வரலாறு படைத்த இலங்கைச் சிறுவன்: உலக மேசைப்பந்து தரவரிசையில் தாவி சமரவீர முதலிடம்!

12.31

சர்வதேச மேசைப்பந்து அரங்கில் இலங்கை விளையாட்டுத் துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில், 11 வயதுக்குட்பட்டோருக்கான உலகத் தரவரிசையில் இலங்கையின் இளம் வீரர் தாவி சமரவீர (Taavi Samaraweera) முதலிடத்தைப் பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

சர்வதேச மேசைப்பந்து கூட்டமைப்பு (ITTF) அண்மையில் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலின்படி, 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான பிரிவில் (Under-11 Boys) அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

கடந்த சில காலமாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான போட்டிகளில் தனது அபாரத் திறமையை வெளிப்படுத்தி வந்த தாவி சமரவீர, தற்போது உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளமை இலங்கை விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.