Local

fae14156 01ab 49a9 a73d c780b2cf2de2 1170x728

அனைவரினது வாழ்விலும் வெற்றி, வளம், அமைதி, நிம்மதி, மனநிறைவு நிரம்பியதாக மலரட்டும்

– ஜீவன் தொண்டமான் புத்தாண்டு வாழ்த்து பிறந்திருக்கும் 2026 பராபவ புது வருடத்தை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் , இலங்கை நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள புது வருட வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிப்பதாவது: “அனைவரினது வாழ்விலும் வெற்றி, வளம், அமைதி, நிம்மதி, மனநிறைவு நிரம்பியதாக மலரட்டும். இந்த புத்தாண்டில் நீங்கள் நினைத்த எல்லா காரியங்களும் […]

அனைவரினது வாழ்விலும் வெற்றி, வளம், அமைதி, நிம்மதி, மனநிறைவு நிரம்பியதாக மலரட்டும் Read More »

606534915 1305180064974944 3266851816030960532 n 1170x881

புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு

புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். இன்று காலை வரலாற்றுச் சிறப்பு மிக்க தலதா மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதி தலதா மாளிகை வளகாத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளில் பங்கேற்றதோடு , புத்தாண்டை முன்னிட்டு தலதா மாளிகையை தரிசிக்க வந்த மக்களுடன் சுமூகமான உரையாடலில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து,மல்வத்து

புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு Read More »

1.1

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நற்செய்தி: 5 கோடி ரூபா வரை சலுகைக் கடன்!

நெல் விவசாயிகளுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், 2025/26 பெரும்போக நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்காக, சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, இந்த கடன் திட்டத்தின் இலக்கு குழுக்கள், சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் அதிகபட்சமாக 25 மெட்ரிக் டொன் தினசரி நெல் திறன் கொண்ட கூட்டுறவு சங்கங்கள் ஆகும். அனைத்து

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நற்செய்தி: 5 கோடி ரூபா வரை சலுகைக் கடன்! Read More »

colombo municipal council budget passed

கொழும்பு மாநகர சபை 2026 பட்ஜெட் நிறைவேற்றம்

– கடந்த வாரம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் மேயர் பல்தசாரின் பட்ஜெட்டிற்கு மீண்டும் வெற்றி தேசிய மக்கள் சக்தியின் (NPP) அதிகாரத்தின் கீழ் உள்ள கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம், அதன் இரண்டாவது வாசிப்பின் போது இரண்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற வாக்கெடுப்பின் போது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, கொழும்பு மாநகர சபையின் மேயர் விராய் கெலி

கொழும்பு மாநகர சபை 2026 பட்ஜெட் நிறைவேற்றம் Read More »

3.1 4

எதிர்பார்த்த வருமான இலக்கையும் தாண்டி 300 பில். ரூபா மேலதிகமான வருமானத்துடன் சுங்கத்துறை

இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்றில் அதிக வருமானத்தை ஈட்டிய வருடமாக 2025 பதிவாகியுள்ளது என்றும் எதிர்பார்த்த வருமான இலக்கான 2115 பில்லியன் ரூபாய் வருமானத்தைத் தாண்டி, 300 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்துடன் 2026 ஆம் ஆண்டை ஆரம்பிக்க முடிந்துள்ளதாகவும் இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் எஸ்.பீ அருக்கொட தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (30) முற்பகல் சுங்கத் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் இவ்வாறு

எதிர்பார்த்த வருமான இலக்கையும் தாண்டி 300 பில். ரூபா மேலதிகமான வருமானத்துடன் சுங்கத்துறை Read More »

12 31

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையில் 5.42 சதவீத வளர்ச்சி

ஒன்றிணைந்த ஆடை சங்கங்களின் மன்றம் (JAAF) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் பதினொரு மாதங்களில் இலங்கையின் ஆடைத் துறை ஒரு வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இதற்கமைய, இக்காலப்பகுதியில் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 4,571.99 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.42% அதிகரிப்பாகும். 2025 நவம்பர் மாதத்தில் இலங்கையின் மொத்த ஆடை ஏற்றுமதி வருமானம் 367.60 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2024 நவம்பர் மாதத்தின்

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையில் 5.42 சதவீத வளர்ச்சி Read More »

12.31

வரலாறு படைத்த இலங்கைச் சிறுவன்: உலக மேசைப்பந்து தரவரிசையில் தாவி சமரவீர முதலிடம்!

சர்வதேச மேசைப்பந்து அரங்கில் இலங்கை விளையாட்டுத் துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில், 11 வயதுக்குட்பட்டோருக்கான உலகத் தரவரிசையில் இலங்கையின் இளம் வீரர் தாவி சமரவீர (Taavi Samaraweera) முதலிடத்தைப் பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். சர்வதேச மேசைப்பந்து கூட்டமைப்பு (ITTF) அண்மையில் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலின்படி, 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான பிரிவில் (Under-11 Boys) அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். கடந்த சில காலமாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான போட்டிகளில் தனது அபாரத் திறமையை வெளிப்படுத்தி

வரலாறு படைத்த இலங்கைச் சிறுவன்: உலக மேசைப்பந்து தரவரிசையில் தாவி சமரவீர முதலிடம்! Read More »

dates ramazan fasting

ரமழான் நோன்பு காலப் பேரீச்சம்பழங்களுக்கு வரிச் சலுகை!

– இஸ்லாமிய மக்களின் நலன் கருதி அரசாங்கம் எடுத்த தீர்மானம் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு, அன்பளிப்பாகப் பெறப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கு வரிச் சலுகை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. வெளிநாட்டுச் செலாவணி செலவிடப்படாத வகையில் நன்கொடையாகப் பெறப்படும் பேரீச்சம்பழங்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரமழான் நோன்பு காலப் பேரீச்சம்பழங்களுக்கு வரிச் சலுகை! Read More »

12.30

டிட்வா சூறாவளி: சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபா நஷ்டம் – அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

இலங்கையை அண்மையில் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) கடும் சூறாவளி காரணமாக நாட்டின் தேசிய சுகாதார அமைப்புக்கு சுமார் 21 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.சுகாதார அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

டிட்வா சூறாவளி: சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபா நஷ்டம் – அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ Read More »

12.30

தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த மாணவனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு

( வி.ரி.சகாதேவராஜா)சமகாலத்திற்கு பொருத்தமான தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த சம்மாந்துறை மாணவனுக்கு ஊக்குவிப்பாக 50 ஆயிரம் ரூபாய் பரிசை சம்மாந்துறை பிரதேச சபை வழங்கி கௌரவித்தது. சம்மாந்துறை அல் – அமீர் வித்தியாலத்தின் தரம் 09 கல்வி பயிலும் மாணவன் ஏ.எம்.எம்.அப்ஹாம் தன்னியக்க வெள்ள வீதித் தடை உபகரணத்தை கண்டுபிடித்து மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றிருந்தார் . அவரின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் (50,000/=) ஐம்பது ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு சம்மாந்துறை பிரதேச சபையின் அனைத்து

தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த மாணவனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு Read More »