Local

holiday tamil schools

அனைத்துப் பாடசாலைகளும் நாளை ஆரம்பம்

2026ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டின் முதலாம் தவணையை அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) முதல் ஆரம்பிக்கவுள்ளன. அதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்களில் நாளை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. டிசம்பர் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை செயற்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்துப் பாடசாலைகளும் நாளை ஆரம்பம் Read More »

new building for hospital 1170x679

ரூ. 107 இலட்சம் செலவில் இறக்குவானை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு புதிய கட்டடம்

– அடிக்கல் நடும் நிகழ்வு பிரதி அமைச்சர் பிரதீப் தலைமையில் இறக்குவானை நகரில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் ரூ. 107 இலட்சம் செலவில் புதிதாக நிர்மாணிக்கபடவுள்ள புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (04) இடம்பெற்றது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. அத்துடன், ‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளுக்கமைய கொடக்கவெல பிரதேச சபைக்குட்பட்ட இறக்குவானை வடக்கு, பெரிய பாராவத்தை, ஸ்ப்ரிங்வூட் தமிழ் வித்தியாலத்திற்கு அருகில்

ரூ. 107 இலட்சம் செலவில் இறக்குவானை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு புதிய கட்டடம் Read More »

கல்முனை வலைய கல்வி பணிமனை யில் உறுதியுரையும், சத்தியப் பிரமாணமும் இடம்பெற்றது.

எஸ் எம் எம் றம்ஸான் 2026 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் முதல் நாளாகிய இன்று(01) இலங்கை சனநாயக சோசலிச குடியரசு, முழு நாட்டு மக்களினதும் அபிலாஷைகளை முன்னணியாகக் கொண்ட இலக்குகளை நனவாக்கும் சுபிட்சம் மிகு புத்தாண்டின் தொடக்கத்தினை, இவ்வாறு தடம்பதிக்கின்றது. இன்றுடன் ஆரம்பிக்கப்படும் புத்தாண்டில்ஒரே கொடியின் கீழ் நிழல் பெறும் ஒரே நாடாகவும் ஒரே தேசமாகவும் கம்பீரமாக எழுந்து நிற்பதற்கும் குறிக்கோளினால் ஈர்க்கப்பட்ட மக்களின் அபிமானத்தை எடுத்துரைக்கவும் மற்றும் அவ்வாறே “வளமான நாடு அழகான வாழ்க்கை”

கல்முனை வலைய கல்வி பணிமனை யில் உறுதியுரையும், சத்தியப் பிரமாணமும் இடம்பெற்றது. Read More »

dream destination talpe railway station 1170x778

புதுப்பிக்கப்பட்ட தல்பே புகையிரத நிலையம் பொதுமக்கள் பாவனைக்கு

– 100 புகையிரத நிலையங்களை நவீனமயமாக்கும் ‘Dream Destination’ திட்டம் 100 புகையிரத நிலையங்களை நவீனமயமாக்கும் ‘Dream Destination’திட்டம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் Clean Sri Lanka திட்டத்தால் தனியார் துறையின் ஆதரவுடன் அரச – தனியார் கூட்டு திட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம், நாட்டில் விசேட தேவைகள் உள்ள சமூகம் உட்பட அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்யும் ஒரு சுத்தமான, அழகான புகையிரத நிலைய கட்டமைப்பை

புதுப்பிக்கப்பட்ட தல்பே புகையிரத நிலையம் பொதுமக்கள் பாவனைக்கு Read More »

606040952 1364820345687391 2663374927683563729 n

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ 2026 தேசிய வீட்டுத்திட்டம் ஜனாதிபதி மேற்பார்வைக்கு

– உரிய காலக்கெடுவிற்குள் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்கவும் 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அந்தத் திட்டங்களின் செயல்பாடுகளை ஒரே நிறுவனத்தின் கீழ் மேற்பார்வை செய்வதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் “தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை” தேசிய

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ 2026 தேசிய வீட்டுத்திட்டம் ஜனாதிபதி மேற்பார்வைக்கு Read More »

1.3

2026ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை ஆரம்பித்தல் வழிகாட்டல்

2026ஆம் ஆண்டிற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் பாடசாலை ஆரம்பம் தொடர்பான விசேட வழிகாட்டல்களைக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, முன்னதாகத் திட்டமிடப்பட்டிருந்த பாடசாலை நேர நீடிப்பு தொடர்பான தீர்மானங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தரம் 5 மற்றும் தரம் 6-13 வரையான மாணவர்களுக்குப் பாடசாலை முடியும் நேரத்தைப் பிற்பகல் 2.00 மணி வரை நீடிக்க முன்னதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நாட்டில் நிலவிய காலநிலை மாற்றங்கள் மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, 2026ஆம்

2026ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை ஆரம்பித்தல் வழிகாட்டல் Read More »

10.5

கல்முனை ஆதார வைத்தியசாலையில் உயர் கண்காணிப்பு சிகிச்சை பிரிவு திறப்பு

கல்முனை ஆதார வைத்தியசாலையின் வரலாற்றில், முதல் தடவையாக உயர் கண்காணிப்பு சிகிச்சை (High Dependency Unit) பிரிவு நேற்று (1) வியாழக்கிழமை புத்தாண்டு தினத்தில் திறந்து வைக்கப்பட்டது. கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி. சுகுணன் இப்பிரிவை ஆரம்பித்து வைத்தார். விபத்து மற்றும் அவசரசிகிச்சைப் பிரிவு கட்டிடத்தில் புதிய சிகிச்சை பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இது வைத்தியசாலையின் அர்ப்பணிப்பான சுகாதார பராமரிப்பு சேவைக்கு

கல்முனை ஆதார வைத்தியசாலையில் உயர் கண்காணிப்பு சிகிச்சை பிரிவு திறப்பு Read More »

12.5

லஞ்ச் சீற் பயன்படுத்தினால் அபராதம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் உணவுகளை கையாளும் நிலையங்களில் உள்ளக பயன்பாடு மற்றும் உணவு பொதியிடல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளின் போதும் லஞ்ச் சீற் பயன்படுத்துவதற்கான தடை ஜனவரி முதலாம் திகதியான நேற்றைய தினம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. குறித்த அறிவிப்பை மீறிச் செயற்படுபவர்கள் மீது நீதிமன்றத்தின் ஊடாக நேரடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பருத்தித்துறை நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ் தெரிவித்திருந்தார். லஞ்ச் சீற் பாவனைக்கு மாற்றீடாக உள்ளக பயன்பாட்டில்

லஞ்ச் சீற் பயன்படுத்தினால் அபராதம் Read More »

2.1

ஜனாதிபதி அமரபுர, ராமன்ய மகா நாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்

புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கை அமரபுர மகா பீடத்தின் வணக்கத்திற்குரிய கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி மகா நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார். வெள்ளவத்தையில் உள்ள அமரபுர மகா பீட பிக்கு தலைமையகத்திற்கு நேற்று (01) பிற்பகல் சென்ற ஜனாதிபதி, மகா நாயக்க தேரரை சந்தித்து அவரது நலம் விசாரித்து சிறிது நேரம் உரையாடினார். செத்பிரித் பாராயணம் செய்த மகாநாயக்க தேரர், ஜனாதிபதிக்கு ஆசிவழங்கினார். அத்துடன், இலங்கை ராமன்ய மகா பீடத்தின் மகாநாயக்க

ஜனாதிபதி அமரபுர, ராமன்ய மகா நாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார் Read More »

2

மின்சாரக் கட்டணத்தை 11.57% அதிகரிக்க கோரிக்கை

2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான (ஜனவரி முதல் மார்ச் வரை) மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபை (CEB) தனது பரிந்துரைகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பித்துள்ளது. நிதி நிலைமை மற்றும் கட்டண உயர்வுக்கான காரணங்கள்:

மின்சாரக் கட்டணத்தை 11.57% அதிகரிக்க கோரிக்கை Read More »