மன்னார் வைத்தியசாலை புனரமைப்புக்கு 600 மில்லியன்

sept11

– இந்தியா, இலங்கையிடையில் ஒப்பந்தம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அறுநூறு மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது.மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்தல், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணித்தல் போன்ற வேலைத் திட்டங்கள் இவ்வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளன.இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தில் நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க ஆகியோர் கையெழுத்திட்டனர்.இந்நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது.விபத்துச் சிகிச்சைக்காக இரண்டு மாடிக் கட்டடம் மற்றும் அவசர பிரிவுக்குத் தேவைான உபகரணங்கள் என்பனவும் இந்நிதியில் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இரு நாடுகளுக்குமிடையிலான இந்த ஒப்பந்தம் நாட்டின் சுகாதாரத்துறையில் இந்தியாவின் ஒத்துழைப்பு பட்டியலை விஸ்தரித்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.