Local

july 15

தேர்தல் ஆணையகத்தின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதேச மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் நாற்பது சதவீதத்தினரின் பெயர்கள் இன்னும் அந்தந்த அரசியல் கட்சிகளால் ஒப்படைக்கப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை சபைகளில் உத்தியோகபூர்வ பதவிக்காலம் தொடங்குவதற்கு முன்னர் வர்த்தமானியில் அறிவிக்கப்பட வேண்டும் என்பதால், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களும் வேட்பாளர்களின் பெயர்களை விரைவில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கோரியுள்ளார்.

தேர்தல் ஆணையகத்தின் விசேட அறிவிப்பு Read More »

1000795154 745x445

கொழும்பு மாநகர சபையின் சுயேட்சை குழு தலைவர்களுடன் ஜனாதிபதி இன்று கலந்துரையாடுகிறார்

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஐந்து சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (19) மாலை 4.00 மணிக்கு சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்த உள்ளார். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐந்து சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள் கொழும்பு மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிறுவுவதற்கான ஆதரவைப் பெறுவதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கம் என்று அரசாங்கக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பு மாநகர சபையின் சுயேட்சை குழு தலைவர்களுடன் ஜனாதிபதி இன்று கலந்துரையாடுகிறார் Read More »

1000792849 800x445

மின் கட்டணத்தை 18.3 வீதம் அதிகரிக்க மின்சார சபை யோசனை

உள்நாடு மின் கட்டணத்தை 18.3 வீதம் அதிகரிக்க மின்சார சபை யோசனை May 17, 2025 செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின்கட்டணத்தை 18.3 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஜூன் முதல் வாரத்தில் இந்த விடயம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல்

மின் கட்டணத்தை 18.3 வீதம் அதிகரிக்க மின்சார சபை யோசனை Read More »

1000790445 800x445

கற்பிட்டி கோட்டமட்ட மெய்வல்லுனர் போட்டியில் கண்டல்குழி முஸ்லிம் பாடசாலை வரலாற்றுச் சாதனை

இம்முறை நடைபெற்ற கற்பிட்டி கோட்ட மட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் கண்டல்குழி முஸ்லிம் மகா வித்யாலயம் 4 முதலாம் இடத்தினையும், 2 இரண்டாம் இடத்தையும், 1 மூன்றாம் இடத்தினையும் பெற்று மொத்தமாக 27 புள்ளிகளை பெற்று கற்பிட்டி கோட்டமட்ட தரப்படுத்துதலில் கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலயம் எட்டாம் இடத்தை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலயின் அதிபர் எம்.பீ.எம் ஜெசீம் தெரிவித்துள்ளார். இருபது வயது பிரிவில் எம்.எப் நப்ரினா ஈட்டி எறிதல் மற்றும் தட்டு எறிதல் ஆகிய

கற்பிட்டி கோட்டமட்ட மெய்வல்லுனர் போட்டியில் கண்டல்குழி முஸ்லிம் பாடசாலை வரலாற்றுச் சாதனை Read More »

1000789358 800x445

இலங்கை உயர் நீதிமன்றின் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் கல்பிட்டியை சேர்ந்த அப்ரா ஹுசைன்

கல்பிட்டியை சேர்ந்த அப்துல் ஹுசைன் மற்றும் சித்தி நஸ்ரியா (சமுர்த்தி உத்தியோகத்தர்) தம்பதிகளின் புதல்வியான பாத்திமா அப்ரா இன்று (14.05.2025) உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இவர் கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் கல்வி கற்று, 2018ம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் 3A சித்தியை பெற்று புத்தள மாவட்டத்தில் 4ஆவது இடத்தை பெற்றதுடன் கொழும்பு பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகி அங்கு சட்ட பீடத்தில் சட்டப்படிப்பினை நிறைவு செய்து சட்ட இளமானி பட்டத்தையும்

இலங்கை உயர் நீதிமன்றின் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் கல்பிட்டியை சேர்ந்த அப்ரா ஹுசைன் Read More »

unnamed 3

கட்டார் நாட்டிற்கான முன்னாள் இலங்கை தூதுவரான சட்டத்தரணி ஏ.எல்.எம்.யூசுப் காலமானார்..!

மாவனல்லை அங்வாரத்தைச் சேர்ந்த  கட்டார் நாட்டிற்கான முன்னாள் இலங்கை தூதுவரான சட்டத்தரணி ஏ.எல்.எம்.யூசுப் அவர்கள் தனது  91 ஆவது வயதில் காலமானார்.  மாவனல்லை கிருங்கதெனிய மஸ்ஜிதுன் நூர் பள்ளி வாசல் பரிபாலன சபை உட்பட பல சமூக சேவை பணி செய்த இவர் வறிய மாணவர்களின் கல்வி பணிக்காக மாதாந்த நிதி ஒத்துழைப்புகளை வழங்கி வந்துள்ளார். மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரி ,சாஹிரா தேசிய கல்லூரி,மயுரபாத தேசிய கல்லூரி என்பவற்றுக்கு பல உதவிகளை செய்துள்ளார்.  சமூக சேவையாளரான

கட்டார் நாட்டிற்கான முன்னாள் இலங்கை தூதுவரான சட்டத்தரணி ஏ.எல்.எம்.யூசுப் காலமானார்..! Read More »

1000786037 768x297

இரம்பொடை பஸ் விபத்து; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்வு

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 21 ஆக அதிகரித்துள்ளதாக பிரதி போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரம்பொடை பஸ் விபத்து; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்வு Read More »