Local

12.23s

திருகோணமலை, மாநகரசபையின் பட்ஜெட் ஏகமனதாக நிறைவேற்றம்

திருகோணமலை மாநகரசபையின் முதல்வர் க.செல்வராஜாவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டிற்கான பாதீடு சபை உறுப்பினர்களினால் இன்று (23) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. திருகோணமலை மாநகரசபையின் முதலாவது பாதீடு சபையின் முதல்வர் க.செல்வராஜா, மாநகர ஆணையாளர் உ.சிவராசா மற்றும் செயலாளர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்று (23) காலை இடம்பெற்றது. இதன்போது தமிழரசுக் கட்சி உறுப்பினர் அஜித் குமார் பாதீட்டை முன்மொழிய தமிழரசுக் கட்சி உறுப்பினர் குமார குலசிங்கம் வழிமொழிய அதனை சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. 25 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் […]

திருகோணமலை, மாநகரசபையின் பட்ஜெட் ஏகமனதாக நிறைவேற்றம் Read More »

12.23 a

அனர்த்தத்தின் பின்னரான இலங்கையின் மறுசீரமைப்பு முயற்சிகள் குறித்து விசேட கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சிறப்புப் பிரதிநிதியாக இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும், பிரதமர் ஹரிணி அமரசூசூசூரியவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று ((23)  அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன் ​போது இலங்கை முகங்கொடுத்த இயற்கை அனர்த்தத்தின் பின்னரான மீள்நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து இச்சந்திப்பின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்களைப் புனரமைத்தல், விவசாயத் துறையைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட முக்கியமான துறைகளுக்கு ஆதரவளிக்க இந்தியா

அனர்த்தத்தின் பின்னரான இலங்கையின் மறுசீரமைப்பு முயற்சிகள் குறித்து விசேட கலந்துரையாடல் Read More »

12.23

நாட்டில் தங்கத்தின் விலை ரூ, 7,000 இனால் அதிகரிப்பு

– 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ, 325,600– 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ. 352,000 உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று (23) உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன் முறையாக 4,485 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (23) நாட்டில் தங்கத்தின் விலை சுமார் ரூ, 7,000 இனால்

நாட்டில் தங்கத்தின் விலை ரூ, 7,000 இனால் அதிகரிப்பு Read More »

moter bike

யாழில் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் விபத்தில் பலி

தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணித்த 2 இளைஞர்கள் மற்றுமொறு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் , ஒரு இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் , நால்வர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் , புத்தூர் பகுதியில் நேற்று (21) இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் தலைக்கவசம் இன்றி மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வீதி வளைவில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்ட வேளை மோட்டார்

யாழில் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் விபத்தில் பலி Read More »

12,22

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது இன்று (22) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி Read More »

12.21

அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ. 25,000 69.56% சதவீதமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது

‘டிட்வா’ புயலுக்கு பின்னர் குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்கும் வீடுகளை சீரமைப்பதற்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ. 25,000 கொடுப்பனவானது, பாதிக்கப்பட்ட மக்களில் 69.56% சதவீதமானோருக்கு வழங்கப்பட்டு நிறைவடைந்துள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட 642,375 வீடுகளில், கொடுப்பனவு வழங்கப்பட வேண்டிய தகுதியான வீடுகளாக 469,457 வீடுகள் கணக்கிடப்பட்டுள்ளன. இவற்றில் 299,513 வீடுகளுக்கு இதுவரை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று காலை நிலவரப்படி இன்னும் 169,944 வீடுகளுக்கு கொடுப்பனவு

அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ. 25,000 69.56% சதவீதமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது Read More »

12.21 a

A/L இல் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் ஜனாதிபதி நிதியத்தினால் கௌரவிப்பு

– 274 மாணவர்களுக்கு தலா ரூ. 100,000 வழங்கி வைப்பு ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 A/L பரீட்சையில் மாவட்ட அளவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் வட மாகாண நிகழ்ச்சித்திட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று (21) முற்பகல் கிளிநொச்சி நெலும் பியச வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களைச் சேர்ந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயர் சித்தி பெற்ற 274 மாணவர்கள்

A/L இல் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் ஜனாதிபதி நிதியத்தினால் கௌரவிப்பு Read More »

12. 20a

பாதுகாப்பான பகுதிகளில் மக்களை  மீள்குடியேற்றம் செய்வதே எமது கொள்கை

பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான ரூ. 500 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீடு நேற்று (19) பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை பின்வருமாறு: அண்மைய வரலாற்றில் நாங்கள் முன்வைத்த பாரிய தொகை குறைநிரப்பு பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட விவாதத்திற்குப் பிறகு, 05 ஆம் திகதி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட ஆவணத்தை இந்த

பாதுகாப்பான பகுதிகளில் மக்களை  மீள்குடியேற்றம் செய்வதே எமது கொள்கை Read More »

12,20

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற ஊழியர்களுக்கும் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 நாட்கள் விடுமுறையும், பாராளுமன்ற ஊழியர்களுக்கு மேலும் 2 நாட்கள் விசேட விடுமுறையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவருவதற்கான குறைநிரப்பு மதிப்பீடு நேற்று முன் தினம் (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நேற்று இது தொடர்பான விவாதம் இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்த குறைநிரப்பு மதிப்பீடு அங்கீகரிக்கப்பட்டது. அதனையடுத்து, ஜனவரி 06 ஆம் திகதி காலை 9.30

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை Read More »

12. 19 a

மகாவலி கங்கையின் வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

– நாளை (20) மாலை 5.30 மணி வரை அமுலில் மகாவலி கங்கை வடிநிலத்திற்காக விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, இந்த வௌ்ள அபாய முன் எச்சரிக்கை நாளை (20) மாலை 5.30 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாவலி கங்கையின் சில நீரேந்து பகுதிகளில் பெய்த மழை மற்றும் மேல்ப் பகுதியிலுள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் திறந்து விடப்பட்டமை காரணமாகச் சிறிய அளவிலான

மகாவலி கங்கையின் வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு Read More »