Local

12 .19

அனர்த்தத்தினால் சேதமடைந்த தொல்பொருள் தளங்களை புனரமைக்க நடவடிக்கை

– அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அனைத்து மதத் தலைவர்களும் பாராட்டு டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட நாட்டில் உள்ள மத, கலாசார மற்றும் தொல்பொருள் தளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனரமைப்பு பணிகள் குறித்த கலந்துரையாடல் நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தலைமையில் 3 நிகாயாக்களின் மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத, கலாசார மற்றும் […]

அனர்த்தத்தினால் சேதமடைந்த தொல்பொருள் தளங்களை புனரமைக்க நடவடிக்கை Read More »

12.18 a

முதியோருக்கான டிசம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவு  வங்கிகளுக்கு

முதியவர்களுக்கான டிசம்பர் மாத அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அந்த வகையில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களின் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான டிசம்பர் மாதக் கொடுப்பனவே வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. அதற்கிணங்க இன்று (18) முதல் அஸ்வெசும வங்கிக் கணக்குகளின் ஊடாக குறித்தபயனாளிகள் தமக்கான இந்த கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என அச்சபை  குறிப்பிட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்தில்

முதியோருக்கான டிசம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவு  வங்கிகளுக்கு Read More »

12.18

மகாவலி ஆற்றின் தாழ்நில பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

நிலவும் மழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல, ரந்தம்பே ஆகிய நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே வான் பாய ஆரம்பித்துள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதால், அதனை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அந்த அதிகாரசபை அறிவித்துள்ளது. மேலும், கலாவெவ வடிநிலத்திற்குட்பட்ட கலாவெவ மற்றும் கந்தளாய் நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே வான் பாய்ந்து வருவதாகவும், போவதென்ன, இப்பன்கட்டுவ, மொரகஹகந்த மற்றும் களு கங்கை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகபட்ச மட்டத்தில்

மகாவலி ஆற்றின் தாழ்நில பகுதி மக்களுக்கு எச்சரிக்கை Read More »

fb img 1766043611187

பொற்கால கல்விச் சாதனையின் சின்னம் நஜிமுதீன் இல்முல் ஹஸ்லா – ருஹுனு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இரட்டை தங்கப் பதக்கம் !

“Econ Icon – Season 4” போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்று கல்வி உலகின் கவனத்தை ஈர்த்த தென் மாகாண நஜிமுதீன் இல்முல் ஹஸ்லா, அதனைத் தொடர்ந்து ருஹுனு பல்கலைக்கழகத்தில் ஒரு மிகப் பெரிய கல்விச் சாதனையை பதிவு செய்து, மீண்டும் கல்வித் துறையில் பொற்கால மைல்கல்லை பதித்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் ருஹுனு பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக இளமானி (சிறப்பு) பட்டப்படிப்பில் கல்வி பயிலும் நூற்றுக்கணக்கான திறமைமிக்க மாணவர்களுக்கிடையே, கடுமையான போட்டி மற்றும் கடினமான மதிப்பீட்டு

பொற்கால கல்விச் சாதனையின் சின்னம் நஜிமுதீன் இல்முல் ஹஸ்லா – ருஹுனு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இரட்டை தங்கப் பதக்கம் ! Read More »

12.17 a

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் சம்பளப் பிரச்சினை பிரதமரின் கவனத்திற்கு

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (16) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. மொழிபெயர்ப்பாளர் சேவையில் நிலவும் சம்பளப் பிரச்சினை, தரங்களுக்கு இடையிலான சம்பள முரண்பாடுகள் மற்றும் வெற்றிடங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது. கடந்த கால அரசாங்கங்கள் அரச சேவையின் சம்பள உயர்வுகளை முறையான அல்லது தர்க்கரீதியான வழிமுறைகளின்றி மேற்கொண்டதன் காரணமாகவே

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் சம்பளப் பிரச்சினை பிரதமரின் கவனத்திற்கு Read More »

12.17

மஹர, கம்பஹா பிரதேசங்களுக்கு இன்று 15 மணித்தியால நீர்வெட்டு!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகாரப் பிரதேசங்களில் இன்று (17) 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மத்திய அதிவேக வீதி நிர்மாணப் பணிகளுடன் தொடர்புடைய நீர் குழாய்களை இடமாற்றும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது. இதன்படி, இன்று (17) மாலை 4.00 மணி முதல் நாளை (18) காலை 7.00 மணி வரை இப்பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என

மஹர, கம்பஹா பிரதேசங்களுக்கு இன்று 15 மணித்தியால நீர்வெட்டு! Read More »

12.16

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு, திருமண பதிவுசான்றிதழ்கள் அழிவு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களை வழங்குவதற்கான நடமாடும் சேவைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஜனவரி இறுதிக்குள் அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிவாளர் நாயகம் திருமதி சசிதேவி ஜலதீபன் தெரிவித்துள்ளார். அண்மைய இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சுமார் 2.2 மில்லியன் மக்களில் அரைவாசிக்கும்  மேற்பட்டோர்

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு, திருமண பதிவுசான்றிதழ்கள் அழிவு Read More »

12.15

ஊவா மாகாண பாடசாலைகளை 2 கட்டங்களாக மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

டிட்வா புயலுடன் நாட்டுக்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ரோஹித அமரதாச தெரிவித்தார். ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர், இரண்டு திகதிகளின் கீழ் ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அதற்கமைய, கடுமையாக அனர்த்தத்திற்கு உள்ளான பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் நாளை (16) ஆம் திகதியும், பாதிக்கப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 29 ஆம்

ஊவா மாகாண பாடசாலைகளை 2 கட்டங்களாக மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை Read More »

13 6 1

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்பிக்கும் சூழலை உருவாக்குவது அவசியம்

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் மாணவர்கள் சீருடைகளையோ கற்றல் உபகரணங்களையோ இழந்திருந்தால் அதனைப் பொருட்படுத்தாது அவர்களுக்கு கற்றலுக்குத் தேவையான சூழலை ஏற்படுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். நுவரெலியா மாவட்ட கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கான கூட்டம் நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நேற்று முன்தினம் (13) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை செல்ல முடியாத

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்பிக்கும் சூழலை உருவாக்குவது அவசியம் Read More »

mannar district dcc meeting under president anura kumara

மீன்பிடியில் ஈடுபட முடியாத குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கான உலர் உணவுகள்

மீனவ சமூகத்தின் உரிமைகள் மீறப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது என்றும், நிலம் மற்றும் கடல் இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கம் செயல்படுகின்றது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள மீனவ சமூகங்கள் தமது தொழிலை மேற்கொள்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார் மன்னார் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை புனரமைப்பதற்கும் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை

மீன்பிடியில் ஈடுபட முடியாத குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கான உலர் உணவுகள் Read More »