Local

sept10

சபாநாயகர் தலைமையில் பல்கலைக்கழங்களின் 15ஆவது விளையாட்டு விழா

அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குபற்றும் பல்கலைக்கழங்களின் 15ஆவது விளையாட்டு விழா கடந்த 04 ஆம் திகதி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன மற்றும் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக உப வேந்தர்கள், விரிவுரையாளர்கள், பிரதேச அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சபாநாயகர் தலைமையில் பல்கலைக்கழங்களின் 15ஆவது விளையாட்டு விழா Read More »

sept9

புலமைப்பரிசில் பரீட்சை; மீள் பரிசீலனைக்கான விண்ணப்பம் கோரல்

– இன்று முதல் செப். 22 வரை ஏற்றுக்கொள்ளப்படும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் செப். 09 முதல் 22 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்தி பயிலும் பாடசாலையின் அதிபரினால், பாடசாலைக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/ என்ற இணையத்தளத்தில் SCHOOL LOGIN இல் உள்நுழைந்து மீள்பரிசீலனைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை; மீள் பரிசீலனைக்கான விண்ணப்பம் கோரல் Read More »

sept7

எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடியுடன் மழை

 –மிரிஸ்ஸ, கம்புருகமுவ, மாத்தறை, தெவுந்தர, கந்தர, தலல்லவுக்கு சூரியன் உச்சம் – மனித உடல் உணரும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்பு– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (07) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களின் பல இடங்களில்

எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடியுடன் மழை Read More »

sep7

மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை

நாளை முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் ஆபத்தான வகையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதியமைச்சர் வைத்தியர் பிரியந்த குணசேன தெரிவித்துள்ளார். பல்வேறு ஒலிகளுடன், பல வண்ணங்களில் நின்று நின்று ஔிரும் மின் விளக்குகளுடன் பயணிக்கும் வாகனங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தமது பேஸ்புக் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வியாழக்கிழமை எல்ல-வெல்லவாய வீதியின் 24ஆவது

மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை Read More »

sept6

இலங்கையர்களுக்கு ‘இரத்த நிலவை’ காணும் அரிய வாய்ப்பு நாளை

நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணம் ‘இரத்த நிலவை’ காணும் அரிய வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ளது. நாளை (07) மற்றும் நாளை மறுதினம் (08) கண்கவர் ‘இரத்த நிலவை’ காணும் அரிய வாய்ப்பு இலங்கையர்களுக்குக் கிடைக்கும். கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைத் தலைவரும், ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜெயரத்ன இந்த தகவலைத் தெரிவித்தார். முழு சந்திர கிரகணம் நிகழும்போது, பூமி சரியாகச் சூரியனுக்கும் முழு நிலவுக்கும் இடையே வரும். இதனால்,

இலங்கையர்களுக்கு ‘இரத்த நிலவை’ காணும் அரிய வாய்ப்பு நாளை Read More »

sept5

மருத்துவ கழிவுகளை எரியூட்டும் பாதுகாப்பு கட்டமைப்பு திறந்து வைப்பு

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட,மருத்துவ கழிவுகளை எரியூட்டும் பாதுகாப்பு கட்டமைப்பு, இன்று (05) சுகாதாரத்துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. தொற்று கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்தும் நோக்குடன், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (ஜெய்க்கா) வழங்கிய நிதி அனுசரணையில் இவ் எரியூட்டி கட்டமைப்பு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர்,வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை பிரதி அமைச்சர், மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சுகாதாரத்துறை

மருத்துவ கழிவுகளை எரியூட்டும் பாதுகாப்பு கட்டமைப்பு திறந்து வைப்பு Read More »

school childrens 800x445

பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் 

2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாவது பாடசாலைத் தவணை கடந்த 7 ஆம் திகதி நிறைவடைந்தது.  இதன்படி, குறித்த பாடசாலைகளின் 3 ஆம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை (18) ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.  இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும்.

பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்  Read More »

whatsapp image 2025 08 16 at 5.45.12 pm 1 800x445

தென்கிழக்கு பல்கலையில் கல்முனை ஜிப்ரியின் சாதனை.!

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைகழகத்தின் பொறியியல் பீடத்தில் சிவில் பொறியியல் பிரிவின் தொழில்நுட்ப உத்தியோகத்தராகப் பணிபுரியும் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எம்.எம். ஜிப்ரி பொறியியல் பாடங்களுக்களுக்கான ஆய்வகப் பயிற்சியில் முக்கிய பங்கு வகிக்கும் பீம் வளைவு விலகல் அளவீட்டுக் கருவி ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.இவரின் இப்புதிய படைப்பானது பலகலைக்கழக வரலாற்றில் பொறியியல் துறையில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுவதுடன் பல மில்லியன் ரூபாய் பெறுமதி வாய்ந்த இவ்வுகரணம் உள்நாட்டு மூலதனங்களைக் கொண்டு அறிவு நுட்பத்தினூடாக குறைந்த செலவில் உருவாக்கப்பட்டிருப்பது

தென்கிழக்கு பல்கலையில் கல்முனை ஜிப்ரியின் சாதனை.! Read More »

1000907612 800x445

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப செயற்திட்டமொன்றை வகுத்து, கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்ளும் நோக்கத்துடன், பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களை கல்வித் துறையில் ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வ ஆலோசனை சபை உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு புதன்கிழமை (13) காலை கல்வி அமைச்சு வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது. ஒவ்வொரு அமைச்சருக்கும்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தன்னார்வ ஆலோசனை சபை நியமனம் Read More »

001 800x445

மன்னார் காற்றாலை மின் திட்டப் பணிகள் ஒத்திவைப்பு

மன்னார் பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 13.08.2025 புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போது, நாட்டின் எரிசக்தித் தேவைகள் மற்றும் பொருளாதாரத்திற்கு இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தால் இப்பகுதி மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதற்கான ஒரு கட்டமைப்பை நிறுவுவது என்றும்,

மன்னார் காற்றாலை மின் திட்டப் பணிகள் ஒத்திவைப்பு Read More »