போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று புத்தளம் தில்லையடி கிராம உத்தியோகத்தர் காரியாலயத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
சன் மகளிர் அமைப்பின் மூலமாக நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஹெல்த் லங்கா நிறுவனத்தின் ஊடாக வளவாளர் மற்றும் அனுசரணை வழங்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்வினை ஒடெப்ட் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் முஸ்னியா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.


