Local

11

அதிக விலைக்கு நீர் போத்தல் விற்ற வணிக நிலையத்திற்கு ரூ. 5 இலட்சம் அபராதம்

நுவரெலியாவில் அதிக விலைக்கு நீர் போத்தல்களை விற்ற ஒரு வணிக நிலையத்திற்கு ரூ. 5 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நுவரெலியாவில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்ற ஒரு வணிக நிலையத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சோதனைகளை நடத்தி வழக்கு தாக்கல் செய்திருந்தது. அதன்படி, நேற்று (10) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் மேற்படி வணிக நிலையத்திற்கு எதிரான வழக்கில், அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை செய்யப்பட்டதை சந்தேகநபர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு ரூ. 5 இலட்சம் […]

அதிக விலைக்கு நீர் போத்தல் விற்ற வணிக நிலையத்திற்கு ரூ. 5 இலட்சம் அபராதம் Read More »

10

மின்வலு சக்தி திட்டத்திற்காக உலக வங்கி 30 மில்லியன் டொலர் கடனுதவி

நாட்டின் மின் சக்தித் துறையில் “பாதுகாப்பானமற்றும் நிலையான சக்தி” என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி சங்கத்திடமிருந்து அரசாங்கம் 30 மில்லியன் டொலர்களைக் கடனாகப் பெற்றுக்கொண்டுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் உலக வங்கி குழுமத்தின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான பிராந்திய பணிப்பாளர் டேவிட் என். சிஸ்லன்டேவிட் என். சிஸ்லென் ஆகியோர் இதற்கான உத்தியோகபூர்வ உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டுக்கான 70 சதவீத மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து உற்பத்தி

மின்வலு சக்தி திட்டத்திற்காக உலக வங்கி 30 மில்லியன் டொலர் கடனுதவி Read More »

students

தரம் 05 – 10 வரையிலான வகுப்புகளுக்கு தவணைப் பரீட்சை இரத்து

அனர்த்த நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதன் காரணமாக, அடுத்து இடம்பெறவிருந்த தரம் 5 – 10 மாணவர்களுக்கான 3ஆம் தவணைப் பரீட்சை இடம்பெறாது. குறித்த தரத்திலுள்ள அனைத்து மாணவர்களும் அடுத்த தரத்திற்கு வகுப்பேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தரம் 11 (GCE O/L) மாணவர்களுக்கு மாத்திரம் முன்னோடிப் பரீட்சை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தரம் 05 – 10 வரையிலான வகுப்புகளுக்கு தவணைப் பரீட்சை இரத்து Read More »

8

கிழக்கில் இயல்பு வாழ்வைக் கொண்டுவர ஆளுநர் தலைமையில் துரித நடவடிக்கைகள்

கிழக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அம்மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ன சேகர தெரிவித்தார். அடை மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கின் பல்வேறு பிரதேசங்களுக்கும் ஆளுநர் நேரடியாகச் சென்று நிலைமைகளை அவதானித்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களையும் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடித் தேவைகளை வழங்குவதுடன், இதற்காக ஆளுநர் அலுவலகம் எந்த நேரத்திலும் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு

கிழக்கில் இயல்பு வாழ்வைக் கொண்டுவர ஆளுநர் தலைமையில் துரித நடவடிக்கைகள் Read More »

dec8

கொழும்பு–புத்தளம் ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் துரிதம்

சீரற்ற காலநிலையால் சேதமடைந்த கொழும்பு – புத்தளம் ரயில் பாதையின் குடா ஓயா மற்றும் நாத்தாண்டியா இடையிலான ரயில் பாதை துரிதமாக புனரமைக்கப்பட்டு வருகிறது. வலஹபிட்டிய உப ரயில் நிலையத்திற்கு அண்மையில், சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பழைமையான இரும்பு ரயில் பாலத்துடன் இணைந்த நிலப்பகுதி நீரோட்டத்தினால் சேதமடைந்திருந்த நிலையில், அதுவும் சீர்செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை ரயில்வே திணைக்களத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ், சிலாபம் – போலவத்தை ரயில் பராமரிப்புப் பிரிவின் ஊழியர்கள் மற்றும்

கொழும்பு–புத்தளம் ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் துரிதம் Read More »

pera

அனர்த்தத்தால் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு 5 பில்லியன் நட்டம்!

அண்மையில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு 3 பில்லியன் முதல் 5 பில்லியன் ரூபா வரையான (ரூபா300 கோடி முதல் 500 கோடி ) நட்டம் ஏற்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 25ஆம் திகதி பிற்பகல் முதல் பெய்த பலத்த மழையையும், கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டமையையும் அடுத்து, நவம்பர் 27ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் பாரிய வெள்ளம் பல்கலைக்கழகத்தை வந்தடைந்தது.

அனர்த்தத்தால் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு 5 பில்லியன் நட்டம்! Read More »

screenshot

யாழில் கரையொதுங்கும் வெள்ளை நுரை

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்று (07) காலை வெள்ளை நுரையில் ஒதுங்கியதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

யாழில் கரையொதுங்கும் வெள்ளை நுரை Read More »

dec6

புயல் அனர்த்தத்தில் சிக்கிய மக்களுக்கு வர்த்தக சங்க அணுசரனையுடன் பொலிஸாரின் உதவி

நாட்டில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் அனர்த்தத்தில் சிக்குண்டு நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கான நிவாரண உதவியாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்கங்களின் அணுசரனையுடன் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக முதற்கட்டமாக அத்தியவசிய உலர் உணவுப் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த உலருணவுப் பொருட்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை மருதமுனை சவளக்கடை சாய்ந்தமருது சம்மாந்துறை வர்த்தக சங்க பிரதிநிதிகள் பங்குபற்றலுடன் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கல்முனை மாநகர சபையின் கலாச்சார மண்டபத்தில் இன்று(6)

புயல் அனர்த்தத்தில் சிக்கிய மக்களுக்கு வர்த்தக சங்க அணுசரனையுடன் பொலிஸாரின் உதவி Read More »

5

கொழும்பு – கண்டி பிரதான வீதியை பயன்படுத்துவோர் கவனத்துக்கு

வாகன போக்குவரத்துக்காக திறக்கப்பட்டிருந்த கொழும்பு – – கண்டி பிரதான வீதியில் பயணிப்பதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பஹல கடுகன்னாவ – கனேதன்ன பகுதியிலும், கடுகன்னாவ நகரிலும் இவ்வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் வாகனங்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

கொழும்பு – கண்டி பிரதான வீதியை பயன்படுத்துவோர் கவனத்துக்கு Read More »

4

சூறாவளியால் தடைப்பட்ட மின் இணைப்புகளில் 85 சதவீதம் சீரமைக்கப்பட்டுள்ளது

அவசர அனர்த்த நிலைமை காரணமாக மின்சாரம் தடைப்பட்ட சுமார் 39 இலட்சம் நுகர்வோரில் சுமார் 85% சதவீதமானோரின் மின் இணைப்புகள் சீர் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் நொயெல் பிரியந்த தெரிவித்தார். அனர்த்த செயற்பாட்டு ஊடக மையத்தில் இன்று (04) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். நாடு முழுவதும் சுமார் 07 கோடி மின்சார நுகர்வோர் இருப்பதாகவும், அவர்களில் 39 இலட்சம் பேர் மின்சார இணைப்புகளை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சூறாவளியால் தடைப்பட்ட மின் இணைப்புகளில் 85 சதவீதம் சீரமைக்கப்பட்டுள்ளது Read More »