Local

சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் மரமொன்று முறிந்து பொது மதிலுக்கு பாரிய சேதம்

சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் தற்போது வீசிவரும் காற்றின் வேகம் காரணமாக பாடசாலையில் மரமொன்று முறிந்து விழுந்து பாடசாலை பொது மதிலை உடைத்து பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. பாடசாலை பொது மதில் உடைந்திருப்பதன் காரணமாக பாடசாலைக்கு பாதுகாப்பு என்பது குறைவாக உள்ளது. பாடசாலையில் தற்போது நடப்பட்டுள்ள மரக் கன்றுகளுக்கும் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது. பொது மதில் உடைந்துள்ளதால், ஆடு, மாடுகள் உட் சென்று அங்கு நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் மற்றும் பாடசாலையின் உடமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையும் காணப்படுவதாக […]

சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் மரமொன்று முறிந்து பொது மதிலுக்கு பாரிய சேதம் Read More »

25y

பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதி ஒதுக்கீடு

ஐ.நா. பருவநிலை தொடர்பான உச்சி மாநாடு (சிஓபி 30) பிரேசிலில் நவ.10இல் தொடங்கியது. இதில், பருவநிலை மாற்றத்தால் பாதித்த நாடுகளுக்கு கூடுதல் நிதி வழங்குவதற்கான ஒப்பந்தம் அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் புதை படிவ எரிபொருட்களை படிப்படியாக குறைப்பதற்கான அல்லது போதுமான அளவு கார்பன் உமிழ்வு குறைப்பு திட்டங்களை வலுப்படுத்துவதற்கான வெளிப்படையான வரைவு திட்டம் எதுவும் இடம்பெறவில்லை. புதை படிவ எரிபொருட்களில் இருந்து விலகிச் செல்வதற்கான திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படாதது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே

பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதி ஒதுக்கீடு Read More »

kadukannavea

கடுகன்னாவ மண்சரிவு: NBRO பரிந்துரையுடன் அறிக்கை சமர்பிப்பு!

கீழ் கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பில் ஆய்வு செய்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அப்பகுதிக்கு உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நிரந்தரத் தீர்வுகள் குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. கேகாலை மாவட்டச் செயலாளர், மாவனல்லை பிரதேச செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றிடம் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திய பின்னரே வீதியை மீண்டும் திறக்க முடியும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின்

கடுகன்னாவ மண்சரிவு: NBRO பரிந்துரையுடன் அறிக்கை சமர்பிப்பு! Read More »

novb25

வவுனியாவில் அமைந்துள்ள Singer காட்சியறையில் தீ

பல இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் இலத்திரனியல் காட்சியறை இன்று (25) காலை 9. 45 மணியளவில் தீப்பரவலுக்கு உள்ளாகி முழுமையாக எரிந்து நாசமாகியது. காட்சியறையின் மேல் தளத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் தீயே இந்தக் காட்சியறை முழுமையாக எரிந்தமைக்கு காரணம் என கூறப்படுகின்றது. தீப்பரவல் ஏற்பட்டு சில நிமிடங்களில் மாநகர சபை தீயணைப்பு பிரிவு வருகை தந்து தீயை அணைப்பதற்கு முயற்சித்த போதிலும் அது கட்டுக்கடங்காமல்

வவுனியாவில் அமைந்துள்ள Singer காட்சியறையில் தீ Read More »

img 20251125 wa0009

பெண்களுக்கான வேலைதிட்டத்தை பாராட்டுகிறதுமகளிர் அணி.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 16 நாட்கள் கொண்ட வேலைத் திட்டம் நேற்று (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அறிவித்துள்ளமையை புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி பெரிதும் வரவேற்கிறது என அதன் தலைவி ரஞ்சனி சுரேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தி குறிப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- சகல சமூகங்களையும் சேர்ந்த பெண்கள் சம உரிமையுடன் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமையை

பெண்களுக்கான வேலைதிட்டத்தை பாராட்டுகிறதுமகளிர் அணி. Read More »

deduru oya

தெதுருஓயாவின் 06 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

கலா ஓயா, தெதுரு ஓயா மற்றும் மீ ஓயாவைச் சுற்றியுள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தெதுரு ஓயா, ராஜாங்கனை, இகினிமிட்டிய, தப்போவ மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (23 ) காலை நிலவரப்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 2 வான்கதவுகள் தலா 06 அடி வீதமும் 04 வான்கதவுகள் தலா 04

தெதுருஓயாவின் 06 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன Read More »

whatsapp image 2025 11 24 at 12.17.52 pm (1)

Amazon உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா.

சுமார் 17 வருடங்களாக தலைநகரில் இயங்கி வரும் Amazon College & Campus கல்வி நிறுவனமானது, 23 நவம்பர் 2025 , மாலை 2 மணி முதல் BMICH – Lotus மண்டபத்தில் பிரம்மாண்டமான முறையில் தனது பட்டமளிப்பு விழாவை நடாத்தியது. Diploma, HND, Degree, Masters ஆகிய நிலைகளில் கல்வி பயின்ற 200 மாணவர்கள் தங்களது பட்டங்களைப் பெற்றனர். இதில் Psychology, Business Management, IT, English, Teacher Training போன்ற துறைகளில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Amazon உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா. Read More »

water

பலத்த மழையால் 09 பிரதான நீர்த்தேக்கங்களில் அதிக நீர் வெளியேற்றம்

கடந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்தை அண்டிய மஹா ஓயா பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிரிஉல்ல, பொல்கஹவெல மற்றும் படல்கம போன்ற இடங்களில் 100 மி.மீற்றருக்கு அண்மித்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அத்திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர், பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். ஏனைய மாவட்டங்கள் மற்றும் ஆற்றுப் படுகைகளில், நில்வலா கங்கையின் கீழ் ஆற்று படகையில் 50 மில்லி மீற்றரும் கிங் கங்கை, களு கங்கை, களனி

பலத்த மழையால் 09 பிரதான நீர்த்தேக்கங்களில் அதிக நீர் வெளியேற்றம் Read More »

local

கிளிநொச்சியில் மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமை திட்டம் வெற்றிகரமாக நிறைவு

கிளிநொச்சியில் மனிதாபிமான மேம்பாட்டு அமைப்பு ஏற்பாடு செய்த மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரம் மற்றும் சமூக ஒற்றுமை தொடர்பான சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி நேற்று (22) காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை இளைஞர்கள் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் NCEASL அமைப்பின் திருமதி வி. அலஷியா, திறன் மேம்பாட்டு அதிகாரி திருமதி வி.விஜிதா, HDO SAFE குழு உறுப்பினர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயிற்சியை

கிளிநொச்சியில் மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமை திட்டம் வெற்றிகரமாக நிறைவு Read More »

drug

போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வு

போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று புத்தளம் தில்லையடி கிராம உத்தியோகத்தர் காரியாலயத்தில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். சன் மகளிர் அமைப்பின் மூலமாக நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஹெல்த் லங்கா நிறுவனத்தின் ஊடாக வளவாளர் மற்றும் அனுசரணை வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்வினை ஒடெப்ட் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் முஸ்னியா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வு Read More »