‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு அபிவிருத்தி லொத்தர் சபை நிதியுதவி

untitled 93

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் பாதிப்புக்குள்ளான நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு அபிவிருத்தி லொத்தர் சபை 15.5 மில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கியது. இதற்குரிய காசோலையை அபிவிருத்தி லொத்தர் சபைத் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான   ஹேமந்த சுவர்ணதிலக, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில்  நேற்று   கையளித்தார். இந்த நிதி உதவி வழங்கும் நடவடிக்கையின்போது அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர் அநுர ஜயரத்ன, பிரதி பொது முகாமையாளர் (நிதி) கசுன் ஜயசூரிய மற்றும் பிரதி  பொது முகாமையாளர் (விற்பனை) சாணக்க தொடங்கொடகே ஆகியோர் கலந்துகொண்டனர்.