Local

nov 9

அவசர நிலைமையின் போது 117 ஐ அழையுங்கள்;பரீட்சைக்குத் தோற்றுவோருக்கு பரீட்சை திணைக்களம் அறிவுரை

உயர்தரப் பரீட்சைக் காலப்பகுதியில் அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவை இணைந்து விசேட கூட்டு வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. இந்த முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு எதிர்பாராத காலநிலையால் அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பரீட்சை காலப்பகுதியில் அனர்த்த அபாயமற்ற சூழலை உருவாக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டி […]

அவசர நிலைமையின் போது 117 ஐ அழையுங்கள்;பரீட்சைக்குத் தோற்றுவோருக்கு பரீட்சை திணைக்களம் அறிவுரை Read More »

nov 7

அடுத்த ஆண்டு அரச சேவையில் 75000 பேர் இணைக்கப்படுவர்

அரச சேவைக்கு 75,000 பேரை உரிய முறைமையின் கீழ் புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு அரச சேவையில் 75000 பேர் இணைக்கப்படுவர் Read More »

img 20251106 wa0014

தகவல் திணைக்கள பணிப்பாளர்நாயகம் – மீடியா போரம் சந்திப்பு

அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டாரவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரம் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு 06.11.2025 வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் எம்.பீ.எம்.பைறூஸ் தலைமையிலான செயற்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். இச் சந்திப்பில் நாடளாவிய ரீதியிலுள்ள மும்மொழி ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களுக்கான பயிற்சி மற்றும் நலன்புரி திட்டங்கள், தகவல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக தகவல் திணைக்களமும்

தகவல் திணைக்கள பணிப்பாளர்நாயகம் – மீடியா போரம் சந்திப்பு Read More »

nov 5

புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதியாக அஷ்ஷெய்க் என். அஸ்மீர் (உஸ்வி) நியமனம்..!

புத்தளம் – சிலாபம் பிரதேசத்திற்கான புதிய காதி நீதிபதியாக சமாதான நீதவான் அஷ்ஷெய்க் என்.அஸ்மீர் (உஸ்வி) நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான காதி நீதிபதி நியமனத்தை நீதிச்சேவைகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. புத்தளம் – சிலாபம் பிரதேசத்திற்கான காதி நீதிபதிக்கான வெற்றிடம் நீண்ட காலமாக காணப்பட்டு வந்ததுடன், புதிய காதி நீதிபதியை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சையும் அண்மையில் நடாத்தப்பட்டது. இதனடிப்படையில் புத்தளம் – சிலாபம் பிரதேசத்திற்கான புதிய காதி நீதிபதியாக அஷ்ஷெய்க் என். அஸ்மீர் (உஸ்வி) நிமிக்கப்பட்டுள்ளார். நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின்

புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதியாக அஷ்ஷெய்க் என். அஸ்மீர் (உஸ்வி) நியமனம்..! Read More »

11.03 a

சம்மாந்துறையில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

அரசின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பயனாளிகளின் வாழ்வாதாரங்களை உயிர்ப்பிக்கும் முகமாக வாழ்வாதார உதவிகள் அரசாங்கத்தின் செயற்றிட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு, 7 மில்லியன் பெறுமதியான இந்த செயற்றிட்டத்தில் முதற் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் சங்கங்களுக்கு தையல் உபகரணங்கள் மற்றும் ஏனைய வாழ்வாதாரங்களுக்கான உபகரணங்களோடு காசோலைகளும் (01) சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம

சம்மாந்துறையில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு Read More »

11.3

மாவனல்லை பேருந்து தரிப்பிடம் தற்காலிகமாக இன்றிலிருந்து மூடப்படும்; நீண்ட காலத்துக்குப் பின் புனரமைக்க நடவடிக்கை

“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற கொள்கைக் கூற்றின்படி, சபரகமுவ மாகாண சபையின் நிதி ஒதுக்கீடுகளுடன், மாவனெல்ல பேருந்து நிலையப் பகுதியைப் புதுப்பிக்கும் பணிகள் 2025 நவம்பர் 3 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. அபிவிருத்தி நடவடிக்கைகள் நடைபெறும் காலங்களில் மாவனெல்ல பேருந்து நிலையம் மூடப்படுவதால், உங்கள் பயண சிரமத்தைக் குறைக்க பேருந்துகள் பின்வரும் இடங்களில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளன. நிர்வாக பொறியாளர் – ரம்புக்கனை

மாவனல்லை பேருந்து தரிப்பிடம் தற்காலிகமாக இன்றிலிருந்து மூடப்படும்; நீண்ட காலத்துக்குப் பின் புனரமைக்க நடவடிக்கை Read More »

71c01d28 e255 4c86 a9f8 095a0bc6eb44

இசை நிகழ்ச்சியில் போதைப்பொருள் – இளைஞர், யுவதிகள் அதிரடியாக கைது.

கொழும்பு – மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட 31 இளைஞர் மற்றும் யுவதிகள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிம்புலாவல, கமதா என்ற இடத்தில் நேற்றிரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளைஞர்கள் குழுவொன்றே கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். குறித்த இசை நிகழ்ச்சியில், 500ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மிரிஹான குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் மிரிஹான காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குறித்த 31 இளைஞர், யுவதிகளிடம் இருந்து பல்வேறு வகையான

இசை நிகழ்ச்சியில் போதைப்பொருள் – இளைஞர், யுவதிகள் அதிரடியாக கைது. Read More »

nov 3

மருதமுனை அல் ஹம்றாவின் மாணவி சுஹைப்தீன் பாத்திமா அனீகா குர்ஆன் ஓதல் போட்டியில் தங்கம் வென்றார்

கடந்த 01/11/2025 ஆம் திகதியன்று கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்ற தேசிய மட்ட முஸ்லிம் கலாச்சாரப் போட்டி நிகழ்ச்சியில் கனிஷ்ட பிரிவிற்கான குர்ஆன் ஓதல் (qirath recitation) போட்டியில் மருதமுனை கமு/அல்-ஹம்றா வித்தியாலயத்தில் தரம் 08ல் கல்வி பயிலும் மாணவி சுஹைப்தீன் பாத்திமா அனீகா முதலாம் இடத்தைப்பெற்று தங்கப்பதக்கத்தைப்பெற்று பாடசாலைக்கும், பிரதேசத்திற்கும், மாகாணத்திற்கும் பெருமைசேர்த்துள்ளார். அவரை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், சகமாணவர்களும் வாழ்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றனர். அவர் வைத்தியர் P. M. சுஹைப்தீன் மற்றும் A.S. பாத்திமா பஸ்மி

மருதமுனை அல் ஹம்றாவின் மாணவி சுஹைப்தீன் பாத்திமா அனீகா குர்ஆன் ஓதல் போட்டியில் தங்கம் வென்றார் Read More »

11.02

ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு புதிய நியமனங்கள்

இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு சுகாதார மருத்துவ அதிகாரிகள் உட்பட மொத்தம் 303 பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். இந் நிகழ்வு நாளை (3) கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெறவுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆயுர்வேதத் துறையில் இடம்பெறும் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு இது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு புதிய நியமனங்கள் Read More »

11.2

வில்வத்தையில் ரெயில் தடம் புரள்வு.சேவைகள் பாதிப்பு.

ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீரிகம மற்றும் வில்வத்த ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (02) எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் ஒன்றே தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தடம்புரண்ட ரயிலை மீண்டும் தடம் ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வில்வத்தையில் ரெயில் தடம் புரள்வு.சேவைகள் பாதிப்பு. Read More »