– இஸ்லாமிய மக்களின் நலன் கருதி அரசாங்கம் எடுத்த தீர்மானம்
2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு, அன்பளிப்பாகப் பெறப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கு வரிச் சலுகை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
வெளிநாட்டுச் செலாவணி செலவிடப்படாத வகையில் நன்கொடையாகப் பெறப்படும் பேரீச்சம்பழங்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


