World

sep27

வடமேற்கு சீனாவில் நிலநடுக்கம்: 7 பேர் காயம், வீடுகள் சேதம்!

சீனாவின், கான்சு மாகாணத்தின், லாங்ஸி மாவட்டத்தில் இன்று (27) அதிகாலை 5.49 மணியளவில் 5.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந் நிலநடுக்கத்தின்போது கட்டிட மேற்கூரை ஓடுகள் இடிந்து விழுந்ததில் 7 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் எட்டு வீடுகள் இதன்போது இடிந்து விழுந்துள்ளதோடு, 100 இற்கும் அதிமான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 43 முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமேற்கு சீனாவில் நிலநடுக்கம்: 7 பேர் காயம், வீடுகள் சேதம்! Read More »

sep23

பிரான்ஸ் உள்ளிட்ட மேலும் பல ஐரோப்பிய நாடுகளும் பலஸ்தீனத்திற்கு அங்கீகாரம்

– இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களில் காசாவில் மேலும் 61 பேர் பலி பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியாவை அடுத்து பிரான்ஸ் உட்பட மேலும் பல நாடுகளும் பலஸ்தீன தனி நாட்டை அங்கீகரித்தபோதும் காசாவில் இஸ்ரேலின் பயங்கர தாக்குதல்கள் தொடர்வதோடு, காசா நகர் தரைமட்டமாக்கப்பட்டு வரும் நிலையில் அங்குள்ள மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். ஐ.நா. பொதுக் குழு கூட்டத்தையொட்டி முன்னெடுக்கப்படும் இராஜதந்திர முயற்சிகள் இஸ்ரேலின் தாக்குதல்களை தணிக்காத நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் குறைந்தது 61

பிரான்ஸ் உள்ளிட்ட மேலும் பல ஐரோப்பிய நாடுகளும் பலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் Read More »

sep21

H-1B விசா விவகாரம்: அமெரிக்காவில் படிப்பை முடிக்கும் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டது. இந்த புதிய உத்தரவு இன்று (செப்டம்பர் 21) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது

H-1B விசா விவகாரம்: அமெரிக்காவில் படிப்பை முடிக்கும் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு Read More »

sept19

ஆப்கானில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு தலிபான் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஒழுக்கக் கேட்டைத் தவிர்க்கும் முயற்சி எனக் கூறி ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு தடை விதித்திருப்பதாக தலிபான் அரசு கூறியுள்ளது. இதன் விளைவாக ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்களில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கடந்த 2021 இல், அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து ஆட்சி அமைத்த தலிபான்கள், முதன்முறையாக இப்படியொரு தடையை விதித்துள்ளனர். இதனால், ஆப்கானிஸ்தானின் அரசு அலுவலகங்கள்,

ஆப்கானில் இணைய சேவைக்கு தடை Read More »

sept17

இலங்கை – மலேசிய வணிக கவுன்சில் பொதுக் கூட்டம்

இலங்கை- மலேசிய வணிக கவுன்சில் தனது 31 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தை Hilton Colombo Residence இல்லத்தில் நடத்தியது. இந்த நிகழ்வு கவுன்சிலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இது 2025– – 2026 காலகட்டத்திற்கு அமைப்பை வழிநடத்தும் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் குறிக்கப்பட்டது. அமானா வங்கி PLC இன் ஆதரவற்றோர் பராமரிப்பு துணைத் தலைவர் மர்ஷாத் பாரி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் Ganlath Timber and Transport Services சிரேஷ்ட துணைத் தலைவர் டோனி

இலங்கை – மலேசிய வணிக கவுன்சில் பொதுக் கூட்டம் Read More »

sep17

ஆங்கில சொற்களுக்கு தடை விதித்த வடகொரியா

Hamburger, Ice cream, Karaoke உள்ளிட்ட ஆங்கில சொற்களை பயன்படுத்த வடகொரிய அரசு தடை விதித்துள்ளது. சொற்கள் பயன்பாட்டில் மேற்கத்திய நாடுகள் மற்றும் தென் கொரியாவின் தாக்கத்தைத் தவிர்த்து, அதற்கு இணையான அரசு அங்கீகரித்த சொற்களை பயன்படுத்த சுற்றுலாத் தலங்களுக்கு வடகொரியா உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து சுற்றுலா தலங்களில் வேலை பார்க்கும் வழிகாட்டிகள் 3 மாத பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா வழிகாட்டிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பேசும்போது கூட ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என்று தடை

ஆங்கில சொற்களுக்கு தடை விதித்த வடகொரியா Read More »

sep15

நேபாள இடைக்கால அரசில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

நேபாள இடைக்காலப் பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் மூன்று பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றுள்ளனர். எரிசக்தி, நீர்வளம் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக குல்மான் கிசிங்கும், உள்துறை மற்றும் சட்ட அமைச்சராக ஓம் பிரகாஷ் ஆர்யலும், நிதி அமைச்சராக ரமேஷோர் கானலும் இவ்வாறு அமைச்சர்களாக சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுள்ளனர். புதிய அமைச்சராகப் பொறுப்பேற்ற குல்மான் கிசிங் ஏற்கனவே நேபாள மின்சார அதிகார சபையின் நிர்வாகப் பணிப்பாளராக இருந்தவராவார். மின்சார அதிகார சபைக்கு அதிக வருவாய்

நேபாள இடைக்கால அரசில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு Read More »

sept13

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐ.நாவின் தீர்மானம்

– ஆதரவாக 142 நாடுகள்; எதிராக 10 நாடுகள் வாக்களிப்பு பாலஸ்தீனப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது குறித்த ‘நியூயோர்க் பிரகடனத்தை’ ஆதரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா வாக்களித்தது. பிரான்ஸ் அறிமுகப்படுத்திய இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 142 நாடுகள் வாக்களித்தன, எதிராக 10 நாடுகள் வாக்களித்தன, 12 நாடுகள் வாக்களிக்கவில்லை. இத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தவர்களில் அர்ஜென்டினா, ஹங்கேரி, இஸ்ரேல்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐ.நாவின் தீர்மானம் Read More »

sept12

நேபாள இடைக்கால அரசை வழிநடத்தவுள்ள முதல் பெண் நீதிபதி!

போராட்டத்தால் சிதைந்து போன நேபாளத்தில் இடைக்கால அரசை வழிநடத்த நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி சுசீலா கார்கி அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைவராக இன்று (10) தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேபாள அரசாங்கத்தால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கட்கிழமை பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் மற்றும் அரசின் பிற நடவடிக்கைகள் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் கலவரமாக

நேபாள இடைக்கால அரசை வழிநடத்தவுள்ள முதல் பெண் நீதிபதி! Read More »

sep10

அறிமுகமாகிறது iPhone 17

ஆப்பிள் நிறுவனம் இன்று (10) நடைபெற்ற வருடாந்திர நிகழ்வில் புதிய ஐபோன் மாடல்களை வெளியிட்டு உள்ளன. ஐபோன் 17 (iPhone 17) சீரிஸில் மொத்தம் நான்கு மாடல்கள் வெளியிடப்பட்டன. இந்த மாடல் போன்கள் எப்போது முதல் கிடைக்கும்? இந்தியாவில் அதன் விலை என்ன? என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம். உலகின் முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் உள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்கள் என பல்வேறு

அறிமுகமாகிறது iPhone 17 Read More »