலை திருத்தம்: பெற்றோல் 92; ஒட்டோ டீசல் குறைப்பு Read More »

nw05 nandalal

2026இல் வாகன இறக்குமதி அதிகரிக்கும் சாத்தியம்

-மத்திய வங்கி ஆளுநர் வாகனத் தேவை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த ஆண்டு வாகன இறக்குமதிக்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் நேற்று முன்தினம் (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வாகன இறக்குமதிக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை செலவிட்டதாகவும் ஆளுநர் கூறியுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட

2026இல் வாகன இறக்குமதி அதிகரிக்கும் சாத்தியம் Read More »

garment

ஆடைகள் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

-ஐரோப்பாவிற்கான ஏற்றுமதி 6.76 வீதத்தினால் அதிகரிப்பு நாட்டின் ஆடை ஏற்றுமதி வருமானம் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது. ஆடை சங்கங்களின் சம்மேளனம் (JAAF) வெளியிட்டுள்ள தரவுகளுக்கு அமைய டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானமானது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 23.03 மில்லியன் டொலர்களால் அதிகரிப்பைக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு பிரதானமாக அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைத்த கேள்வியின் அதிகரிப்பே காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்தக் கேள்வி அதிகரிப்புடன் டிசம்பர் மாதத்தில்

ஆடைகள் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு Read More »

1,,,.30

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது இன்று (30) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் வைத்து கையெழுத்திடப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகிர்த்தி, சம்பள நிர்ணய சபையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, ஜனாதிபதியினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1,750 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்போது அடிப்படைச் சம்பளத்தை 1,350 ரூபாவிலிருந்து 1,550

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு ஒப்பந்தம் கைச்சாத்து! Read More »

1,30

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகள் நாளை மறுதினம் ஆரம்பம்!

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை மறுதினம் (01) முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இம்முறை அந்தப் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, தமது வீட்டிற்குரிய செல்லுபடியான வாக்காளர் பெயர் பட்டியலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் 2026 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டிய பெயர்கள் தொடர்பிலான தகவல்களை கணக்கெடுப்பு அதிகாரிகளிடம் வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு அனைத்துத்

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகள் நாளை மறுதினம் ஆரம்பம்! Read More »