Local

cabinet decision search and rescue activities between indonesia sri lanka

இந்தோனேசியாவுடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணி ஒப்பந்தம் புதுப்பிப்பு!

– வான்பரப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்த 5 வருட இணக்கப்பாடு இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட 625,000 சதுர மைல் வான்பரப்பில் ஏற்படும் விபத்துக்களின் போது மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க இந்தோனேசியாவுடன் இருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், 2025 ஆம் ஆண்டு முதல் மேலும் 5 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் வகையில் நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தோனேசியாவுடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணி ஒப்பந்தம் புதுப்பிப்பு! Read More »

record tourist arrival recorded year 2025 1170x780

இலங்கை வரலாற்றில் அதிகூடிய சுற்றுலா பயணிகள் வந்த வருடம் 2025

– 2,333,797 ஆவது பயணி வருகை; 2018 இற்கு பின் புதுப்பிக்கப்பட்ட சாதனை ஒரு வருடத்தில் இலங்கைக்கு வருகை தந்த உச்ச சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கைக்கான புதிய சாதனை இன்று (29) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இலங்கை வரலாற்றில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டாக 2018 ஆம் ஆண்டு 2,333,796 பேர் நாட்டுக்கு வருகை தந்திருந்தமை பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கையை இன்று தாண்டியதன் மூலம் புதிய வரலாற்றுச் சாதனை உருவாகியுள்ளது.

இலங்கை வரலாற்றில் அதிகூடிய சுற்றுலா பயணிகள் வந்த வருடம் 2025 Read More »

12.29

சாய்ந்தமருதில் பிரதேச மட்ட மற்றும் மாவட்ட கலை இலக்கிய விழா.

(எஸ்.அஷ்ரப்கான்) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும், சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்திய பிரதேச மட்ட மற்றும் மாவட்ட இலக்கிய விழா சாய்ந்தமருது பிரதேச பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். றிம்ஸான், உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிகா, கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, நிருவாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்ஸான், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.

சாய்ந்தமருதில் பிரதேச மட்ட மற்றும் மாவட்ட கலை இலக்கிய விழா. Read More »

12.29

மண்சரிவு முன்னெச்சரிக்கைகள் தொடர்பான அறிவித்தல்!

மண்சரிவு குறித்த முன்னெச்சரிக்கைகள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, இன்று (29) முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது. அதற்கமைய, குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளிலும் நீரோடைகளின் இருமருங்கிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டிட

மண்சரிவு முன்னெச்சரிக்கைகள் தொடர்பான அறிவித்தல்! Read More »

09 2 3

ஆதிஸ்ரீ ஐயப்ப சேத்திரத்தில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்குமார் கௌரவிப்பு

கொழும்பு 13, 69A A. G ஹிணி அப்புஹாமி மாவத்தையில் அமைந்திருக்கும் ஆலயம் ஆதிஸ்ரீ ஐயப்ப சேத்திரம். இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பித்து இந்த வருடத்துடன் 50 வருடங்கள் பூர்த்தியடைகின்றது. இந்த பொன்விழாவையொட்டி ஆதிஸ்ரீ ஐயப்ப சேத்திரத்தில் அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கத்தினரால் விஷேட பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு கடந்த 27ஆம் திகதி காலை 5.00 மணி கணபதி ஓமத்துடன் மண்டல பூஜை ஆரம்பமாகியது. அன்று காலை 9.24 மணி வரை நடைபெற்ற பூஜையில்,

ஆதிஸ்ரீ ஐயப்ப சேத்திரத்தில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்குமார் கௌரவிப்பு Read More »

latha walpola funeral under state sponsorship ministry announced

பூரண அரச அனுசரணையுடன் லதா வல்பொலவின் இறுதிச் சடங்கு

– சுதந்திர சதுக்கத்தில் டிசம்பர் 31 இடம்பெறவுள்ளது காலஞ் சென்ற இலங்கையின் கானக் குயில் லதா வல்பொலவின் இறுதிச் சடங்குகள், எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி, புதன்கிழமை, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில், பூரண அரச அனுசரணையில் இடம்பெறவுள்ளது. இவ்வறிவித்தலை பொதுநிர்வாகம், உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் அமைச்சு மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியன இணைந்து அறிவித்துள்ளன. பழம்பெரும் பாடகியான திருமதி லதா வல்பொல நேற்று (26) மாலை தனது 91ஆவது வயதில்

பூரண அரச அனுசரணையுடன் லதா வல்பொலவின் இறுதிச் சடங்கு Read More »

12,,28

சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நடப்பாண்டில் கடந்த 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 22 இலட்சத்து 98 ஆயிரத்து 987 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 519,816 ஆகும். மேலும், ஜெர்மனியிலிருந்து 143,999 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 178,743 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 207,510 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 105,601 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 130,452 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து

சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு! Read More »

12.28

மின்சாரம் உட்பட பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

மின்சாரம் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், எரிவாயு விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு உள்ளிட்ட பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் விதிகளுக்கமைய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் 2025 டிசம்பர் 28 ஆம் திகதியிடப்பட்ட 2468/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகை ஊடாக

மின்சாரம் உட்பட பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்! Read More »

12,,27

தங்கம் விலை அதிரடி உயர்வு!

தங்கத்தின் விலை இன்று (27) எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளது. அதனடிப்படையில் கடந்த 24 ஆம் திகதி 352,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் பவுண் ஒன்று இன்று (27) 10,000 ரூபாவால் அதிகரித்து 362,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 335,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதால், இலங்கை தங்கச் சந்தையிலும்

தங்கம் விலை அதிரடி உயர்வு! Read More »

12.27

வாகனங்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுங்கள்: அரசாங்கத்திடம் இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை

சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். குறைந்த எஞ்சின் கொள்ளளவு கொண்ட வாகனங்களின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “சாதாரண பொதுமக்கள் கொள்வனவு செய்யும் Alto, Wagon R, Yaris, Hustler போன்ற 1000cc வரம்பிற்குட்பட்ட வாகனங்களுக்கான வரியைக் குறைத்து வழங்குங்கள். ஒரு

வாகனங்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுங்கள்: அரசாங்கத்திடம் இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை Read More »