Local

sept21

ஜனாதிபதி அநுர நாளை அமெரிக்காவுக்கு பயணம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (22) ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க நோக்கி புறப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம் எதிர்வரும் புதன்கிழமை (24) அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு […]

ஜனாதிபதி அநுர நாளை அமெரிக்காவுக்கு பயணம் Read More »

sept20

2025 (2026) O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

– ஒக்டோபர் 09ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் 2025 (2026) O/L பரீட்சைக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் ஒக்டோபர் 0 9 ஆம் திகதி வரை இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது . அதன்படி, பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களைப் பாடசாலை அதிபர்கள் மூலமாகவும், தனியார் விண்ணப்பதாரர்கள் இணையவழி மூலமாகவும் சமர்ப்பிக்க முடியும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. தனியார் விண்ணப்பதாரர்கள்  பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்போது தமது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்த

2025 (2026) O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் Read More »

sep20

புறக்கோட்டையில் தீ விபத்து; 12 தீயணைப்பு வாகனங்கள், ஹெலிகொப்டர் களத்தில்

கொழும்பு, புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (20) மாலை தீ அனர்த்தம் ஒன்று ஏற்பட்டது. தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்திற்கு சொந்தமான 2 பெல் ரக ஹெலிகொப்டர்கள் மற்றும் கொழும்பு மாநகர சபையின் 12 தீயணைப்பு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள 5 மாடிக் கட்டடமொன்றில் மூன்றாம் மாடியில் உள்ள மின் உபகரண வர்த்தக நிலையத்திலேயே இந்த தீ அனர்த்தம் ஏற்பட்டதுடன் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு

புறக்கோட்டையில் தீ விபத்து; 12 தீயணைப்பு வாகனங்கள், ஹெலிகொப்டர் களத்தில் Read More »

sep19

நாட்டின் மின்தேவையின் 12 வீதத்தை பூர்த்தி செய்யும் சொபாதனவி திட்டம்

இரண்டாம் கட்டம் பிரதமரால் ஆரம்பம் எமது நாட்டின் தொழில்முறை நிபுணர்கள் நிலைநாட்டியுள்ள சாதனை நாட்டின் ஆற்றல்துறையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான நோக்கில் கட்டியெழுப்பப்பட்ட 350 மெகாவாட் திறன் கொண்ட கெரவலப்பிட்டிய Sobadanavi திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மின்நிலையத்தின் இரண்டாம் கட்டம் நேற்றுமுன்தினம் (17) திறந்து வைக்கப்பட்டது. இத்திறப்புவிழா பிரதமர் திருமதி ஹரிணி அமரசூரிய, மின்சார மற்றும் வலுசக்தி அமைச்சர் பொறியாளர் குமார் ஜெயக்கொடி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இத்திட்டமானது நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றும் முக்கிய

நாட்டின் மின்தேவையின் 12 வீதத்தை பூர்த்தி செய்யும் சொபாதனவி திட்டம் Read More »

sept18

கொழும்பில் திட்டமிடப்பட்டிருந்த நீர் வெட்டு இடைநிறுத்தம்

– தேசிய நீர் வழங்கல் அதிகார சபை அறிவிப்பு கொழும்பின் பல பகுதிகளில் இன்று (18) 9 மணி நேரம் திட்டமிடப்பட்டிருந்த  நீர் விநியோகத் தடை  இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது. அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தண்ணீரைப் பெறும் பிரதான உள்ளீட்டு பம்பிங் நிலையத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீர் விநியோகம் தடைப்பட்டது. அதற்கமைய  இன்று முற்பகல் 10.00 மணி

கொழும்பில் திட்டமிடப்பட்டிருந்த நீர் வெட்டு இடைநிறுத்தம் Read More »

sept16

மீனவருக்கான ஓய்வூதிய திட்டம் நவம்பர் 21 முதல்

கடற்றொழில் கூட்டுத்தாபனம் எக்காரணம் கொண்டும் மூடப்படாது சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு விசேட ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இத்திட்டம் எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படுமென கடற்றொழில் பிரதியமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார். அதேவேளை, நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் கூட்டுத்தாபனம் தற்போது இலாபமீட்டி வருவதால் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை மூட வேண்டிய அவசியம் கிடையாது என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தை நாம், பொறுப்பேற்கும்போது கடற்றொழில்  கூட்டுத்தாபனம் 1700 மில்லியன் ரூபா

மீனவருக்கான ஓய்வூதிய திட்டம் நவம்பர் 21 முதல் Read More »

sep16

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம்

– கடிதங்களைச் செயலாக்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கலாம் அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாகவும் வினைத்திறனானதாகவும் மாற்ற டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வைத்தியர் சந்தன அபேரத்ன கூறுகையில், தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி புதிய பாதைக்கு கொண்டு செல்வதுதான் எனத் தெரிவித்தார். பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டு அலுவல்கள் பிரிவின் பொது அதிகாரிகளுக்கான டிஜிட்டல் கையொப்பங்களை அங்கீகரிக்கும்

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம் Read More »

sep14

60 வருடங்களின் பின்னர் மறுசீரமைக்கப்படும் புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடம்

– ரூ. 424 மில்லியன் செலவில் 10 மாதங்களுக்கு அபிவிருத்திப் பணிகள் புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடத்தின் மறுசீரமைப்புப் பணிகள் நாளை (15) ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகவுள்ளன. கடந்த 60 வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தியை காணாமல் இருந்த இந்த பஸ் தரிப்பிடத்தில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நவீன பஸ் தரிப்பிடமாக இதனை மாற்றியமைக்கும் வகையில் புறக்கோட்டை பிரதான பஸ் தரிப்பிடம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கென ரூ. 424 மில்லியன் செலவிடப்படவுள்ளது. 10

60 வருடங்களின் பின்னர் மறுசீரமைக்கப்படும் புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடம் Read More »

sep13

77 வருடங்களில் செய்யாத வேலையினை 1 வருடத்தினுள் செய்திருக்கின்றோம்

77 வருடங்களில் செய்யாத வேலையினை 1 வருடத்தினுள் செய்திருக்கின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்தார். இதேநேரம் நாட்டை சூறையாடியவர்கள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக கைது செய்யப்படுகின்றனர். ஜனாதிபதி சொன்னதை செய்கின்ற தலைவராக மிளிர்ந்து வருகின்றார். அவர் நாட்டு மக்களுக்கு கூறிய உறுதிமொழியினை நிறைவேற்றி வருகின்றார். எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்தாலும் ஆட்சியினை மாற்ற முடியாது. மக்கள் இப்போது எமது அரசாங்கத்தில்

77 வருடங்களில் செய்யாத வேலையினை 1 வருடத்தினுள் செய்திருக்கின்றோம் Read More »

sept11

மன்னார் வைத்தியசாலை புனரமைப்புக்கு 600 மில்லியன்

– இந்தியா, இலங்கையிடையில் ஒப்பந்தம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அறுநூறு மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது.மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்தல், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணித்தல் போன்ற வேலைத் திட்டங்கள் இவ்வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளன.இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க ஆகியோர் கையெழுத்திட்டனர்.இந்நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது.விபத்துச் சிகிச்சைக்காக இரண்டு மாடிக் கட்டடம் மற்றும் அவசர பிரிவுக்குத்

மன்னார் வைத்தியசாலை புனரமைப்புக்கு 600 மில்லியன் Read More »