Local

nov 23

ரம்புக்கனையில் முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து

மாவனெல்லை – ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது இன்று (23) இரவு பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் விபத்து சம்பவித்துள்ளது. தலகொல்ல பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மரம் முறிந்து விழுந்ததினால் முச்சக்கர வண்டியில் இருந்தவர்கள் உள்ளே சிக்கிய நிலையில், அதிலிருந்த சிறுவன் மீட்கப்பட்டு தற்போது மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விபத்து காரணமாக அந்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக […]

ரம்புக்கனையில் முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து Read More »

local news

கொக்கைன் போதைப்பொருளுடன் மலேசிய பிரஜை கைது

05 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மலேசிய நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. விமான நிலைய சுங்க போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போதே இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கம்தெரிவித்துள்ளது.

கொக்கைன் போதைப்பொருளுடன் மலேசிய பிரஜை கைது Read More »

whatsapp image 2025 11 24 at 11.09.48 am

மண்சரிவால் கடுகன்னாவ முழுவதுக்கும் ஆபத்து இல்லை

பஹல கடுகன்னாவ பகுதியில் நேற்று (22) இடம்பெற்ற மண்சரிவானது அந்த இடத்திற்கு மட்டுமே உரித்தான ஒரு அபாய நிலைமையே தவிர, முழுப் பிரதேசத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாய நிலைமை அல்ல என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கடுகன்னாவ பிரதேசம் முழுவதும் மண்சரிவு அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம்

மண்சரிவால் கடுகன்னாவ முழுவதுக்கும் ஆபத்து இல்லை Read More »

23

அனர்த்த பாதிப்பு – பரீட்சார்த்திகளுக்கு விசேட போக்குவரத்துத் திட்டம்

கண்டி, கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையால் தடங்கல்களை எதிர்கொண்டுள்ள உயர்தரப் பரீட்சார்த்திகள், உரிய மாற்று வீதிகள் ஊடாக தமது பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதற்காக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியன இணைந்து விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றை செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன. மேலும், திடீர் வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்த சந்தர்ப்பங்களில் பரீட்சார்த்திகள் தமது பரீட்சை நிலையங்களுக்குச் செல்லத் தேவையான வசதிகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஊடாக வழங்கத் தேவையான

அனர்த்த பாதிப்பு – பரீட்சார்த்திகளுக்கு விசேட போக்குவரத்துத் திட்டம் Read More »

nov 22

இன்றிரவு முதல் ஜுமாதுல் ஆகிரா மாதம் ஆரம்பம்

ஹிஜ்ரி 1447 ஜுமாதல் ஆகிரா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. பிறைக் குழு தலைவர் மெளலவி MBM ஹிஷாம் அல் பத்தாஹி தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில்ஜுமாதல் ஆகிரா மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத காரணத்தினால் இன்று ( 22) மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு ஜுமாதல் ஆகிரா மாதம் ஆரம்பமாகின்றது எனஇலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பிறைக்

இன்றிரவு முதல் ஜுமாதுல் ஆகிரா மாதம் ஆரம்பம் Read More »

nov 21

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய விமானம்

உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான ஏ380 (A380) ரக விமானம் ஒன்று, அதில் பயணித்த ஒருவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் இரவு (நவம்பர் 20) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த ஒருவருக்குப் பறந்துகொண்டிருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மருத்துவ உதவியை உடனடியாக வழங்குவதற்காக, விமானிக்குக் கட்டுநாயக்கவில் அவசரமாகத் தரையிறங்க உத்தரவிடப்பட்டது. விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதைத்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய விமானம் Read More »

fire news

கடுவல பகுதியில் உள்ள அட்டைப் பெட்டி தொழிற்சாலையில் தீ

கடுவல, ரனால பகுதியில் உள்ள அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (19) காலை ஏற்பட்ட இந்த தீ பரவலில் தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு மற்றும் கோட்டை மாநகர சபைகளுக்கு சொந்தமான தீயணைப்பு படையினர் இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சேதம் தொடர்பான மதிப்பாய்வுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடுவல பகுதியில் உள்ள அட்டைப் பெட்டி தொழிற்சாலையில் தீ Read More »

traveling issue

மலையக ரயில் சேவைக்கு பாதிப்பு.

கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக மலையக போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் இவ்வாறு நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மழையுடனான வானிலை நிலவுவதன் காரணமாக ரயில் மார்க்கத்தில் உள்ள மண்மேடுகளை

மலையக ரயில் சேவைக்கு பாதிப்பு. Read More »

post

தபால் சேவையின் மூலம் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டம் ஆரம்பம்!!!

இலங்கை தபால் சேவை மூலம் மக்களுக்கு தேசிய பிறப்புச் சான்றிதழ்களை நேரடியாக வழங்கும் புதிய திட்டம் இன்று (12) புதன்கிழமை அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த முயற்சி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூர் ஆட்சி அமைக்க சந்தன அபேரத்னவின் தலைமையில், கம்பக மாவட்ட செயலகத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டம், அதிகாரபூர்வ ஆவணங்களின் பாதுகாப்பான மற்றும் திறமையான விநியோகத்தை மேம்படுத்துவதற்காக பதிவாளர் நாயகம் துறையும் அஞ்சல் துறையும் இணைந்து மேற்கொண்டுள்ள கூட்டு முயற்சியின் விளைவாகும். மின்- சிவில்

தபால் சேவையின் மூலம் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டம் ஆரம்பம்!!! Read More »

nov 10

உயர்தரப் பரீட்சை நிறைவடையும் முன்பே விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்..!

2025ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமானது. இந்நிலையில் இம் முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்பே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்க இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  உயர்தரப் பரீட்சைகள் தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே இதனை தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை நிறைவடையும் முன்பே விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்..! Read More »