Local

img 20251229 wa0017

ஹைக்கூவில் கலப்போம்கவிகளாய் உயர்வோம்.

46ஆவது ஆண்டில் பயணிக்க தொடங்கும் புதிய அலை கலை வட்டம் அதன் இளைஞர் அணி மூலமாக மாதாந்தம் நடத்திவரும் ஹைக்கூ கவியரங்கத்தின் 8ஆவது அமர்வு வரும் 11.01.2026 அன்று நடைபெறவுள்ளது. இக் கவியரங்கிற்கு தலைமையை ஏற்கிறார் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் உப தலைவி கவிதாயினி திருமதி ஷர்மிளா பார்த்திபன். இவ் அமர்வில் கதை சொல்லுதல் மற்றும் கவிப்பயிற்சி போன்ற நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்களை அறிய விரும்புவோர் 075 4880172 […]

ஹைக்கூவில் கலப்போம்கவிகளாய் உயர்வோம். Read More »

kandy district secretariat search operation

கண்டி மாவட்ட செயலக வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது!

– பொலிஸ், இராணுவ விசேட தேடுதலில் எதுவும் சிக்கவில்லை – கணனி விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணை– வீணான பீதியை ஏற்படுத்தும் முயற்சி: பொலிஸார் தெரிவிப்பு கண்டி மாவட்ட செயலக அலுவலகத்திற்கு மின்னஞ்சல் (e-mail) ஊடாக விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, அங்கு பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (26) கண்டி மாவட்ட செயலகத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு இந்த அச்சுறுத்தல் செய்தி கிடைத்துள்ளது. அதில், செயலக வளாகத்தினுள்

கண்டி மாவட்ட செயலக வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது! Read More »

12,26

சுனாமி அனர்த்தத்தின் 21வது ஆண்டு நினைவேந்தலும் மௌன அஞ்சலியும்.

சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பாரிய சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது. இதனால் எமது நாட்டில் 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 5,000 பேர் காணாமல் போயினர். மேலும் பெருமளவிலான சொத்துக்களும் அழிவடைந்தன. அதற்கமைய, சுனாமி பேரழிவினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், 2005

சுனாமி அனர்த்தத்தின் 21வது ஆண்டு நினைவேந்தலும் மௌன அஞ்சலியும். Read More »

12.25

மலையக மக்களின் நலனுக்காக தொடர்ந்தும் நேசக்கரம் நீட்டும் இந்தியா

இ லங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர் எஸ். சுப்ரமணியம் ஜெய்சங்கரை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தவிசாளர் இராமேஸ்வரன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் மனோகணேசன், திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து விரிவான கலந்துரையாடலை நடத்தினர். சந்திப்பின் போது, இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட தித்வா அனர்த்தத்தின்போது இந்தியா வழங்கிய மனிதாபிமான

மலையக மக்களின் நலனுக்காக தொடர்ந்தும் நேசக்கரம் நீட்டும் இந்தியா Read More »

christmas message from president anura kumara dissanayake

சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம்

சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக, மிகவும் வேதனையான இயற்கை பேரழிவை எதிர்கொண்ட பிறகு உறுதியுடன் மீண்டுவரும் சந்தர்ப்பத்திலேயே இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடுகிறோம் என்பது அனைவரும் அறிந்த விடயம். அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பகிர்வு மற்றும் தியாகம் ஆகியவையே நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தங்கள்

சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் Read More »

christmas message from prime minister harini amarasuriya

ஒற்றுமை, அன்பு, பரிவுடனும் பொறுப்புடனும் ஒன்றிணைந்து செயற்பட உறுதிபூணுவோம்

– பிரதமர் ஹரிணி நத்தார் வாழ்த்துச் செய்தி குடிமக்கள் என்ற வகையில் ஒற்றுமை, அன்பு மற்றும் பரிவுணர்வுடனும் பொறுப்புடனும் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும் இந்த நத்தார் தினத்தில் உறுதிபூணுவோமென, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, டிசம்பர் மாத பிறப்புடன், கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடத் தயாராவார்கள். அமைதியின் செய்தியை ஏந்தியவராக பாலகர் இயேசுவின் பிறப்புச் செய்தி பெத்லகேம் நகரில் இருந்து உலகை

ஒற்றுமை, அன்பு, பரிவுடனும் பொறுப்புடனும் ஒன்றிணைந்து செயற்பட உறுதிபூணுவோம் Read More »

12.24a

பொலிஸ் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம்; ஐவர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் மர்ம நபர்கள் மறைந்திருந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பொலிஸார் கொல்லப்பட்டுள்ளனர் என்று மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தின், கராக் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் எரிசக்தி நிறுவனத்திற்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதைத் தொடர்ந்து இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்கள் பயணித்த வாகனத்தையும் அந்த மர்ம நபர்கள் தீயிட்டுச் சென்றததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் உடனடியாக உரிமை

பொலிஸ் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம்; ஐவர் பலி Read More »

12.24

புயல் நிவாரணப் பணிக்கு தலைமை தாங்கும் LOLC திவி சவியா

LOLC திவி சவியா ‘நீங்களும் நாமும் நம் நாடும்’ என்ற முன்முயற்சி திரும்புகிறது. மூன்று கட்ட புயல் நிவாரணப் பணிக்கு தலைமை தாங்குகிறது. இலங்கையும் அதன் மக்களும் கஷ்டமான தருணங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் முன்னேறிச் சென்று, LOLC திவி சவிய நீண்ட காலமாக இரக்கம் மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக நிற்கிறது. இன்று, இலங்கையின் வரலாற்றில் மிகக் கடுமையான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான தித்வா சூறாவளியின் பேரழிவு தாக்கத்திலிருந்து மீள தேசம் போராடி வரும் வேளையில், திவி சவிய

புயல் நிவாரணப் பணிக்கு தலைமை தாங்கும் LOLC திவி சவியா Read More »

img 20251225 wa0007

கலாமித்ரா 2026

பாடலாம் பேசலாம் போட்டிக்கு வாய்ப்பு ‘கலாமித்ரா 2026’ இனை முன்னிட்டு புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி நடத்தும் இளையோருக்கான போட்டிகள் பாடல் போட்டி :- 15 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட ஆடவர், மகளிர் யாவரும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். விரும்பிய சினிமா பாடல் ஒன்றை தேர்ந்தெடுத்து, அதற்கான karoke யை Pen Drive இல் கொண்டுவர வேண்டும். பாடல் எவ்வகையான பாடலாகவும் இருக்கலாம். அறிவிப்பாளர் போட்டி :-15 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட ஆடவர்,

கலாமித்ரா 2026 Read More »

12.23fd

டிட்வா சூறாவளியால் இலங்கையில் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் உடைமைகள் சேதம்

கடந்த நவம்பர் மாத இறுதியில் இலங்கையை தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் கட்டடங்கள், சொத்துக்கள், விவசாயம், உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட சேதத்தின் மதிப்பு சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் (USD) என உலக வங்கி குழுமத்தின் Global Rapid Post-Disaster Damage Estimation (GRADE) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேதம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) சுமார் 4 சதவீதத்திற்கு சமமானதாகும். இலங்கையின் சமீப வரலாற்றில் மிகவும் தீவிரமான மற்றும் அழிவுகரமான சூறாவளிகளில் ஒன்றாகக் கருதப்படும்

டிட்வா சூறாவளியால் இலங்கையில் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் உடைமைகள் சேதம் Read More »