Local

dec4

சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய்வு

அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய, இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி கலந்து கொண்டார் . அனர்த்தத்தால் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளை முறையான வழிமுறையின்படி அடையாளம் காணுமாறும், இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான துல்லியமான தரவுகளை திறம்படப் பெறுவதற்கான விசேட பொறிமுறையை உருவாக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீண்டும் இதுபோன்ற பேரழிவால் […]

சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய்வு Read More »

dec3

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25,000 ரூபா நிதியுதவி

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த நிதியை ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளை அந்தந்த மாகாண மட்டத்தில் நிலைமைகளைக்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25,000 ரூபா நிதியுதவி Read More »

1

தடைப்பட்ட நீர் விநியோகங்கள் மூன்று நாட்களில் வழமைக்கு திரும்பும்

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நாட்டை பாதித்துள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள நீர் விநியோகத்தை மூன்று நாட்களுக்குள் வழமைக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.பி.சி.டி. பண்டார தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின்படி, பாவனையாளர்களுக்கு நீர் விநியோகத்தை உடனடியாக வழங்குவதற்காக முப்படைகள், நீர்ப்பாசனத் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மின்சார சபையிடமிருந்து உதவிகள் பெறப்பட்டுள்ளதாகவும்

தடைப்பட்ட நீர் விநியோகங்கள் மூன்று நாட்களில் வழமைக்கு திரும்பும் Read More »

dec1

இந்தியக் கடற்படை கப்பல் ‘சுகன்யா’ மூலம் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் சுகன்யா (INS Sukanya) கப்பல், 12 தொன் அளவிலான நிவாரணப் பொருட்களுடன் இன்று காலை திருகோணமலையில் உள்ள அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக, இந்தியக் கடற்படையினரால் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய மனிதாபிமான உதவி வழங்கப்பட்டுள்ளது. ​நிவாரணப் பொருட்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று ( 01) துறைமுகத்தில் நடைபெற்றது. ​இந்த 12 டன் நிவாரணப் பொருட்களில் உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள்

இந்தியக் கடற்படை கப்பல் ‘சுகன்யா’ மூலம் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல் Read More »

nov 29

கம்பளையை முற்றாக மூடிய காட்டாறு பெரு வெள்ளம்..!

கம்பளையில் 40 அடிக்கு மேல் வெள்ளம் 1000 கோடிக்கு மேல் சொத்துக்கள் சேதம். 100 பேருக்கு மேல் காணவில்லை. நுவரெலியா வீதி, கண்டி வீதி, நவாலப்பிட்டி வீதி, ஹெம்மாத்துகம வீதிகளும் அனைத்து வீதிகளும கடுமையான முறையில் சேதமுற்று போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தனது வீடு உட்பட தண்ணீரில் மூழ்கியுள்ளதாக கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பஸ்மின் ஷரீப் தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்மாவத்வத்துரப் பிரதேசம், கம்பளை வைத்தியசாலைப் பகுதி, கீல்ஸ் பகுதி, போத்தலப்பிட்டிய, இல்லவத்துர போன்ற சகல

கம்பளையை முற்றாக மூடிய காட்டாறு பெரு வெள்ளம்..! Read More »

nov28

டிட்வா திருகோணமலைக்கு தெற்கே 50 கி.மீ. தொலைவில்!

தொடர்ந்தும் நாடு முழுவதும் பலத்த மழை, பலத்த காற்று நாட்டின் பல இடங்களில் 150-200 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை சூறாவளி புயல் “டிட்வா” [Ditwah] திருகோணமலைக்கு தெற்கே சுமார் 50 கி.மீ தொலைவில் 8.1°N அகலாங்குகள் மற்றும் 81.2°E நெட்டாங்குகளுக்கு அருகில் மையம் கொண்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னெச்சரிக்கைகள் மற்றும் அறிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு

டிட்வா திருகோணமலைக்கு தெற்கே 50 கி.மீ. தொலைவில்! Read More »

nov 28

அதிக மழைவீழ்ச்சி மாத்தளையில்..!

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சி மாத்தளை மாவட்டத்தில் உள்ள கம்மடுவயில் பதிவாகியுள்ளது. அதன் அளவு 540 மி.மீ ஆகும். அதிக மழைவீழ்ச்சி பதிவான ஏனைய பிரதேசங்கள் பின்வருமாறு:  நுவரெலியா – கொத்மலை : 421 மி.மீ  கண்டி மாரஸ்ஸன : 403 மி.மீ  கண்டி – மொறஹேன : 394 மி.மீ  நுவரெலியா – வட்டவளை : 316 மி.மீ  பதுளை – ஹாலிஎல : 232 மி.மீ

அதிக மழைவீழ்ச்சி மாத்தளையில்..! Read More »

1

நவம்பர் 27, 28, 29 A/L பரீட்சைகள் டிசம்பர் 07, 08, 09 திகதிகளில்

UPDATE:  நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த. உயர் தர பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) ஆகிய தினங்களில் நடைபெறவிருந்த A/L பரீட்சைகள் நடைபெறாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இப்பரீட்சைகளுக்கான மாற்றுத் தினங்களாக டிசம்பர் மாதம் 07, 08 மற்றும் 09 ஆகிய தினங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்று

நவம்பர் 27, 28, 29 A/L பரீட்சைகள் டிசம்பர் 07, 08, 09 திகதிகளில் Read More »

nov 27

அரச நிறுவனங்களுக்கு வெள்ளியன்று விடுமுறை

அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளும் அலுவலகங்கள் தவிர்ந்த தவிர்ந்த அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவிப்பு.

அரச நிறுவனங்களுக்கு வெள்ளியன்று விடுமுறை Read More »

nov26

பதுளை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாகவும் மண்சரிவு அபாயம்

தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட செயலாளர் வேண்டுகோள் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் மண் சரிவு அபாயம் இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் பதுளை மாவட்டத்தில் தாழ்வான இடங்களில் வாழும் மக்க ைள மிக அவதானமாக இருக்குமாறும் மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார். இதேபோன்று பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை, பதுளை, ஹாலிஎல, ஹல்துமுல்ல, ஊவா பரணகம, வெலிமடை போன்ற பிரதேச செயலக பிரிவுகளில் ஆங்காங்கு மண் சரிவு அபாயம்

பதுளை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாகவும் மண்சரிவு அபாயம் Read More »