திருகோணமலை, மாநகரசபையின் பட்ஜெட் ஏகமனதாக நிறைவேற்றம்

12.23s

திருகோணமலை மாநகரசபையின் முதல்வர் க.செல்வராஜாவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டிற்கான பாதீடு சபை உறுப்பினர்களினால் இன்று (23) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

திருகோணமலை மாநகரசபையின் முதலாவது பாதீடு சபையின் முதல்வர் க.செல்வராஜா, மாநகர ஆணையாளர் உ.சிவராசா மற்றும் செயலாளர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்று (23) காலை இடம்பெற்றது.

இதன்போது தமிழரசுக் கட்சி உறுப்பினர் அஜித் குமார் பாதீட்டை முன்மொழிய தமிழரசுக் கட்சி உறுப்பினர் குமார குலசிங்கம் வழிமொழிய அதனை சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.

25 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் இன்று 20 பேர் பங்கு கொண்டிருந்ததுடன் 5 பேர் சபைக்கு சமூகமளிக்கவில்லை.

இதில் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டிருக்கவில்லை. சுகவீனம் காரணமாகவும், தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாகவும் அவர்கள் கலந்து கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.