ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ. 12,000 வரை குறைப்பு

jewellery

– 24 கரட் தங்கம் (ஒரு பவுண்): ரூ. 368,000
– 22 கரட் தங்கம் (ஒரு பவுண்): ரூ. 337,600

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த வௌ்ளிக்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 4,889 அமெரிக்க டொலராக காணப்பட்டது.

எனினும் இன்றைய (02) தினம் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 4687 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதற்கு நிகராக இலங்கையிலும் தங்கத்தின் விலை தொடர்ந்தும் பாரியளவில் வீழ்ச்சி அடைந்து வருகின்றது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ. 12,000 வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இன்றைய தங்க நிலவரம்:

புதிய தரவுகளின்படி, இலங்கையில் தங்கத்தின் விலைகள் பின்வருமாறு பதிவாகியுள்ளன:
• 24 கரட் தங்கம் (ஒரு பவுண்): ரூ. 368,000
• 22 கரட் தங்கம் (ஒரு பவுண்): ரூ. 337,600