திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட,மருத்துவ கழிவுகளை எரியூட்டும் பாதுகாப்பு கட்டமைப்பு, இன்று (05) சுகாதாரத்துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
தொற்று கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்தும் நோக்குடன், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (ஜெய்க்கா) வழங்கிய நிதி அனுசரணையில் இவ் எரியூட்டி கட்டமைப்பு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர்,வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை பிரதி அமைச்சர், மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கு பங்குபற்றினர்.
புதிய எரியூட்டி அமைக்கப்பட்டதன் மூலம், வைத்தியசாலைக்கு மிக நீண்டகாலத் தேவையாக இருந்த, மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றுவதற்கான எரியூட்டி தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.


